பயமுறுத்தும் விதமாக ஒட்டப்பட்டிருப்பதாக ஜப்பானிய ரசிகர்கள் கூறியிருந்தனர். ஏனெனில் புகழ் பெற்ற mosaic தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு சிறிய புகைப்படங்களை ஒன்றிணைத்து Final Poster ஐ பிரமாண்டமாக உருவாக்கியிருந்தார்கள்.
ஹொலிவூட் திரைப்பட வரலாற்றில் அருவருக்கத்தக்க உச்சகட்ட பயங்கர திரைப்படத்தொடராக 'சாவ்' வர்ணிக்கப்படுவதுண்டு. சாவ் 1-7 வரை வெவ்வேறு காலகட்டத்தில் ஒரே திரைக்கதையுன் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது. பல நாடுகளில் தடை, 18 வயதுக்குட்பட்டோர், இதயம் பலவீனமானோர் பார்க்கவே முடியாத திரைப்படம், என பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி, வசூலில் அள்ளிக்குவித்துவிடும் இதன் ஒவ்வொரு பாகமும்.
இதை முடிக்கவே மாட்டார்களா? என சாவ் ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த படம், 8 வது பாகத்துடன் முடிகிறது என அறிவிக்கப்பட்டது. ஆனால் காட்சிப்படுத்தலின் வரையறையை தாண்டிவிட்ட ஹாலிவூட் திரையுலகில் சாவ் இன் இறுதிப்பாகத்தை மட்டும் எப்படி சும்மா காட்டலாம் என யோசித்த இதன் இயக்குனர் கெவின் க்ரௌவ்தெத், முதன் முதலாக முப்பரிமாண திரைப்படமாக இதை தயாரித்திருக்கிறார். முப்பரிமாண 3டி போஸ்ட்டரை காண இங்கு அழுத்துங்கள்
இதோ அக்டோபர் 29ம் திகதிசாவ் திரைப்படத்தை, 3டி கண்ணாடி அணிந்து பார்க்கப்போகும், நீங்களும் இப்படித்தான் பார்க்கப்போகிறீர்கள்...!