Saturday, October 2, 2010

வை-மெக்ஸ் மயப்படுத்தப்படும் தென்கொரியா

  இண்டெல் மற்றும் கொரியா டெலிகொம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தென் கொரியா முழுவதற்கும் வை-மெக்ஸ் எனப்படும் அதிவேக இணையச் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. 

இதன் மூலமாக ஆசியாவின் முதல் வை-மெக்ஸ் நாடாக தென்கொரியாவை மாற்றவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கென இண்டெல் நிறுவனம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

வைமெக்ஸ் சேவைக்கு இணையான வைப்ரோ சேவையே கொரியாவில் வழங்கப்படவுள்ளது.

இச்சேவையின் மூலம் கொரியாவின் 85% இணையப் பாவனையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இச்சேவை கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. _

No comments:

Post a Comment