கடந்த 2009 இல் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டி, குல்ஸார் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இம்முறை ஆஸ்கார் விருதுகளுக்கும் (2010 ற்கான) ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்பட இயக்குனர் டேனி பாயல் இயக்கிய புதிய திரைப்படமான '127 Hours' இல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'IF I RISE' பாடல் மற்றும், படத்தின் பின்னணி இசைக்காக இரு பிரிவுகளில் இவ்விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இம்முறை 'கோல்டன் குளோபல்' விருதுகளுக்கும் ரஹ்மானின் 'IF I RISE' பாடல் பரிந்துரை செய்யப்பட்ட போதும், 'தி சோஷியல் நெட்வேர்க்' திரைப்படத்தின் பின்னணி இசை அவ்விருதினை தட்டிச்சென்றிருந்தது.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் அதிகபட்சமாக, 'King's Speech' (இங்கிலாந்து அரச குடும்பத்தை மையமாக கொண்ட) திரைப்படம் 12 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 'Best Picture', மற்றும், சிறந்த நடிகர், நடிகையர்களுக்கான பரிந்துரைகளும் இதில் அடங்கும். அதைவிட 'True Grit', 'The Social Network' ஆகியனவும் பல பிரிவுகளில் போட்டி போடுகின்றன.
மேலும், திகில் திரைப்படமான 'Black Swan'', பாக்ஸிங் பற்றிய 'The Fighter', சயன்ஸ் பிக்ஷன் கதைக்கருவை கொண்ட 'Inception', லெஸ்பியன் உறவுகளை பற்றிய 'The Kids Are All right', மற்றும் டேனி பாயலின் '127 Hours', அனிமேஷன் திரைப்படம் 'Toy Story 3' ஆகியனவும் ஆஸ்கார் விருதுகளுக்கு போட்டி போடுகின்றன.
இவற்றில் 'Best Picture' ற்கான ஆஸ்கார் விருதுகள் 'த கிங்ஸ் ஸ்பீச்', அல்லது 'த சோஷியல் நெட்வேர்க்' ற்கே கிடைக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை இப்பிரிவுக்கான கோல்டன் குளோபல் விருதுகளையும் இப்படங்களே தட்டிச்சென்றன.
'Hollywood's Kodak Theatre' இல், எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறூம் ஆஸ்கார் விருது வழங்கும் விழா 'ABC' சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கின்றது.

No comments:
Post a Comment