Wednesday, September 1, 2010

எந்திரன்... அமெரிக்க விநியோக உரிமையைப் பெற்ற 'FICUS' மூவீஸ்!

  `சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியுள்ளது 'பிகஸ் மூவீஸ்' (FICUS Movies) நிறுவனம்.

தெலுங்குப் படங்களை வெளிநாடுகளில் விநியோகிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம் இது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான அனைத்துப் படங்களையுமே இந்த நிறுவனம்தான் வெளிநாடுகளில் விநியோகித்துள்ளது. மிகப் பெரிய விலைக்கு இந்த உரிமையை சன் பிக்சர்ஸ் விற்றுள்ளது.

இதுகுறித்து பிகஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எந்திரன்" தமிழ்ப் படம் மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான ரோபோ ஆகியவற்றின் அமெரிக்க உரிமையை பிகஸ் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பெருமைக்குரிய இந்தப் படத்தை விநியோகிக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள விஞ்ஞானப் படம் எந்திரன் - தி ரோபோ. தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் முதல் விஞ்ஞானப் படம். உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். மாட்ரிக்ஸ், தி போர்பிட்டன் கிங்டம் போன்ற படங்களின் ஸ்டன்ட் இயக்குநர் யான் வூ பிங்தான் எந்திரன் சண்டைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர். அவருடன் பீட்டர் ஹெயினும் இணைந்துள்ளார்.

ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, ஜூராஸ்ஸிக் பார்க் என ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் பிரமிக்க வைத்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ எந்திரனுக்கு அனிமேட்ரானிக்ஸ் பணிகளைச் செய்துள்ளது. ரத்னவேலுவின் உயர்தர ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் எல்லாமே சிறப்பான முறையில் இணைந்த படம் இது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு ராஜூ சுந்தரமும் க்ளாடியா ப்ரக்மானும் இணைந்து நடனம் அமைத்துள்ளனர்.

படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் லைட் அண்ட் மேஜிக் நிறுவனம் செய்துள்ளது.அவதார், ஸ்டார் வார்ஸ், டைடானிக் போன்ற மெகா ஹிட் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்தவர்கள் இந்த நிறுவனத்தினர்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் ஸ்பெஷல் எஃபெக்டுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் உலக சினிமா ரஜினியின் எந்திரன்.

இந்த சிறப்பான படத்தை வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த புல்லாராவ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்...," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது

சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர்.
இது குறித்து நியூயார்க் போஸ்ட் பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார். ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு நல்ல அடி கொடுத்தனர். தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது

என் சிறுகதையை படமாக்கிவிட்டார்கள்: எந்திரன் படத்திற்கு தடை கோரும் பத்திரிகையாளர்


ரஜினிகாந்த் நடித்து செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது எந்திரன் படம். இது இயக்குநர் ஷங்கரின் கனவுப்படம். 150 கோடி பட்ஜெட்டில் கலாநிதிமாறன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாகிறது.

எந்திரன் சினிமா என் 10 வருட கனவு’ என்று ஷங்கர் சொல்லிவருகிறார். அமரர் எழுத்தாளர் சுஜாதா இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

தீய சக்திகளை அழிக்க விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜியை உருவாக்குவது மாதிரி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் ஷங்கர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரும் பட்ஜெட் படமான எந்திரன் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாகவிருக்கிறது. ஐஸ்வர்யாராய் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

நவீன ஊடகம்’பத்திரிகை நடத்திவரும் இளங்கோவன், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எந்திரன் படத்திற்கு தடை கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’கட்ந்த 2000ம் வருடத்தில் ஆனந்த விகடன் இதழில் எந்திரன் பற்றி கவிதை எழுதினேன். பிறகு அதே ஆனந்த விகடனில் எந்திரன் பற்றி சிறுகதை எழுதினேன். இவை இரண்டையும் அடிப்படையாக வைத்துதான் எந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

என் அனுமதி இல்லாமல் என் கதையை திருடிவிட்டார்கள். எனவே, எந்திரன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று அல்லது நாளை நீதிபதியின் முன் விசாரணைக்கு வரவிருக்கிறது.

ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது

எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.
ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.
முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.
இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.
ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.
நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது.

கேரளாவில் மீண்டும் சர்ச்சையைக்கிளப்பும் கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை

கேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார். அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ் திரிகளை “செக்ஸ்” கொடு மைக்கு ஆளாக்கு வதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது இதே போன்ற புத்தகம் ஒன்றை பாதிரியார் ஒருவர் எழுதி இருக்கிறார். அவரது பெயர் கே.பி.சிபு.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அவர் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்து அதில் இருந்து விலகியவர். தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.

அவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

புத்தகத்தில் பாதிரி யார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.

பாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. முத லாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.

இந்த புத்தகம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதி முன்னால் பெண்ணை கடத்திய கும்பல்

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் நுழைந்து நீதிபதி முன்னாலேயே பெண்ணை கடத்திச்சென்ற சம்பவம் அரியானாவில் நடைபெற்றுள்ளது.
அரியானா மாநிலம் ரிவாரி என்ற இடத்தை சேர்ந்த இளம் பெண் பூனம். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பூனம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி பூனம் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பாக பூனத்தின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் பூனம் தனது காதல் கணவருடன் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்தார். கூடுதல் செசன்சு நீதிபதி ஜே.ஆர்.சவுகான் முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது பூனத்தின் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக கோர்ட்டுக்குள் நுழைந்து பூனத்தை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.

நீதிபதி மற்றும் வக்கீல்கள் அனைவரின் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் ஆயுதங்களுடன் வந்து இருந்ததால் யாராலும் அதை தடுக்க முடியவில்லை.

இது பற்றி போலீசில் புகார் கூறப்பட்டது. அவர்கள் பூனத்தை கடத்தியவர்களை தேடிவருகின்றனர்.

தற்கொலை செய்ய அனுமதி கேட்டு வழக்கு தொடுத்துள்ள 70 வயது பெண்மணி

முதுமையில் யாருமின்றி தனியாக நோய்களுடன் வாழும் 70 பெண்மணி ஒருவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஹரி பாசம்மா (வயது 70). இவர் பெங்களூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியதாவது:-

முதுமையில் இருக்கும் என்னை கவனித்து கொள்ள எனக்கு வாரிசுகள் யாரும் இல்லை. உறவினர்களும் இல்லை. இடுப்பு “டிஸ்க்” பகுதி விலகி வலியால் அவதிப்படுகிறேன். மூட்டு வலியும் உள்ளது. நீரிழிவு நோயாளி.

இதனால் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் ஒரேடியாக செத்து விட முடிவு செய்து உள்ளேன். நான் சாவை சந்தோஷமாக வரவேற்கிறேன். எனவே நான் சாவதற்கு அனுமதி தர வேண்டும்.

தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் நான் சட்டத்தை மீற விரும்ப வில்லை. எனவே நான் சாவதற்கு சட்ட ரீதியாக அனுமதி தரவேண்டும். விஷ ஊசி போன்றவற்றை கொடுத்தால் அதன் மூலம் உயிரை விட தயாராக இருக்கிறேன்.

இவ்வளவு கஷ்ட நிலையிலும் நான் உலகுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு பலர் உதவி செய்வதாக கூறுகிறார்கள். ஆனாலும் என் வலியையும், அவதியையும் நான்தானே தாங்கி கொள்ள வேண்டும். அது என்னால் முடியவில்லை. எனவே சாவுக்கு அனுமதி கொடுங்கள்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அவருக்கு இருக்கும் நோயை குணப்படுத்த முடியுமா? என்று டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார்.

ஹரிபாசம்மா சாவுக்கு அனுமதி கேட்டு ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு எந்த பதிலும் இல்லாததால் ஐகோர்ட்டை நாடியுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை

மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.அப்போது கறுப்பு மினி ஸ்கர்ட, டி-சர்ட் மற்றும் ஹை கீல்ஸ் செருப்பு அணிந்திருந்தார். அதற்கு மேல் கறுப்பு நிற கவச உடை அணிந்திருந்தார். இது தங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது என கூறி அவரையும், அவரது தோழிகளையும் போலீசார் கைது செய்தனர். ஆண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்த குற்றத்துக்காக 40 சவுக்கடி வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.
இதை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து தெக்ரானில் ராச்சிக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு தனி அறையில் வைத்து ராச்சியை சவுக்கால் அடித்தனர்.அந்த அறைக்கு முன்பு அவரது பெற்றோர் காத்து நின்றனர். சவுக்கடியை தாங்காமல் அவர் அலறியதை கேட்டும் சத்தமின்றி மவுனமாக கண்ணீர் வடித்தபடி நின்றனர்

2020இல் ஹைட்ஜன் அணு உலை : ஈரான் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்குள் அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணு உலையை (Fusion Reactor) வடிவமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அணுக் கருக்குகள் ஒன்றிணைந்து பிறகு ஒரு நேரத்தில் வெடித்து வெளியிடும் பன்மடங்குச் சக்தியை அடிப்படையாகக் கொண்டது ஹைட்ரஜன் அணு சக்தியாகு்ம். பொதுவாக அணு ஆயுதங்களைத் தயாரிக்க மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் இந்த அடிப்படையைக் கொண்டு, அணு மின் தயாரிப்பை செய்யும் அணு உலையை வடிவமைக்க ஈரான் முடிவு செய்திருப்பது அறிவியல் - தொழில் நுட்ப ரீதியான பெரும் சவாலான இலக்காகும்.
ஹைட்ஜன் அணு சக்தி ஆய்வில் ஈடுபட்டுவரும் ஈரான் அமைப்பின் தலைவரான அஸ்கார் சேதிக்ஜாடே இதனைத் தெரிவித்ததாக இஸ்னா என்றழைக்கப்படும் ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றிட 100 தொழில்நுட்ப நெறிஞர்களை பணியில் சேர்க்கப்போவதாகவும் அஸ்கார் தெரிவித்துள்ளார் என்று அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி" என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமான இந்தப் படங்கள் சிலிர்க்க வைப்பதாக உள்ளது. (படங்கள் இணைப்பு)







உலக மக்களால் மறக்க முடியாத பெயர் டைட்டானிக். 1912ம் ஆண்டு 1500பேருக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அன்டார்க்டிக் கடலில் சென்று கொண்டிருந்த உலகின் புகழ் பெற்ற சொகுசுக் கப்பலான டைட்டானிக், பெரிய ஐஸ் மலையில் மோதி கடலில் மூழ்கியது.

அதுதான் பிரமாண்டமான டைட்டானிக்கின் முதல் சொகுசுப் பயணமாகும். கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அத்தனை பேருமே ஜல சமாதி அடைந்தனர்.

மூழ்கிப் போய்விட்ட கப்பலை இதுவரை மீட்க முடியவில்லை. அவ்வப்போது டைட்டானிக்கை அடையும் அகழ்வுப் பணிகள் நடந்தபடி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் புதைந்து கிடக்கிறது.

தற்போது கனடாவைச் சேர்ந்த ஒரு குழு டைட்டானிக் குறித்த புதிய புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரை இல்லாத மிகத் துல்லியமாக உள்ளன இந்தப் படங்கள். ரோபோட் மூலம் இந்தப் புகைப்

படங்கள் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28-ம்தேதி இந்தப் படங்களை பிரீமியர் எக்ஸிபிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் டைட்டானிக் கப்பலின் முகப்புப் பகுதியின் மேல் பகுதி தெளிவாக தெரிகிறது. முகப்புப் பகுதியின் மேல் பகுதியில் உள்ள தடுப்புக் கம்பி உள்ளிட்டவை அப்படியே இருக்கிறது. கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நங்கூரம்கூட அப்படியே காணப்படுகிறது.

இமேஜிங் டெக்னாலஜி மற்றும் சோனார் சாதனங்கள் மூலம் இந்தப் புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்துள்ளது கனடிய குழு. டைட்டானிக் கண்டுபிடிப்பு முயற்சியில் முதல் முறையாக இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை கனடிய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்திடம்தான் புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலின் உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலிலிருந்து எதையாவது கண்டுபிடித்தால் அதை இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கடல் பகுதியில் டேனியல் என்ற புயல் வீசிக் கொண்டிருப்பதால், வானிலை மோசமடைந்துள்ளது. இதனால் ஆய்வுக் குழு கனடாவில் உள்ள நியூபவுன்லேன்ட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளது. கடல் அமைதி அடைந்ததும் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் படத்தை எடுத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும்கூட படத்தை எடுப்பதற்கு முன்பு நேரடியாக அகழ்வாராய்ச்சியில் இறங்கி டைட்டானிக்கின் மேல் பக்கம் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டுதான் டைட்டானிக் குறித்த அகழ்வாராய்ச்சி நடந்தது.

சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த சிங்கள நபர்! 26 ரூபாவுடன் யாழில் முக்கிய இடங்களை பார்வையிட்டார்

மாத்தறை தெனியாய பிரதேச தன்பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச்சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
யுத்தம் முடிவுற்றதையடுத்து பெரும் எண்ணிக்கையில் தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பதைக் கேள்விப்பட்ட இவர் தமது சைக்கிளிலேயே யாழ்ப்பாணம் சென்றால் என்ன? என்ற எண்ணத்துடன் யாழ்.வரத் தயாரானார்.
சைக்கிளில் நெடுந்தூரம் தனியாகப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாமென அவரது குடும்பத்தினர் அவருக்குத் தடைபோட்டனர். ஆனாலும் அவர் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தன்னம்பிக்கையுடன் தமது பயணத்தை ஆரம்பித்தார். ஒரு வார்த்தைகூட தமிழில் பேசத் தெரியாத, யாழ்ப்பாணம் செல்லும் பாதை கூட அறியாத அவர் தமது பயணத்தை ஆரம்பித்தபோது கைவசமிருந்த பணம் ஆக இருபத்தியாறு ரூபா மட்டும்தான்.
தைரியம், தன்னம்பிக்கையுடன் தெனியாயவில் இருந்து புறப்பட்டு வவுனியாவை அடைந்து அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் வரையில் எந்தவொரு சிரமத்துக்கும் அவர்முகம் கொடுக்கவில்லை. யாழ்ப்பாணம் வந்த பின்னரே அவரது சைக்கிளின் நடு அச்சு உடைந்து போனது. எனினும் இராணுவ முகாமொன்றின் சிப்பாய்களின் உதவியால் அது புதிதாக மாற்றப்பட்டது.
பகல் பொழுதுகளில் தமது பயணத்தை மேற்கொண்ட ரத்னபால இருள் சூழும் போது பொலிஸ் நிலையமொன்றிலோ அல்லது இராணுவ முகாமொன்றிலோ புகலிடம் கோரி அங்கு தங்கிக் கொண்டார். தங்குமிடமும் உணவும் கூட அவருக்கு அங்கு கிட்டியது.
யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் அனைத்துக்கும் அவர் செல்லத் தவறவில்லை. பொலிஸாரும், இராணுவத்தினரும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியிருந்தனர்
நயினாதீவுக்கும் அவர் சென்றிருந்தார். யாழ்.பொது நூலகம் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. தமிழ் மொழி தெரியாததால் தமிழ் மக்களுடன் தம்மால் உறவாட இயலவில்லையேயென அவர் பெரிதும் கவலைப்பட்டார்.
இருந்த போதிலும் அவர்கள் அன்புடன் தம்மை அரவணைத்து உணவு, பானங்கள் வழங்கி உபசரிப்புப் பண்புடன் நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆக 26 ரூபாவுடன் தனது வீட்டிலிருந்து புறப்பட்ட ரத்னபாலாவுக்கு வழிப் பயணத்தின்போது உணவு, பானங்களுக்காக மூவாயிரத்து 900 ரூபா செலவழிந்தன. அவ்வளவும் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மூலமாகவும், வேறு அன்புள்ளங்களிடமிருந்தும் கிடைத்தன.
யாழ்ப்பாணத்தைக் கண்டு களிப்புற்று தமது அபிலாஷையை நிறைவேற்றிக் கொண்ட அவர் கடந்த 29ஆம் திகதி தமது சொந்த ஊரான தெனியாய நோக்கிப் புறப்பட்டார்.

இரு கால்களுடன் ஜனவரியில் பிறந்த ஆடு இன்னமும் உயிருடன்!

  சீனாவின் சாண்டொங் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று இன்று வரை உயிர் வாழ்ந்து வருவது அனைவரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது. 

எனினும் இதன் நீண்ட ஆயுட்காலம் தொடர்பாக அமெரிக்காவைச்ச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

மேற்படி ஆட்டுக் குட்டியானது சாண்டொங் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமானதாகும். 

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவ்விவசாயி இக்குட்டி பிறந்தவுடன் இதன் உருவத்தைக் கண்டு இதன் ஆயுட்காலம் தொடர்பாக தாம் சந்தேகம் கொண்டதாகவும் எனவே இதனை தாம் குப்பையில் வீசிவிட எண்ணியிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். 

"இது தற்போது குட்டியாக இருப்பதால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இது 125 பவுண்ட்ஸ் எடை வரை வளரக் கூடியது. எனவே எதிர்காலத்தில் இந்தப் பாரத்தினை இவ்விரு கால்களினால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது" என விலங்கியல் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இதற்கான நிரந்தரத் தீர்வு செயற்கையாக மேலும் இரு கால்களைப் பொருத்துவதே எனவும் ஆலோசனை தெரிவிக்கப்படுகின்றது. 

பொதுவாக இவ்வாறு அதிசயத்துடன் பிறக்கும் ஜீவராசிகள் பிறந்த ஓரிரு தினங்களில் இறந்து விடுவதுண்டு. ஆனால் இந்த ஆட்டுக் குட்டிக்கு ஆயுசு கெட்டித் தான் போலும். கடந்த எட்டு மாதங்களாக உயிருடன் இருக்கின்றதே...! _

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் இனி தங்கும் காலம் குறைவு

  ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், வேகமாக அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தினரை திரும்பப் பெறுவதில் அதிபர் ஒபாமா தீவிரமாக இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ், 2003ஆம் ஆண்டு படைகளை அனுப்பி சதாம் உசேனுக்கு எதிராக போர் தொடுத்தார். அது முதல் கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் தங்கி விட்டன.

தற்போதைய அதிபர் ஒபாமா தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்க படைகளை வாபஸ் பெற போவதாக தெரிவித்திருந்தார். இவரது வாக்குறுதி படி ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு விடும் என, ஒபாமா அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதியின் ஒரு கட்டமாக நேற்று முதல், ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்க படைகள் நிறுத்தி கொண்டன.

தற்போது ஈராக்கில் தங்கியுள்ள அமெரிக்கப் படைகள், ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவார்கள்.இதனிடையே ஈராக்கில் பணி முடித்து டெக்சாஸ் மாநில முகாமுக்கு திரும்பிய ராணு வீரர்களிடையே ஒபாமா நேற்று உரையாற்றினார். _

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' (காணொளி இணைப்பு)

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.

இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..

இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.

இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.

நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.

மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.

தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.

பேஸ்புக் போட்டியாக டயஸ்போரா(காணொளி இணைப்பு)

பேஸ்புக் நாம் அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம்.

இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி தளத்தினை உருவாக்குவதற்காக நியூயோர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 200,000 அமெரிக்க டொலர் பணத்தினைத் திரட்டினர்.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

இத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களை நோக்குமிடத்து பேஸ்புக்கின் அடிப்படை அம்சங்களான மல்டிமீடியா செயாரிங், ஸ்டேடஸ் அப்டேட், செட்டிங் வசதி என்பவற்றைக் கொண்டுள்ளது.

இதனுடன் வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினையும், இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதியினையும் கொண்டமையவுள்ளது.

இதன் சிறப்பம்சம் இது ' ஓப்பன் சோர்ஸ் ' என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும்.