கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனம் 4 லாரிகளில் 4 யானைகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி புறப்பட்டது. அதில் பாகன் கனி (55) உள்ளிட்ட 4 பாகன்கள் இருந்தனர். அவர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் லாரிகளை நிறுத்திவிட்டு டீ குடித்தனர். பின்னர் யானைகள் எதிரில் நின்று பிஸ்கெட் சாப்பிட்டனர்.
அப்போது யானைகள் கடும் பசியில் இருந்தது. அவைகளுக்கு பாகன்கள் தீனி எதுவும் தராமல் பிஸ்கெட்டை அதன் கண் எதிரில் சாப்பிட்டதால் கொதித்துப்போய் இருந்தது.
அப்போது பாகன் கனி 40 வயது பெண் யானை இருந்த லாரியில் ஏறினார். அப்போது அந்த யானை தனக்கு தீனி தராமல் பட்டினி போட்ட கனியை தும்பிக்கையால் பிடித்து 2 தடவை அங்கும் இங்கும் சுழற்றியது. பின்னர் அவரை கீழே வேகமாக வீசியது. இதில் பாகன் கனி ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதையடுத்து அவரை மற்ற பாகன்கள் உடுமலைப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கனியின் உதவியாளர் ஒருவர் கூறும்போது, பாகன் கனி அந்த பெண் யானையை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த யானைக்கும் கொஞ்சம் கொடுப்பார்.
அவர் யானை பசியில் இருப்பதை அறியாமல் அதன் கண் எதிரில் பிஸ்கெட் சாப்பிட்டதால் கோபத்தில் இருந்துள்ளது. அந்த சமயத்தில் பிஸ்கெட் சாப்பிட்டப் படியே லாரியில் ஏறி அதன் அருகில் நின்றதால் அடித்து கொன்று விட்டது என்றார்.
இன்னொரு பாகன் கூறும்போது, நாங்கள் பாலக்காட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் வருவதற்குள் 4 இடங்களில் நிறுத்தி டீ மற்றும் வடை, பிஸ்கெட் போன்ற நொறுக்கு தீனிகள் சாப்பிட்டோம். யானைகளுக்கு இரை போட மறுந்து விட்டோம். பெண் யானை இவ்வளவு பசியில் இருந்திருப்பது பாகன் கனியை பறி கொடுத்த பிறகு தான் தெரிந்தது� என்றார் முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய மடத்துகுளம் இன்ஸ் பெக்டர் கனகராஜ் கூறும் போது, �பாகன் கனியை கொன்ற யானை ஒருவித சோகத்தில் உள்ளது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தபடி உள்ளது. இதனால் அது பாகனை கொன்று விட்டோமே என்ற வேதனையில் தவிப்பதை காண முடிகிறது. அந்த யானையை மற்ற யானைகளுடன் திருநெல்வே லிக்கு அனுப்பி விட்டோம்� என்றார்.
சமீப காலமாக யானைகள் பாகன்களை அடித்து கொல்வது தொடர்கதையாகிவிட்டது. இதனால் பாகன்கள் யானைகளின் அருகில் செல் லவே அஞ்சி நடுங்குகிறார்கள். எவ்வளவுதான் பழகினாலும் யானைக்கு ஆத்திரம் என்று வந்து விட்டால் சில நொடிகளில் பாகன்களின் உயிரை பறித்து விடுகிறது. |
|
|
No comments:
Post a Comment