Thursday, September 23, 2010

உலகிலேயே வயது கூடிய நாய்! (பட இணைப்பு)

  உலகிலேயே வயது கூடியது தனது செல்லப் பிராணியென்றும் அதற்கு தற்போது 22 வயதெனவும் அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த இதன் எஜமானருடன் 'பிலி' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த நாய் வாழ்ந்து வருகிறது. 

சராசரியாக நாயொன்றின் ஆயுட்காலம் சுமார் 15 வருடங்கள் மட்டுமே. ஆனால் இதன் வயதோ 22 ஐத் தொட்டுள்ளது. மனித வயதுடன் ஒப்பிடும் போது இது சுமார் 154 வருடங்களுக்குச் சமமாகும்.

இதன் ஒரு கண் தற்போது குருடாகியுள்ளது. மேலும் சில பற்களே அதற்கு எஞ்சியுள்ளன.

அது இதனைவிட வயது குறைந்த நாய்களை விட ஆரோக்கியமாக இருப்பதாகவும் . தினமும் 2 வேளை தன்னுடன் நடைப்பயிற்சிக்கு வருவதாகவும் அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இது தற்போது அதன் 2ஆவது உரிமையாளருடனேயே இருக்கின்றது. அதன் முதல் உரிமையாளர் இறந்த பிறகு, தற்போதைய உரிமையாளர் காப்பகம் ஒன்றிலிருந்து இதனைப் பெற்றுள்ளார்.

அதன் முதல் உரிமையாளர் இந்நாயை 1988 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.



பிளக்பெரியின் 'பிளக் பேட்'

பிளக்பெரி கைத்தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எம் எனப்படும் 'ரீசேர்ச்' இன் மோசன் தனது டெப்லட் ரக கணனியை அடுத்த வாரளமளவில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இது 'பிளக் பேட்' என பெயரிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய மேற்படி கணினியானது முற்றும் புதியதொரு இயங்குதளத்தினை கொண்டு இயங்கவுள்ளது.

இவ் இயங்குதளமானது ஃக்வ்.என்.எக்ஸ் மென்பொருளாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

7 அங்குல தொடுதிரை, 2 கெமராக்கள், புளூடூத், புரோட்பேன்ட், 1 ஜிகா ஹேர்ட்ஸ் புரசஸர் என்பனவற்றை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தின் 'டெப்லட்' ரக கணினியான ஐபேட் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

சம்சுங், டொஷிபா மற்றும் எச்பி நிறுவனங்கள் தங்கள் டெப்லட் ரக கணினியை வெளியிடவுள்ளன.

இதன் காரணமாக டெப்லட் கணினிச் சந்தையில் கடும் போட்டி நிலவும் என எதிப்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இது தொடர்பாக ஆர்.ஐ.எம் கருத்தெதையும் தெரிவிக்கவில்லை.

7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் : மும்பை பேராசிரியர் தகவல்

  நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் என மும்பை ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் 'நானோ எலக்ட்ரோனிக்ஸ்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்க வந்திருந்த போதே பேராசிரியர் ராம்கோபால் ராவ் மேற்கண்ட தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் பெரும்பாலானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் உடனே சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும். 

தற்போதுள்ள கருவிகளை வைத்து நெஞ்சு வலி வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பதை அறிய 4 மணி நேரம் ஆகிறது.

ஆனால் 'நானோ' தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சிறிய 'சிப்பை'ப் பொருத்திய கருவி மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பை கண்டறிந்து விடலாம். மும்பை ஐஐடி உதவியுடன் இக்கருவியை நாம் வடிவமைத்துள்ளோம்.

தற்போது இது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அரசு அனுமதியோடு அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்கருவிப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருவிக்கு 'ஐசென்ஸ்' எனப் பெயர் வைத்துள்ளோம். இதன் விலை ரூ.10 ஆயிரத்து மேல் இருக்காது. கருவியைத் தயாரிக்க தனி நிறுவனம் தொடங்கப்படும். 

மத்திய அரசு நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாட்டில் 5 இடங்களில் தலா ரூ.50 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். முதன்முறையாக மும்பை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இதுவரை 35 ஆராய்ச்சித் திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை சமர்ப்பிப்போருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் ஐஐடி ஏற்கிறது" என்றார். _

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)

Ar-Raheeq - History of Prophet Muhammad அர்ரஹீக்குல் மக்தூம்
 உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல்
ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான்
தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி
தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா
முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய (PDF format) இங்கு கிளிக் செய்யவும் Size: 1.74 MB

தற்கொலை செய்வதற்கும் இன்டர்நெட் கருத்துக்களம்: அதிர்ச்சி தகவல்


பிரித்தானியாவில் உள்ள எசிக்ஸ் நகராட்சிப் பொலிசார் திங்கட்கிழமை முதல் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைவதாக சொல்லப்படுகிறது. இணைந்து தற்கொலை செய்வது எப்படி என்று இணையத்தளத்தில் உள்ள தற்கொலைக்கான கருத்துக்களம் (Suicide Forum)) என்ற சட்டிங் (chat) ஊடாக பிரித்தானிய பிரஜைகள் இருவர் உரையாடியுள்ளனர். வார இறுதியில் ஒதுக்குப் புறமான தொழிற்சாலை ஒன்றிற்கு அருகாமையில் தமது காரை நிறுத்திவிட்டு, நச்சுத் திரவத்தையும், பதார்த்தங்களையும் உட்கொண்டு அவ்விருவரும் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.

திங்கட்கிழமை தொழிற்சாலைக்குச் சென்ற தொழிலாளி ஒருவர் இவர்கள் காரில் இறந்து கிடப்பதை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார். காரின் கண்ணாடிகளில், காருக்கு உள்ளே நச்சுத் திரவங்கள் இருப்பதாகவும், ஜாக்கிரதையாகக் கையாளவும் எனவும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. கார் கதவுகளை திறந்தால் மூச்சுத் திணறல் ஏற்படலாம் எனவும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து பொலிசார் அதிர்ந்து போனார்கள். அவர்கள் கடைசியாக உபயோகித்த கம்பியூட்டரில் இருந்து, தற்கொலைக்கு நான் தயார், அதற்காக நச்சுத் திரவங்களும் தயார் என்ற சட்டிங் வாசகங்கள் இருந்ததைப் பார்த்து குழம்பிய பொலிசார், தற்கொலை செய்வதற்கெல்லாம் கருத்துக்களம் இருக்கிறதா என அன்றுதான் தெரிந்துகொண்டனராம்.

இறந்த இருவரில் ஒருவருக்கு தீராத வியாதி இருப்பதாகச் சொல்லப்பட்டலும், அது சாவுக்கு காரணம் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பொலிசார் மேலும் குழம்பியுள்ளனர். நோக்கமே இல்லாத சாவு என்று பெயரிட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அறிகிறது.

பசியால் வாடியதால் பாகனை அடித்து கொன்ற சர்க்கஸ் யானை: பிஸ்கெட்டை கண் எதிரில் சாப்பிட்டதால் ஆத்திரம்


கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனம் 4 லாரிகளில் 4 யானைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி புறப்பட்டது. அதில் பாகன் கனி (55) உள்ளிட்ட 4 பாகன்கள் இருந்தனர். அவர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் லாரிகளை நிறுத்திவிட்டு டீ குடித்தனர். பின்னர் யானைகள் எதிரில் நின்று பிஸ்கெட் சாப்பிட்டனர்.

அப்போது யானைகள் கடும் பசியில் இருந்தது. அவைகளுக்கு பாகன்கள் தீனி எதுவும் தராமல் பிஸ்கெட்டை அதன் கண் எதிரில் சாப்பிட்டதால் கொதித்துப்போய் இருந்தது.

அப்போது பாகன் கனி 40 வயது பெண் யானை இருந்த லாரியில் ஏறினார். அப்போது அந்த யானை தனக்கு தீனி தராமல் பட்டினி போட்ட கனியை தும்பிக்கையால் பிடித்து 2 தடவை அங்கும் இங்கும் சுழற்றியது. பின்னர் அவரை கீழே வேகமாக வீசியது. இதில் பாகன் கனி ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதையடுத்து அவரை மற்ற பாகன்கள் உடுமலைப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கனியின் உதவியாளர் ஒருவர் கூறும்போது, பாகன் கனி அந்த பெண் யானையை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த யானைக்கும் கொஞ்சம் கொடுப்பார்.

அவர் யானை பசியில் இருப்பதை அறியாமல் அதன் கண் எதிரில் பிஸ்கெட் சாப்பிட்டதால் கோபத்தில் இருந்துள்ளது. அந்த சமயத்தில் பிஸ்கெட் சாப்பிட்டப் படியே லாரியில் ஏறி அதன் அருகில் நின்றதால் அடித்து கொன்று விட்டது என்றார்.
இன்னொரு பாகன் கூறும்போது, நாங்கள் பாலக்காட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் வருவதற்குள் 4 இடங்களில் நிறுத்தி டீ மற்றும் வடை, பிஸ்கெட் போன்ற நொறுக்கு தீனிகள் சாப்பிட்டோம். யானைகளுக்கு இரை போட மறுந்து விட்டோம். பெண் யானை இவ்வளவு பசியில் இருந்திருப்பது பாகன் கனியை பறி கொடுத்த பிறகு தான் தெரிந்தது� என்றார் முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய மடத்துகுளம் இன்ஸ் பெக்டர் கனகராஜ் கூறும் போது, �பாகன் கனியை கொன்ற யானை ஒருவித சோகத்தில் உள்ளது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தபடி உள்ளது. இதனால் அது பாகனை கொன்று விட்டோமே என்ற வேதனையில் தவிப்பதை காண முடிகிறது. அந்த யானையை மற்ற யானைகளுடன் திருநெல்வே லிக்கு அனுப்பி விட்டோம்� என்றார்.

சமீப காலமாக யானைகள் பாகன்களை அடித்து கொல்வது தொடர்கதையாகிவிட்டது. இதனால் பாகன்கள் யானைகளின் அருகில் செல் லவே அஞ்சி நடுங்குகிறார்கள். எவ்வளவுதான் பழகினாலும் யானைக்கு ஆத்திரம் என்று வந்து விட்டால் சில நொடிகளில் பாகன்களின் உயிரை பறித்து விடுகிறது.

டைட்டானிக் மூழ்கிய ரகசியம் தெரிந்தது

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிர் இழந்தனர். பலர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பினார்கள்.

இதில் சார்லஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். அவருடைய பேத்தி லூயிஸ்பேட்டன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது? என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை கூறி உள்ளார்.

டைட்டானிக் கப்பலுக்கு முன்பு பனிக்கட்டி மிதப்பதை கண்டுபிடித்து கப்பலை இடது பக்கமாக திருப்ப சொன்னார்கள். ஆனால் அதை தவறுதலாக புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பிவிட்டார்கள். மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது என்று அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்


அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை போபர்ஸ் பத்திரிகை மீண்டும் வெளியிட்டு உள்ளது. இதில் மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தொடர்ந்து 17 ஆண்டுகளாக அமெரிக்காவின் முதல் பணக்காரர் பட்டியலில் இருக்கிறார்.

2-வது இடத்தை வாரன் பப்பெட் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி. 3-வது இடத்தை ஆரேக்கிர் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் லாரன்ஸ் எலிசன் பிடித்து உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 35 அயிரம் கோடி.