அமைவிடம் : மத்திய மாகாணம்
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின் கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500 வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத் தலமாக விளங்குகிறது.
சிங்கராஐவனம்
அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும் இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள் பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.
சிகிரியா புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகணம்
மாத்தளை மாவட்டம்
முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும் செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே
குகைக்கோவில்
�
அமைவிடம் : மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும் புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது. இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
பொலநறுவை
அமைவிடம் : வட மத்திய மாகணம்
பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால் மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
காலி நகரம்
அமைவிடம் : தென் மாகாணம்
இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.
No comments:
Post a Comment