| ஆம்பூரை அடுத்த சோளூரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர் டாலர்மணி இவரது மகள் ரூபினி (வயது14) இவர் பாசிமணி விற்று வருகிறார். பள்ளிகொண்டா சந்தையில் ஊசி, பாசி மணி விற்ற போது அங்கு பாசிமணி விற்பனை செய்து வந்தராஜா மகன் திருமலைக்கும் (வயது15), பழக்கம் ஏறபட்டது. இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் திருமலை ரூபினியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் சோளூர் நரிக்குறவர் காலனிக்கு சென்று ரூபனியை பெண் கேட்டார். நரிக்குறவர் இனமுறைப்படி மணப்பெண்ணை மணமகன் ஏலம் எடுக்க வேண்டும் இதன்படி திருமலை ரூபனியை ரூ.30ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். பின்னர் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் நாளை நடக்கிறது. இதில்கலந்து கொள்ளும் உறவினர்களுக்கு தலா ரூ.100, மதுபானத்துடன் மணமகன் திருமலை விருந்து கொடுக்க வேண்டும். அதன்படி மணமகன் விருந்து அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மணமகன் பெற்றோர் செய்து வருகிறார்கள். |
Saturday, September 4, 2010
மணப்பெண்ணை ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்த மணமகன்
விமானப் படையின் கௌரவ குரூப் கேப்டன் ஆனார் சச்சின் (வீடியோ இணைப்பு)
|
நியூசிலாந்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 7. 2 ஆக பதிவாகி யுள்ளது. (வீடியோ இணைப்பு)
| வெலிங்டன்: நியூசிலாந்தின் கிறிஸ்துசர்ச் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7. 2 ஆக பதிவாகி யுள்ளது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரசப்ளை , செல்போன் தொடர்புகள் போன்றவை துண்டிக்கப்பட்டன.இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தெருவுக்கு ஓடி வந்தனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கிறிஸ்டியன் சர்ச் கடற்கரை நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |
நீண்ட காலம் வாழ்ந்த சீனர் 80 பேருக்கு இலங்கைக் குடியுரிமை
2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் அடிப்படையில் மேற்படி 80 பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
கட்டிடத்துக்கு கீழே ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு கார் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்பில் இருந்தது. அந்த காரின் பின் இருக்கையில் அவர் விழுந்தார். இதனால் அவர் காயத்துடன் தப்பி விட்டார். ஆனாலும் அவருடைய கால் எலும்பு உடைந்து விட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் |
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஈராக் மீது 2003 ஆம் ஆண்டு படையெடுத்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி படிப்படியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இந்நிலையில், ஏறக்குறைய 8 ஆண்டுகள் நடந்த இந்த போர் முடிவுக்கு வந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், ஈராக் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்களின் பொறுப்பு என்றும், அந்நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இது வரையிலும் மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மதராசப்பட்டினம் மூலம் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்சன் (வீடியோ இணைப்பு)
|
செளந்தரியா-அஸ்வின் திருமணக் களிப்பில் ரஜனி! (படங்கள் இணைப்பு)
| நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் தலைசிறந்த நடிகர்கள் பலரும் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. அதுமட்டுமல்ல தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியவில்லையே என அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தகது. |
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவேக வீதி
| மேற்படி திட்டத்தின் கீழ் 130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் திட்டத்தில் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமான அதிவேக எக்ஸ்பிரஸ் வீதி அமைக்கப்படுகின்றது. இவ் வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறை வரை நீண்டு செல்கின்றது. இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டு இவ் வீதி அமைக்கப்படுகிறது. வீதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் போது கொழும்பிலிருந்து மாத்தறைக்கான பயணத்தை மிக விரைவில் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இப்பிரதேசமானது மக்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்த இடமாக காணப்படும் என நம்பப்படுகின்றது. பல பாதுகாப்புகளை கொண்டு அமைக்கப்படும் இவ் வீதியின் நிர்மாணப்பணிகள் 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டில் அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வீதியின் நிர்மாணத்திற்காக சர்வதேச ஜப்பேன் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளன. நான்கு கட்டமாக அமைந்து காணப்படும் இவ்வீதியில் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருப்பதோடு, ஒன்றரை மணிதியாலங்களில் பயணத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 22 பாலங்கள் அமைந்து காணப்படும் இவ் வீதியில் தற்போதைக்கு 3 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
மரத்துப்போன மனிதம் : விஷப்பாம்பு வைன் (பட இணைப்பு)
இல்லையென்றால் பாம்பு இரத்தத்தை ருசி பார்த்த அவன், அதன் முழு உடலையும் ஊற வைத்துத் தயாரிக்கப்பட்ட 'பாம்பு வைன்'ஐ நாடி போவானா?
பாம்பு வைன் வியட்நாமில் உபயோகப்படுத்தப்படும் ஒருவிதமான மது வகை.
முழுப் பாம்பு உயிருடன் மது போத்தலினுள் அடைக்கப்படுகிறது. அந்தப் பாம்பின் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும். பாம்பின் விஷத்தன்மை மதுவில் உள்ள எத்தனாலினால் முறிக்கப்பட்டுவிடும்.
கிழக்கத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷப் பாம்பு வைன் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது. இதில் இரண்டு வகையான விஷப் பாம்பு வைன்கள் உள்ளன.
ஒன்று, உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது போத்தலினுள் விஷப்பாம்புகள் உயிருடன் அடைக்கப்பட்டு அதன் உடல் சாறாகப் பிழியப்பட்டு உடனடியாக அருந்துவது.
இரண்டு, மது போத்தலினுள் விஷப் பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டுப் பலமாதங்கள் கழித்துக் குடிப்பது.
"மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?"
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு
இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.
தற்போதைய அறிக்கைகளின்படி, இயங்குதள சந்தையின் பிரகாரம் அதன் பங்கு 7.5 வீதமாகும்.
அதன் போட்டியாளரான 'இன்டர் நெட் எக்ஸ்புளோரர்' மற்றும் 'மொஸிலா பயர்பொக்ஸ்' என்பன முறையே 60.4% மற்றும் 22.9% இயங்குதள சந்தையைக் கொண்டுள்ளன.
கூகுள் குரோமின் முன்னைய தொகுப்பானது சுமார் 15 முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளினை கொண்டதாகக் காணப்பட்டது.
ஆனால் தற்போதைய ' குரோம் 6 ' தொகுப்பானது அக்குறைபாடுகள் அற்றதெனவும் நன்கு மேம்படுத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது முன்னைய தொகுப்பினை விட 6 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதுடன் மேம்படுத்தப்பட்ட 'யூஸர் இன்டர் பேஸ்'ஸினையும் கொண்டதாகும்.
இது 'ப்ளேஸ் ஐ' கொண்ட நிலையிலேயே கிடைக்கப் பெறுகின்றமை மற்றும் எச்டிஎம்ல் 5 வசதிகளைக் கொண்டுள்ளமை விசேட அம்சங்களாகும்.
மேலும் இலகுவான பாவனைக்காக 'புக்மார்க்ஸ்' பட்டன்கள் இயங்குதளத்தின் புதியதொரு இடத்தில் தரப்பட்டுள்ளன.
மேற்படி இயங்குதளத்தினை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
Subscribe to:
Posts (Atom)