Thursday, February 10, 2011
FACEBOOK:நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?
இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்
தனது பச்சிளங்குழந்தையை உயிருடன் சாப்பிட்ட மாமனிதன்
இந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள தபுபில் புறநகரைச் சேர்ந்தவன் ஒரு சூனியக்காரன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவன், பில்லி சூனியம் செய்வதை தொழிலாக கொண்டிருந்தான். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் ஒரு பூஜை நடத்தி உள்ளான். அந்த பூஜைக்கு தனது பச்சிளங்குழந்தையை நரபலியாக கொடுக்க முன்வந்தான். அதுவும், அந்த குழந்தையை உயிருடனேயே கடித்து சாப்பிட்டிருக்கிறான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவனையும் அவனது செயலுக்கு உடந்தையாக இருந்த அவனது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். எனினும், குழந்தை இறந்து விட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். |
முன்று கால்களுடன் பிறந்த சீன குழந்தை
இக்குழந்தைக்கு அண்மையில் சீன மருத்துவர்களினால் சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டு கால்கள் அகற்றப்பட்டுள்ளது.
இந்த மூன்று கால்களுடன் பிறந்த சீனக்குழந்தையின் படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்
அதே நேரத்தில் டி.வி.யில் குழந்தைகள் பார்க்க முடியாத அளவு ஆபாச காட்சிகளும் இடம் பெறுகிறது.எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது அந்த காட்சிகளை பெற்றோர் தடைசெய்ய படாதபாடு படுகின்றனர். அதே சமயம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் சில ஆபாச காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதிய வழிவகையை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது ஆபாச காட்சிகளுடன் கூடிய டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதபடி செய்ய புதிய ரிமோட் கண்ட்ரோலை வடிவமைத்து தயாரித் துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டெம்ப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெக்டியல் காலன் தலைமையிலான விஞ்ஞானிகள் இதை தயாரித்துள்ளனர்.இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கவில்லை. சாதா ரணமாக ரிமோட் கண்ட் ரோலில் சிறிது மாற்றம் செய்து உள்ளனர். |
கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டுபிடிப்பு
இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். சுமார் 19 “இஞ்ச்” நீளமுள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.அந்த எலும்புகள் “ 1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன. இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். |
Subscribe to:
Posts (Atom)