முயற்சியில் இறங்கியுள்ளது.
Tuesday, September 14, 2010
நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி
முயற்சியில் இறங்கியுள்ளது.
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு எப்படி பார்க்கிறோமோ அதைப் போல் இனி யூடியுப்-ல் நேரடி ஒளிபரப்பை நடத்துவதற்கான முயற்சி இப்போது யூடியுப்-ல் நடந்து வருகிறது. ஏற்கனவே யூடியுப்-ல் Indian Premier League கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்தது ஆனால் எதிர்பார்த்தபடி லைவ் ஸ்டிரிம் (live stream) ஆக கொடுக்க முடியவில்லை இதற்காக லைவ் ஸ்டிரிம் நேரடி ஒளிபரப்புக்கான சோதனை முயற்சியாக Howcast, Young Hollywood, Next New Networks, Rocketboom போன்ற தளங்களில் இருந்து நேரடி ஓளிபரப்பாக வரும் வீடியோவை யூடியுப் இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும் External USB/FireWire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும் வீடியோவையும் யூடியுப் – மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான சோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில் "யூடியுப் லைவ்“ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
தொலைபேசி அரட்டையில் கவனம்
இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது. பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும். கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி என்னத்தான் பேசுவார்களோ என்று புலம்புவார்கள். அவர்களும், திருமணத்திற்கு முன்பு அப்படி பேசியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது வேறு கதை. ஆனால் இப்படி தொலைபேசியில் பேசுவதில் மிகவும் கவனம் தேவை என்பது எடுத்துக் கூறவே இந்த கட்டுரை. அதாவது, இப்படி செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பதால், ஒருவரது படிப்போ அல்லது பணியோ, மற்றவர்களுடனான சுமூக உறவோ பாதிக்கப்படும் நிலையில், தொடர்ந்து அப்படி பேசிக் கொண்டிருக்க முடியாதல்லவா? ஒன்றை பாதிக்கும் மற்றொன்றை எப்படி தொடர்வீர்கள். விஷயத்திற்கு வருவோம். காதலிக்கத் துவங்கிய புதிதில் 24 மணி நேரத்தில் 23.55 நிமிடங்களை செல்பேசியிலேயே கழித்த காதலர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வெளி உலகம் ஒன்று இருப்பதை அறிவார்கள். பிறகு இவர்களது பேச்சு நேரம் குறையும். ஒரு முறை, ஆசையாக போன் செய்யும்போது, ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கிறேன். இரவு பேசலாம் என்று மற்றவரின் பதிலுக்குக் கூட காத்திராமல் போனை கட் செய்யும் நிலையும் ஏற்படும். உண்மையிலேயே ஒருவர் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், இது ஆரம்பத்தில் காதலருக்கு எரிச்சலை உண்டாக்கும். காதலிக்கத் துவங்கிய புதிதில் அலுவலகம், கோயில் என்று எதையும் பாராமல் செல்பேசியில் பேசியவர், இப்போது நம்மை உதாசீனப்படுத்துதாக மனம் குமுறும். எனவே இந்த சிக்கலைத் தீர்க்க, ஆரம்பத்திலேயே, அலுவலக/பயண நேரத்தில் போன் பேசுவதைத் தவிர்ப்பது நலம். ஆரம்பத்தில் நிறையப் பேசி பின்னர் பேசாமல் இருக்கும்போது காதல் புயல் வலுவற்றுப் போனதாகத் தெரியும். அதனால் எத்தனை குறைவான நேரம் பேச முடியுமோ, அவ்வளவு குறைவான நேரத்தை மட்டும் குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் உங்கள் காதலில் லேசான பூகம்பங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இந்த விஷயத்தை எத்தனையோ காதலர்கள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.. அல்லவா? |
மஹிந்த வந்து சந்திக்காவிட்டால் தற்கொலை செய்வேன் (வீடியோ இணைப்பு)
ஹோர்டன் பிளேஸிலுள்ள 40 அடி உயரமான ஒரு கோபுரத்தில் ஏறியுள்ள அடையாளங் காணப்படாத நபர் ஒருவர் தம்மை ஜனாதிபதி மஹிந்த வந்து சந்திக்காவிட்டால் தாம் தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறார். எனினும் தற்போது மஹிந்த நேரில் வராவிட்டாலும் தம்மைத் தொலைபேசியில் அழைத்து தனிப்பட்ட ரீதியில் தம்முடன் கதைக்கவேண்டும் என்று கூறி தனது கைத்தொலைபேசி இலக்கத்தையும் அந்நபர் கொடுத்துள்ளார்.
இந்நபரின் இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவரை அக்கோபுரத்திலிருந்து இறங்கும்படி அங்கு கூடியுள்ள போலீசும், தீயணைப்புப் படையினரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் தம்மை இறக்க முற்பட்டால் தாம் மேலிருந்து பாய்ந்து சாவேன் என அல்லது நஞ்சருந்துவேன் என அவர் மிரட்டுகிறார். ஆகவே என்ன செய்வது எனத் தெரியாத குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
ஒசமா பின்லேடன் பேரப் பிள்ளைகளை சுமந்த வாடகைத் தாய் மீது தாக்குதல் -கர்ப்பம் கலைந்தது (வீடியோ இணைப்பு)
|
விசித்திர பறக்கும் பொருள் ஒன்றினால் சீன விமான நிலையத்தில் பரபரப்பு!
மேற்படி சம்பவமானது சீனாவின் மங்கோலிய மாகாணத்திலுள்ள பவோடாவு விமான நிலையத்திலேயெ இடம்பெற்றுள்ளது.
இதனால் அவ்விமான நிலையப் பகுதி, பெரும் பரபரப்புக்குள்ளானதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேற்படி பொருளினை அவதானித்த விமான நிலைய அதிகாரிகள், அங்கு தரை இறங்கவிருந்த விமானங்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக தரை இறங்கவும் அனுமதிக்கவில்லை.
பதிலாக அவ்விமானங்களில் சில வானத்தில் பயணத்தைத் தொடரும்படியும் மற்றவை அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கும் படியும் பணிக்கப்பட்டன.
இந்த வருடத்தில் சீனாவில் தென்பட்டதாகக் கூறப்படும் மூன்றாவது இனங்காணப்படாத பறக்கும் பொருள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வ செய்தி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் சீனாவில் தென்பட்டதாகக் கூறப்படும் பறக்கும் பொருளொன்றின் காணொளி.
30 செக்கனில் ஒரு தேங்காயைப் பற்களால் உறித்துச் சாதனை!
இவர் காங்கேயனோடைப் பிரதேசத்தில் வைத்து அங்கு நடைபெற்ற நோன்புப்பெருநாள் கலை நிகழ்ச்சியின் போது இச்சாதனையை நிகழ்த்தினார். __
நாஸா கொள்வனவு செய்துள்ள ரோபோ தெஸ்பியன்
மேற்படி ரோபோவானது நகைச்சுவையுணர்வு உடையதும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியதுமாகும்.
இது அடர்த்தியான காற்றினால் (கொம்பிரஸ் எயார்) வழுவூட்டப்படுகின்றது.
இது முற்றிலும் அலுமினியத்தினால் ஆக்கப்பட்டதாகும்.
மேற்படி ரோபோவானது கோர்னிய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டதாகும்.
தற்போது இது நாஸாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
5 அடி 9 அங்குலமான இந் ரோபோ புளோரிடாவில் உள்ள கெனடி விண்கல நிலையத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்காக நாஸா மேற்படி நிறுவனத்திற்கு 70,520 யூரோக்களை செலுத்தியுள்ளது.
மேலும் நாஸாவின் R2 எனப்படும் முக்கிய விண்வெளி செயற்திட்டத்திற்கு இது அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தொடுதிரையுடன் கூடிய இண்டர் பேஸினைக்கொண்டுள்ள மேற்படி ரோபோவானது அதன் செயற்பாடுகளை முன்கூட்டியே புரோகிராம் செய்துகொள்ளமுடியும்.
ரோபோ தெஸ்பியன் 2001 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தடுமாறும் நிலையில் 'அடோப்'
இந்நிலையில் அதன் மற்றுமொரு மென்பொருளான 'பிளாஷ்'ஷிலும் குறைபாடுகள் உள்ளன என அது தற்போது அறிவித்துள்ளது.
மேற்படி பிளாஷில் உள்ள குறைபாட்டை தாம் 2 வாரங்களிலும், ரீடரில் உள்ளவற்றை 3 வாரங்களிலும் நிவர்த்தி செய்வதாக அது அறிவித்துள்ளது.
இக்குறைபாடுகளைப் பயன்படுத்தி 'விண்டோஸ்' கணினிகளைத் தாக்குவதாகவும் இதன் காரணமாக தாக்குதல் நடத்துபவர்கள், கணினியை முற்றாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சாத்தியப்பாடும் உள்ளதாக 'அடோப்' தெரிவித்திருந்தது.
எனினும் மேற்படி குறைபாடு மெக், லினக்ஸ், சொலாரிஸ் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் ஆகியவற்றுக்கான பிளாஷிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்திசெய்ய 'மைக்ரோசொப்ட்' மற்றும் 'அடோப்' என்பன துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனக் குழப்பத்தைப் போக்க கை கழுவுங்கள்
முகத்தைக் கழுவினால் எப்படி புத்துணர்ச்சி கிடைக்கிறதோ அது போல கையை கழுவும் போது மனக் குழப்பம் அகல்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக உளவியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
சிக்கலான நேரங்களில் கை கழுவிவிட்டு வந்தால் தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைகளை சுத்தம் செய்வதும உடலியல் ரீதியாக அழுக்கு, கிருமிகளை மட்டும் சுத்தம் செய்வதில்லை.
உளவியல் ரீதியாக அந்த நேரத்துக்கு முந்தைய குழப்பங்கள், அவசியமற்ற பழக்கங்களில் இருந்தும் விடுதலை தருவதாக அமைகிறது. எனவே குழப்பங்களுக்கு தீர்வு காண்பது எளிதாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நாமும் ஏதேனும் பிரச்சினையில் சிக்கி குழம்பும் போது கையை கழுவிவிட்டு யோசிப்போம். தீர்வு கிட்டும் என்று நம்புவோம்.
Subscribe to:
Posts (Atom)