Saturday, September 4, 2010

மதராசப்பட்டினம் மூலம் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்சன் (வீடியோ இணைப்பு)

இதற்கு முன் திரைப்படங்களில் நடித்த அனுபவம் ஏதுமில்லாத எமி ஜாக்சன் தமிழ் படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் இடம் பிடித்துள்ளார். 18 வயதாகும் எமி ஜாக்சன் மிஸ் இங்கிலாந்து போட்டியாளர்களில் ஒருவர்

வூல்டன், லிவெர்பூல் பகுதியை சேர்ந்த இவரை மிஸ் இங்கிலாந்து இணைய தளத்தில் பார்த்து தெரிவு செய்துள்ளார் இந்திய இயக்குனர் A L விஜய்.

இது குறித்து எமி ஜாக்சன் கூறும் போது, அழகி போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு உள்ளது. அதனாலேயே போட்டி இணையதளத்தில் பார்த்து என்னை தொடர்பு கொண்டார் இயக்குனர் A L விஜய். ஆனால் ஒரு மாதத்திற்குள் சென்னை , ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களில் அனைவராலும் பேசப்படும் பெண்ணாகி விட்டேன்

நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பு உள்ளது. முதலில் மொழிப் பிரச்சினை இருப்பதால் சிறிது பயம் இருந்தது. ஆனால் அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு , ஊக்கத்தில் என்னால் சமாளிக்க முடிந்தது. எனக்கு மாடலிங் ஆடைகள் அணிந்து காமெராவின் முன் தோன்றிய பழக்கம் இருந்தது.

அழகி போட்டியில் திரைப்பட யூனிட்டில் இருப்பதை போன்று அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான திரை பணியாளர்களுக்கு மத்தியில் நடித்தது சவாலான ஒன்று தான். இயக்குனர் A L விஜய்யின் கனவுப் படம் இது. அவரின் கனவை நனவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது

சென்னை திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்பட்ட போது நான் திரையில் தோன்றிய உடன் ரசிகர்களின் பலத்த கைதட்டல்களும் , விசில்களும் அரங்கை அதிரச் செய்தது என உற்சாகமாக கூறுகிறார் எமி. மிஸ் இங்கிலாந்து ஆக வேண்டும் என்பது தன்னுடைய கனவு எனபதையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment