| குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. மிகவும் நெருக்கமாக பழகும் ஒருவரே இதில் குற்றவாளியாக இருப்பதுதான் கொடுமையான விஷயம். * குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டுபிடிக்கும் வழிகள்... * சில உடல் ரீதியான மாற்றங்களை மருத்துவ சோதனையின் மூலமே கண்டறிய முடியும். அவை... * நடப்பது அல்லது உட்காருவதற்குச் சிரமப்படுவது. * மன உளைச்சலால் ஏற்படும் உடல் நலக்குறைவு, அனோரெக்சியா, புலிமியா போன்றவை. * சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் அசவுகரியம். * சிறுநீர் உறுப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நோய்த் தொற்று. * குழந்தை உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதை வாய், அந்தரங்க உறுப்பு அல்லது மலம் கழிக்கும் உறுப்புகளில் ரத்தப்போக்கு, ரத்தக் கசிவு, சிராய்ப்பு அல்லது அரிப்பு போன்றவை மூலம் தெரிந்து கொள்ளலாம். * மார்பகம், பின்புறம், தொடை அல்லது வேறு உறுப்புகளில் சிராய்ப்போ, காயமோ காணப்படுதல். * எந்த வயதுக் குழந்தையாக இருப்பினும் பால்வினை நோய்கள் இருத்தல். * முறையற்ற கருத்தரிப்பு. * குழந்தைகளின் நடவடிக்கை மாற்றங்களும் பாலியல் வன்முறையைக் காட்டும் அறிகுறியாகும். ஆனாலும் அது பாலியல் கொடுமையை மட்டும் குறிக்காது. இவற்றோடு கூட வேறு அறிகுறிகளும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்... * பாடங்களை கற்றுக்கொள்வதில் சிரமம். காரணமில்லாமல் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது. ஞாபகசக்தியின் குறைபாடு, சிந்தனையை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் போன்றவை. * விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருத்தல். * விரல் சப்புவது, உறக்கத்தில் சிறுநீர் கழித்தல், பேச்சுத்திறன் குறைபாடு போன்ற வயதிற்கு பொருத்தமற்ற சிறுகுழந்தையைப் போன்ற செயல்களைச் செய்தல். * எப்போதும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் தன்மை. * திடீரென நிறைய பணமும், பரிசுகளும் சேர்வது. * உடல் ரீதியான காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுதல். * உடல் சோர்வு அல்லது உறங்குவதில் சிரமம். * தன்னைப் பேணிக்கொள்வதிலும், உடல் நலத்தை கவனிப்பதிலும் ஆர்வமின்மை. * மனச்சோர்வுக்கு ஆளாகுதல். * சமூகத்திலிருந்து விலகி இருத்தல. (பெரியோர், நண்பர் என எல்லா உறவுகளிலும் நாட்டக்குறைவு) * திடீரென பயம், இனம் தெரியாத வெறுப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகுதல். (கொடுமைப்படுத்தப்பட்ட இடம் குறித்த பயம், குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவது, விளையாட்டு அல்லது நீச்சல் உடை அணிய மறுத்தல் போன்றவை) * உணர்ச்சியைத் தூண்டும் ஆபாசமான உடை அணிதல் அல்லது உடலில் ஏற்பட்ட காயங்களை மறைக்க அல்லது அழகில்லாமல் தோன்ற அடுக்கடுக்காக உடையணிதல். * வயதிற்கு பொருத்தமற்ற பாலுறவு பற்றிய அறிவு, நடவடிக்கை அல்லது பேச்சு. * வகுப்புப்பாடம் அல்லது ஓவியப் பயிற்சியில் தன் பாலியல் அறிவை வெளிப்படுத்துதல். * தன்னைவிட வயதில் சிறிய அல்லது வலிமை குறைந்த குழந்தைகளிடம் பாலியல் கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல். * வழக்கத்திற்கு மாறாக வரைமுறையின்றி எல்லோரிடமும் நெருக்கமாக பழகுதல். * சரியான காரணமின்றி வீட்டைவிட்டு ஓடிப்போவது. * குடி, போதை மருந்துப்பழக்கம் ஏற்படுவது, உடலுறுப்புகளைச் சிதைத்துக் கொள்ளுதல், சட்டத்தை மீறுதல், தற்கொலை முயற்சி செய்தல் போன்ற தனக்குத் தீமை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல். * சம்பந்தப்பட்ட குற்றவாளி நெருக்கமானவர் என்றாலும், அவரிடம் இருந்து குழந்தைக்கு விடுதலையும், பாதுகாப்பும் அளிப்பது பெற்றோரின் கடமை. உறவுகளை விட, நட்பை விட, எல்லாவற்றையும் விட உங்களுக்கு உங்கள் குழந்தை முக்கியம். |
Wednesday, January 26, 2011
பாலியல் கொடுமையிலிருந்து சிறுமிகளை கவனியுங்கள்
குதியுயர் பாதணி அணியும் பெண்களுக்கு...
அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள். * குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு. * குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். * இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி `நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். * குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும். குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: * உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள். * பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது. * நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும். * 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை. * குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் `சோல்` ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும். * குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா? என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். * தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும். * குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும். * அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். * குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது. நடக்கும்போது கவனிக்க வேண்டியவை: * குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். * கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும். * குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும். * மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும். * மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும். * குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது. * அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும் போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும். * கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும். * கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும். |
தம்பதியர் ஒன்றாக பார்த்தால் நன்றாக இருக்கும்
'தம்பதியர் இருவரும் இணைந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது குடும்பத்திற்கும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அதிக நன்மை தரும்' என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள். தம்பதியர் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும்போது அங்கே ஈகோ எட்டிப் பார்க்காது. ஒருவருக்கொருவர் வேலையில் இருக்கும் நெருக்கடிகளை தெரிந்து கொள்வதால் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பார்கள். இதனால் பல்வேறு நிறுவனங்களில் தம்பதியர் இருவரும் ஒன்றாக பணிபுரிவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். இருவருக்கும் இணைந்து பேசப் பழக அதிக நேரம் கிடைக்கும். வீட்டுக்கு செல்வது, வீட்டிலிருந்து அலுவலகம் வருவது என இருவருக்குமே பாதுகாப்பான பயணம். அலுவலகப் பணி காரணமாக தாமதமானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் ஏற்படும். இருவருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு, பரிவு, பாசம் அதிகரிக்கும். `நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?' போன்ற தேவையற்ற சிக்கல்கள் வராது. மேலும் வேறு வகையிலான சந்தேகம், சண்டை, வாக்குவாதம் என அனைத்தும் மறைந்து போகும் என்கிறார்கள். மும்பையை சேர்ந்த பிரபல சைக்காலஜிஸ்ட், தம்பதியர் இணைந்து வேலை செய்வதை வெகுவாக வரவேற்கிறார். வேலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது வேலையை கட்டாயமாக முடிக்கவேண்டும் என்ற அவசரமான, அவசியமான சூழலில், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், மற்றொருவர் அந்த வேலையை முடித்துக் கொடுப்பார். இதனால் அவர்களுடைய வாய்ப்புகள் பறிபோகாது. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றையும் இருவரும் பகிர்ந்து வேலையை முடிப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இருவரும் இணைந்து பணியாற்றுவதால் நிறுவனத்துக்கு லாபமும் அதிகம் என்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த மனஅழுத்த நிபுணர், இதுவொரு நல்ல விஷயமாகும். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பு தன்மையும் அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே நட்பு பாராட்டப்படும். இப்படி ஒரே நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சி அதிகரித்து, தங்களது குடும்பத்தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்வார்கள். பொருளாதார ரீதியாக வீடு, நிலம், சொத்து மற்றும் வங்கி சேமிப்பு என திட்டமிடல் அதிகரிக்கும். இருவருக்குள்ளும் எச்சரிக்கை உணர்வும், பரஸ்பரம் உதவும் மனப்பான்மையும் மேம்படும் என்கிறார். |
அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்
`பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்' என்று கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்... பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிïட்டும் உண்மை! ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர். பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது' என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்'பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது' என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது' என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்துவதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார். |
இணையதளத்தின் IP முகவரியை கண்டறிய...
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க...
ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர். இதோ அதற்கான வழிமுறைகள்: 1. நடவுங்கள்... டயாபடீஸை விரட்டலாம்: அதிக எடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சியே மிக உயர்ந்த வழி. முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள். ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிக மிகக் குறைவு. 2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்: காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது. 3. மகிழ்வான சூழல்: பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன. இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு E ஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். 4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்: உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள். சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும். |
surf2gether: யூடியூப் வீடியோவை பார்வையிட்டவாறே நண்பருடன் சோ்ந்து அரட்டை அடிப்பதற்கு
ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பார்வையிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த surf2gether என்ற இணையத்தளம் தரும் சேவையை பயன்படுத்தலாம். இதன் மூலம் இருவருக்கும் வீடியோ ஒரே மாதிரி ஒளிபரப்பபடுவதுடன், அந்த வீடியோவைப்பற்றிய கருத்துக்களையும் சாட் ரூமில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்திற்கு சென்று புதிய வீடியோவை பார்வையிடுவதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெயரை மட்டும் கொடுத்துவிட்டு நண்பரை இணையுமாறு அதன் முகவரியை வழங்கி அழைத்தால் அவரும் இணைந்தவுடன் வீடியோவைப்ப் பார்வையிடலாம். வலப்பக்கதில் சாட் செய்து கொள்ளவும் முடியும். குழுவினராக இணைந்துகொள்ளவும் முடிகிறது. சாட்டில் இருக்கும் ஒருவர் வேறு வீடியோவை தேர்வு செய்தால் அனைவரும் அதையே பார்வையிடவும் முடியும். |
இலவச வயர்லெஸ் இணைப்பை பயன்படுத்த வயர்லெஸ் எயர் கிராக்கிங்(Wireless Air Cracking) முறை
வயர்லெஸ் என்பது மின்சார கடத்திகள் அல்லது கம்பிகளின் பயன்பாடின்றி தகவல்களை பரிமாற்றுவது ஆகும். இந்த தூரங்கள் குறைந்த அல்லது அதிகமான தூரங்களாக கூட இருக்கலாம். வயர்லெஸ் வலையமைப்புகள் அதிகமாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. வயர்லெஸ் அமைப்பு உள்ள எந்தவொரு இடத்தில் இருந்தும் நாம் இணையத்தை பயன்படுத்த முடியும். எனினும் அங்கீராமற்ற நபர்கள் பயன்படுத்தாத வகையில் கடவுச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி வயர்லெஸ் அமைப்பை பயன்படுத்த முடியும். இதில் ஒரு முறையே வயர்லெஸ் எயர் கிராக்கிங் முறை. இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய |
உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் "டேப்ளட் பிசி(Tablet PC)"
ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம். 1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. 2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது. தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன. 4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன. டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும். குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும். ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது. பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.32,000 முதல் ரூ. 40,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 9,000 முதல் ரூ.24,000 வரை உள்ளன. பெங்களூரைச் சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 20,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது. இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 22,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும் |
பிரசவ காலத்தில் தாயின் உயிரிழப்பை தடுக்க ஆடை அறிமுகம்
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு, 85 தாய்மார்கள் இறக்க நேரிடுகிறது. இதில் பெருமளவு பிரசவத்துக்கு பின் ஏற்படும் இரத்தப் போக்கின் காரணமாக நிகழ்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில் பாத்பைன்டர் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் உயிர் காக்கும் ஆடை மற்றும் தொடர் கவனிப்பு வியூகம் பல தாய்மார்களின் உயிரை காப்பாற்றியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பாத்பைன்டர் தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 19 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. முதல்கட்டமாக சென்னை மற்றும் 10 மாவட்டங்களில் இந்த உயிர் காக்கும் ஆடை மற்றும் தொடர் கவனிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். |
மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழம்
இந்த பழமானது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இதன் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு. இதன் மருத்துவ குணங்கள் சில: * இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர். * சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. * சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். * வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். * மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். * பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து மங்குஸ்தான் ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். * சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும். மங்குஸ்தான் பழத்தில் நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம் கொழுப்பு - 0.1 கிராம் புரதம் - 0.4 கிராம் மாவுப் பொருள் - 14.8 கிராம் பாஸ்பரஸ் - 15 மி.கி. இரும்புச் சத்து - 0.2 மி.கி மங்குஸ்தீன் ரீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் ரீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தடுக்கப்படும். |
கணினியின் முகப்பில்(desktop) பேஸ்புக்கை பயன்படுத்துவது எவ்வாறு?
அவ்வாறெனில் இனிமேல் கணினியின் முகப்பு திரையிலேயே பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய Facebook Desktop என்கின்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ பார்வையிடுவதற்காக இணைய உலாவியை திறக்கவே தேவையில்லை.டெக்ஸ்டாப்பில் பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை காட்டுமாறு செய்துவிடலாம்.
Facebook Desktop என்பது பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் அளவில் சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.
மெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை அலெட் செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த மென்பொருள்.
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.
டவுண்லோட்
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.
டவுண்லோட்
இம்முறை ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள்! : ஓர் பார்வை
கடந்த 2009 இல் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டி, குல்ஸார் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இம்முறை ஆஸ்கார் விருதுகளுக்கும் (2010 ற்கான) ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்பட இயக்குனர் டேனி பாயல் இயக்கிய புதிய திரைப்படமான '127 Hours' இல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'IF I RISE' பாடல் மற்றும், படத்தின் பின்னணி இசைக்காக இரு பிரிவுகளில் இவ்விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இம்முறை 'கோல்டன் குளோபல்' விருதுகளுக்கும் ரஹ்மானின் 'IF I RISE' பாடல் பரிந்துரை செய்யப்பட்ட போதும், 'தி சோஷியல் நெட்வேர்க்' திரைப்படத்தின் பின்னணி இசை அவ்விருதினை தட்டிச்சென்றிருந்தது.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் அதிகபட்சமாக, 'King's Speech' (இங்கிலாந்து அரச குடும்பத்தை மையமாக கொண்ட) திரைப்படம் 12 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 'Best Picture', மற்றும், சிறந்த நடிகர், நடிகையர்களுக்கான பரிந்துரைகளும் இதில் அடங்கும். அதைவிட 'True Grit', 'The Social Network' ஆகியனவும் பல பிரிவுகளில் போட்டி போடுகின்றன.
மேலும், திகில் திரைப்படமான 'Black Swan'', பாக்ஸிங் பற்றிய 'The Fighter', சயன்ஸ் பிக்ஷன் கதைக்கருவை கொண்ட 'Inception', லெஸ்பியன் உறவுகளை பற்றிய 'The Kids Are All right', மற்றும் டேனி பாயலின் '127 Hours', அனிமேஷன் திரைப்படம் 'Toy Story 3' ஆகியனவும் ஆஸ்கார் விருதுகளுக்கு போட்டி போடுகின்றன.
இவற்றில் 'Best Picture' ற்கான ஆஸ்கார் விருதுகள் 'த கிங்ஸ் ஸ்பீச்', அல்லது 'த சோஷியல் நெட்வேர்க்' ற்கே கிடைக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை இப்பிரிவுக்கான கோல்டன் குளோபல் விருதுகளையும் இப்படங்களே தட்டிச்சென்றன.
'Hollywood's Kodak Theatre' இல், எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறூம் ஆஸ்கார் விருது வழங்கும் விழா 'ABC' சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கின்றது.
இம்முறை ஆஸ்கார் விருதுகளுக்கும் (2010 ற்கான) ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்பட இயக்குனர் டேனி பாயல் இயக்கிய புதிய திரைப்படமான '127 Hours' இல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'IF I RISE' பாடல் மற்றும், படத்தின் பின்னணி இசைக்காக இரு பிரிவுகளில் இவ்விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இம்முறை 'கோல்டன் குளோபல்' விருதுகளுக்கும் ரஹ்மானின் 'IF I RISE' பாடல் பரிந்துரை செய்யப்பட்ட போதும், 'தி சோஷியல் நெட்வேர்க்' திரைப்படத்தின் பின்னணி இசை அவ்விருதினை தட்டிச்சென்றிருந்தது.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் அதிகபட்சமாக, 'King's Speech' (இங்கிலாந்து அரச குடும்பத்தை மையமாக கொண்ட) திரைப்படம் 12 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 'Best Picture', மற்றும், சிறந்த நடிகர், நடிகையர்களுக்கான பரிந்துரைகளும் இதில் அடங்கும். அதைவிட 'True Grit', 'The Social Network' ஆகியனவும் பல பிரிவுகளில் போட்டி போடுகின்றன.
மேலும், திகில் திரைப்படமான 'Black Swan'', பாக்ஸிங் பற்றிய 'The Fighter', சயன்ஸ் பிக்ஷன் கதைக்கருவை கொண்ட 'Inception', லெஸ்பியன் உறவுகளை பற்றிய 'The Kids Are All right', மற்றும் டேனி பாயலின் '127 Hours', அனிமேஷன் திரைப்படம் 'Toy Story 3' ஆகியனவும் ஆஸ்கார் விருதுகளுக்கு போட்டி போடுகின்றன.
இவற்றில் 'Best Picture' ற்கான ஆஸ்கார் விருதுகள் 'த கிங்ஸ் ஸ்பீச்', அல்லது 'த சோஷியல் நெட்வேர்க்' ற்கே கிடைக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை இப்பிரிவுக்கான கோல்டன் குளோபல் விருதுகளையும் இப்படங்களே தட்டிச்சென்றன.
'Hollywood's Kodak Theatre' இல், எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறூம் ஆஸ்கார் விருது வழங்கும் விழா 'ABC' சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கின்றது.
ZumoDrive: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும்
ZumoDrive தளத்தில் தரவேற்றப்பட்ட(Upload) உங்களது கோப்புகளை, உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும், எந்த கருவி வாயிலாகவும், எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.
விண்டோஸ், லினக்ஸ், மேக் போன்ற இயங்குதளங்கள்(OperatingSystem) மட்டுமல்லாது நெட்புக், ஐபோன், ஸ்மார்ட்போன், அண்ட்ராய்ட் போன்ற நவீன கையடக்கக் கருவிகளுடனும் ஒத்திசைவு கொண்டது.
ZumoDrive-வை எவ்வாறு பயன்படுத்துவது?
1. ஆன்லைனில் ஏற்றப்பட வேண்டிய நமது கோப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
2. ZumoDrive ல் இணையேற்ற வேண்டும்.
3. ஏற்றிய பின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றைப் பெறலாம்.
மேலும் அடிப்படை உறுப்பினர்களுக்கு இலவசமாக 2 ஜிபி காலியிடமும் வழங்குகிறது.
Hard disk: இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புக்களை மீட்க
மென்பொருளை தரவிறக்க சுட்டி
நீங்கள் எந்த ட்ரைவில் இருந்து கோப்பினை டெலிட் செய்தீர்களோ அதனை தேர்வு செய்து Scan என்னும் பட்டியை தேர்வு செய்யவும். நீங்கள் டெலிட் செய்யப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்பினை தேர்வு செய்து Undelete என்னும் பட்டியை அழுத்தவும் இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கும்.
இழந்த கோப்பானது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. இவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
