Thursday, December 23, 2010

பறவையைப் போல் கீச்சிடும் எலி: ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை (வீடியோ இணைப்பு)



பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர்.

ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும்.

இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்கைப்பில் எழுந்த திடீர் பிரச்சினை

  பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா?

அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!

இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர். 
( இச்செய்தி எழுதப்படும் வரை) 

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.





கட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்

உலகின் மிக சிறிய மொபைல் போன் நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். இந்த போனின் பெயர் நியோ 808 ஐ. இதில் அதிகமான எண்ணிக்கையில் வசதிகள் உள்ளது இன்னொரு கூடுதலான சிறப்பாகும்.
இதன் நீளம் 72மிமீ, அகலம் 41மிமீ. மிக அழகாக அடக்கமாக சிறிய எம்பி3 பிளேயர் போல இருக்கிறது. மற்ற போன்களில் திரையும் கீகளும் நெட்டு வாக்கில் இருக்கும். ஆனால் இதில் படுக்கை வாக்கில் இருக்கிறது. வால்யூம் கீகளுடன் கேமராவிற்கான ஒரு கீயும் அருகே தரப்படுகிறது. எனவே இந்த வகை கீ பேடிற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள ஓரிரு நாட்களாவது ஆகும். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல இதில் எந்த வசதியும் விட்டுவைக்கப்படவில்லை.
மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். வசதி, இ–புக் ரீடர் ஆகியன உள்ளன. இதன் ஒலியின் தன்மை தனியே கேட்கும்போதும் ஹெட்செட் மூலம் கேட்கும்போதும் சிறப் பாகவே உள்ளது. எப்.எம்.ரேடியோவில் 30 சேனல்களை மெமரியில் வைக்கலாம். நம்முடைய பேவரைட் புரோகிராம்களை ரெகார்ட் செய்திடலாம். கேமராவுடன் போட்டோ எடிட்டர் வசதியும் தரப்பட்டுள்ளது.
போனுடன் ஒரு யு.எஸ்.பி. சார்ஜரும் தரப்பட்டுள்ளது. 128 எம்பி மெமரி இருந்தாலும் 4 ஜிபி வரை மெமரி கார்டுகளை இந்த போன் ஏற்றுக் கொள்கிறது. ஒரு சிறிய போன் இந்த அளவில் மெமரியை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமே. போனுடன் 128 எம்பி மெமரி கார்ட் தரப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். வசதி நன்றாகக் கிடைக்கிறது. இதில் உள்ள இ–புக் ரீடர் மூலம் ஆன் லைன் புத்தகங்களை வாசிக்க முடிந்தது. இவை அனைத் திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் பேட்டரி திறன் கொண்டதாக உள்ளது. கூடுதல் பேட்டரி ஒன்று இதன் சர்வீஸ் பேக்குடன் தரப்படுகிறது. இதனோடு ஒப்பிட வேண்டும் என்றால் சோனி டபிள்யூ 610 ஐ மற்றும் நோக்கியா 5310 ஐக் கூறலாம். இவற்றில் கேமரா 2 மெகா பிக்ஸெல் ஆகும். இருந்தாலும் உலக அளவில் சிறிய மொபைல் என கைக்குள் எடுத்துச் செல்லலாம்.

சிறுநீர் கழிக்கும்போது வீடியோ கேம்! (வீடியோ இணைப்பு)



வீடியோ கேம் பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு. கழிவறையில் சிறுநீர் கழிக்கும்போதுகூட வீடியோ கேம் விளையாடலாம். ஆனால் இதை ஆண்கள் மாத்திரம் விளையாட முடியும்

யப்பானிய வீடியோ கேம் நிறுவனம் ஒன்று இவ்விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. கழிவறையில் சிறுநீர் கழிக்க வேண்டிய இடத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டு

அக்கருவிக்கு மேல் சிறுநீர் நேராக சென்று பட வேண்டும். முன்னால் இருக்கும் திரையில் அப்போது ஆட்டம் தொடங்கும். சிறுநீரின் அளவு, வேகம் ஆகியன ஆட்டத்தை தீர்மானிக்கும்.

கிறிஸ்மஸ் 2.0 - டிஜிட்டல் நேட்டிவிட்டி (வீடியோ)


இராமயணக் கதையை புதிய சினிமாவாக மணிரத்னம் சொன்ன போது பிறந்தது 'ராவணா'. இது கிறிஸ்துமஸ் காலம்,
பாலன் பிறப்புப் பாடல்களும், அலங்காரங்களும்,  உலகெங்கும் வலம் வரும் நேரம். இந்நேரத்தில், இப்போதுள்ள டிஜிட்டல், இணைய நுட்பத்தில் கிறிஸ்துவின் பிறப்பைச் சொன்னால் எப்படி இருக்கும் ? கீழே காண்க..