Sunday, October 10, 2010
இன்று கூகிளில் ஜோன் லெனன், இசையுடன் அசை படம் !
அதிக வசதிகளுடன் ஒரு இலவச ஆன்லைன் வீடியோ எடிட்டர்.
ஏற்கனவே இந்த தளத்தை பற்றி சிலர் அறிந்திருக்கலாம் எனினும் தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்புன் மூலம் வீடியோ எடிட்டிங்க் செய்வதில் இன்னும் பல வசதிகளை இலவசமாக உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
உங்களிடம் வெப்கமெராவும் ஒலியைப் பதிவு செய்யும் வசதியும் இருந்தால் Slow motion effects, Green Screen feature , வீடியோ கலரிங்க் போன்ற ஏராளமான வசதிகளுடன் வீடியோவை உருவாக்கவும் முடிகிறது.
இந்த தளத்தில் இலவசமாக பதிவு செய்வதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். முகப்பில் தெரியும் டாப் வடிவமைப்பில் வீடியோ, படங்கள், ஆடியோ, எழுத்துக்கள், எபெக்ட்ஸ்கள் போன்றவற்றை தேர்வு செய்து வீடியோவை விரும்பிய வடிவில் இணைக்கவும் முடிகிறது.
இணைய முகவரி - http://jaycut.com/
அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone
கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். Verizon வலையமைப்பில் தொழிற்படத்தக்கவாறு ஐபோன் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பெருமளவான அன்ட்ரியோட் பாவனையாளர்கள் ஐபோனைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தொரிவிக்கின்றன. |
என்ன செய்யும் முத்தம்(வீடியோ இணைப்பு)
பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்....ஆனால் எல்லா ஆண்களும் பெண்களுக்கு பிடித்தமானதாக மிருதுவாக முத்தமிடுவதில் இருந்து தவறிவிடுகின்றனர். |
மேகம் கறுக்கும்போது முத்தமிடலாம்,
மேனி சிலிர்க்கும்போது முத்தமிடலாம்,
தென்றல் அடிக்கும்போது முத்தமிடலாம்,
சாரல் தெறிக்கும்போது முத்தமிடலாம்,
விண்மீன்கள் உதிரும்போது முத்தமிடலாம்
வெண்பனி சொட்டும்போது முத்தமிடலாம்
பூக்கள் மலரும்போது முத்தமிடலாம்
பகல் மெல்ல இருட்டும்போது முத்தமிடலாம்
பாதி இரவில் விழிக்கும்போது முத்தமிடலாம்
பொழுது விடியும்போது முத்தமிடலாம்
குயில்கள் கூவும்போது முத்தமிடலாம்
மரணத்திலும் முத்தமிட்டு
மரணத்தையும் வென்றுவிடலாம்.
முகம் சுளிக்காமல் பிரியமோடு இடும் முத்தத்திற்கு நிகர் வேறுதுங்க...?
இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.
அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.
முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை... ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.
முதலில் கணவன் மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.
ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!
சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!
குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு, முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.
வேகமான இரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன என்கிறார் மற்றொரு இத்தாலி நாட்டு நிபுணர்.
‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.
முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.
தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!
உறவைத் தூண்டும் முத்தத்தினை பெற்றுக்கொள்ள....
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?
அதற்கான சிலவழிமுறைகள் டீன்-ஏஜ் பிள்ளைகளின் முன்னால் சகட்டுமேனிக்குச் சண்டையிடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குள் விவாதங்கள் இருக்கலாம். அவை ஆரோக்கியமானதாக இருக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து மோதல்களானாலும், கடைசியில் ஒரு முடிவுடன் முற்றுப் பெறுவது அவசியம். இல்லையேல் பெற்றோரின் சண்டை, பிள்ளைகளைப் பாதிக்கும். மகளோ... மகனோ... குழப்பத்துடன் தென்பட்டால், முதலில் பெற்றோர் செய்ய வேண்டியது, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது. எந்த வேலை இருந்தாலும் ஓரமாகப் போட்டு, அவர்களை நிதானமாக, ரிலாக்ஸ்டாக விசாரியுங்கள். அவர்களின் குழப்பத்துக்கு தீர்வு தாருங்கள். 'உலகம் முழுவதும் கெட்டுப் போனாலும் தன் குழந்தை பரிசுத்தமாக இருக்க வேண்டும்' என்பதுதான் பெற்றோர்களின் தவிப்பு. அது தவறல்ல. அதற்காக குரூப் ஸ்ரடி, இன்ரநெட், போன் கோல் என்று எதற்கெடுத்தாலும் 'பிள்ளை கெட்டுப் போய்டுவானோ...' என்று கண்மூடித்தனமாகப் புலம்பாதீர்கள். டீன்-ஏஜ் பிள்ளைகளிடம் வெளிப்படையான உரையாடல் அவசியம். அவர்களின் விருப்பங்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள். 'இது தவறு, இது சரி, இதன் விளைவுகள் இவை' என்பதை 'பளிச்' என சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கருத்தும் அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் உறுதியும் குழந்தைகளுக்குப் புரிய வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே தொடர்ந்த உரையாடல்கள் மிக அவசியம். 'அம்மாகிட்ட சொன்னா... நல்ல அட்வைஸ் கொடுப்பாங்க...' என மகள் நினைக்குமளவுக்கு அம்மா நடந்து கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே இந்த பிணைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும். அதற்காக 'அட்வைஸ் சொல்கிறேன் பேர்வழி' என நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காதீர்கள். முதலில் அவர்களைப் பேசவிட்டு, அந்தச் சூழலை அலசி, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். 'என்ன சொன்னாலும் அம்மா இப்படித்தான் சொல்வாங்க' என ஒரு மைண்ட் செட் அவர்களிடம் உருவாகிவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் பகிர்தலுக்கே வரமாட்டார்கள். எந்த விஷயத்துக்கும் 'இது பற்றி ஏற்கனவே பேசியாச்சே...' என்று முற்றுப்புள்ளி வைக்க எண்ணாதீர்கள். சில விஷயங்களை அடிக்கடி பேச வேண்டும். கெட்ட விஷயங்களைத் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறது உலகம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, அதற்கேற்ப நல்ல விஷயங்களை அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பதும் அவசியம். உங்கள் குழந்தை செய்யக் கூடாத ஒரு தவறைச் செய்திருந்தாலும்கூட, உங்கள் குழந்தைக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என நம்பிக்கை ஊட்டுங்கள். இது, 'அம்மா, அப்பா எப்பவும் உனக்கு துணையா இருப்போம்' என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டுமே தவிர, 'வரட்டும் பார்த்துக்கலாம்டா...' என்று அவர்களின் தவறை ஊக்குவிப்பதாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சினிமாவுக்குப் போவது, அவுட்டிங் போவது சின்னச் சின்ன டீன் தேவைகளை, குறும்புகளை அனுமதியுங்கள். ஆனால், சிகரெட்... தண்ணி போன்றவையெல்லாம் தெரிய வந்தால், முளையிலேயே கிள்ளிவிடுங்கள். எதை அனுமதிக்கலாம், எது அறவே கூடாது என்பதில் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும். டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு அதீத பொறுமை அவசியம். திடீரென கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பிள்ளைகளை நிதானத்துடன் அணுகுங்கள். நீங்களும் உணர்ச்சிவசப்பட்டால் போச்சு. காரியம் கெட்டு விடும். டீன் பருவத்தில் கலவையான உணர்வுகள் மேலோங்கும். அதற்கெல்லாம் காரணம், அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது திடீர் விசிட் கொடுங்கள். ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுங்கள். பிள்ளைகளின் தேவை என்ன என்பதை கவனியுங்கள். பிள்ளைகளைச் சமூகக் குழுக்களில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து பேசுங்கள். நல்ல பொழுதுபோக்குகளுக்கு உற்சாகமூட்டுங்கள். அடிக்கடி வெளியே சுற்றுலா செல்லுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் கேட்டறியுங்கள். இதெல்லாம் டீன்-ஏஜ் பருவத்தை வளமாக்கும். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் மேல் ஒருவேளை உங்களுக்குத் திருப்தியில்லை என்றாலும், ''இனிமே அவன்கூட சேர்ந்து சுற்றுவது தெரிஞ்சால் என்ன பண்ணுவேன் பாரு...'' என்று அதை அவர்களிடம் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். அந்த எதிர்ப்பு, அவர்களின் நட்பை இன்னும் நெருக்கமாக்கும். மாறாக, உங்கள் பிள்ளைக்கு அந்த நண்பரை பிடிப்பதற்கான காரணங்களை இதமாகப் பேசி தெரிந்துகொண்டு, உங்களுக்கு அந்த நண்பரை பிடிக்காததற்கான காரணத்தையும் நிதானமாக உங்கள் பிள்ளையிடம் தெரிவியுங்கள். எந்த தரப்பின் காரணங்கள் வலுவாக இருக்கிறதோ, அதன்படி முடிவெடுங்கள். இன்றைய இளசுகளின் கவச குண்டலம், செல்போன். எனவே, அதைப் பார்த்து டென்ஷன் ஆகாதீர்கள். அவர்கள் வீட்டில் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை முதலில் லிமிட் செய்யுங்கள். பின், அதை தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மெல்ல மெல்ல சொல்லிக்கொடுங்கள். வரும் முன் காப்பது நலம். செல்போன் வாங்கிக்கொடுத்து, நெட் கனெக்ஷன் கொடுத்து, பைக் வாங்கிக்கொடுத்து என அனைத்தையும் செய்துவிட்டு, பின் அதில் அவர்கள் பொழுதை வீணாக்குவதை சொல்லிப் புலம்பி பயனில்லை. எனவே, உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கிக்கொடுங்கள்... அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் அல்ல! டீன்-ஏஜ் பிள்ளைகளின் ரகசிய சிநேகிதன், கண்ணாடி. அதற்காக, ''எப்பா பார்த்தாலும் கண்ணாடி முன்னாலயே நின்னுட்டு...'' என்று அவர்களை பழித்து பல்லவி பாடாதீர்கள். அவர்களது வயதையும், நிலையையும் புரிந்து கொண்டு இது போன்ற விஷயங்களில் சில வேளைகளில் அவர்களோடு கூடவே இருந்தும், சில நேரங்களில் கண்டும் காணாமல் நாசூக்காக நடந்து கொண்டால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்'தான். பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி குறித்து பெற்றோர் பயப்படக் காரணம், அதுகுறித்த தெளிவு இல்லாததுதான். பாலியல் கல்வியில் உடல் ஆரோக்கியம், தகாத உறவுகள், அதன் விளைவுகள், அதனால் பாதிக்கப்படப் போகும் எதிர்காலம், கலாசாரம், குடும்ப சூழல் என அனைத்தும் ஆழமாக உணர்த்தப்படும். பாலியலில் டீன்-ஏஜ் பருவத்தினருக்கு எழும் கிளர்ச்சியைத் தாண்டி அதிலுள்ள விளைவுகளையும் புரிய வைப்பதே பாலியல் கல்வியின் நோக்கமாக இருக்கும். எனவே, பதற்றம் வேண்டாம் பெற்றோர்களே! |
புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group
அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது. இப்போது உங்கள் குடும்ப photo வை உங்களது உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது ஒரு இணைய தள முகவரியினை உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே மட்டும் பகிரலாம். மேலும் நாங்கள் குழுவாக சேர்ந்து chat ம் பண்ணலாம். உங்கள் நண்பர்களிடையே குழுக்களை உருவாக்கி எமது தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இந்த புதிய Groups தந்துள்ளது. பலரும் எதிர்பார்த்த ப்ரைவசி இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. நான் சொல்வதைவிட நீங்கள் செய்து பார்க்கும் போது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கும். இப்போதோ உங்கள் நண்பர்களிடையே ஒரு குழுவினை உருவாக்கி பயன்படுத்திப்பாருங்கள். |
யாகூ நிறுவனம் சுவிட்சர்லாந்தில் தகவல் மையமொன்றை அமைப்பதற்கு தீர்மானம்
இத்தாலியப் பிரதமரின் உடற் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட சவர்க்காரம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
கடல் அசுத்தங்களை சுத்தமாக்க ரோபோ மீன்(வீடியோ இணைப்பு)
கடல் அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்கான கருவியை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. கடலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு அது கடலில் அசுத்தங்களை ஏற்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றன.
கடலில் இதுபோன்ற அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்காக கருவியான ரோபோ மீனினை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோ மீனில் விசேஷமான சென்ஸர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனூடாக கடலில் எங்கே மாசு படிந்திருக்கின்றது?, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்
உலகின் செல்வந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு
தனிநபர் சொத்துக்களின் சராசரியின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து செல்வந்த நாடாக திகழ்வதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'கிரடிட் சூசி' ஆய்வு மையத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் தனி நபர் ஒருவரின் சராசரி சொத்துக்கள் 372692 சுவிஸ் பிராங்குகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சொத்துக்களின் பெறுமதி 60 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. நோர்வே, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவீடன், அமெரிக்கா, லக்ஸ்ம்பர்க், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளை வகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதேவேளை, ஆசிய பசுபிக் நாடுகளில் அநேக செல்வந்தர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
கனடாவில் காதல் ஜோடியை வானில் இழுத்துச் சென்ற தகப்பன்
தனது காதலுக்கு தந்தை விருப்பம் தெரிவிக்காமையினால் குறித்த மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அனிதா என்ற 16 வயதுடைய சிறுமியே 18 வயதுடைய தனது காதலனுடன் இவ்வாறு சென்றுள்ளார்.
இதனையடுத்து அனித்தாவின் அக்காவான ஜெனிதாவும், அவருடைய கணவன் சுந்தரலிங்கமும் வீட்டைவிட்டு வெளியேறியவர்களை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் கனேடிய பாடசாலை ஒன்றிற்கு அருகில் அவர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற 43 வயது தந்தையான செல்வநாயகம் செல்லத்துரை தனது இளைய மகளையும் அவருடைய காதலனையும் வானில் இழுத்துச் சென்று மரத்தில் மோதியுள்ளார். அதன் பின்னர் தனது மூத்த மகளின் கணவரையும் அவர் தாக்கியுள்ளார்.
பலஸ்தீனிய சிறுவனை மோதிய இஸ்ரேலியரின் கார்: (வீடியோ இணைப்பு)
இது தொடர்பான காணொளிக் காட்சியானது, மேற்படி காரில் சிறுவன் மோதப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதையும் மற்றுமொரு சிறுவன் மோதமுற்படுவதையும் தெளிவாகக் காட்டுகின்றது.
இதன் பின்னர் ஏனைய சிறுவர்கள் அக்காரைத் தாக்குவதும் இதில் படமாக்கப்படுள்ளது. இத்தாக்குதலில் காரின் பின் கண்ணடி சேதமாக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினரால் ஹமாஸ் இயக்க சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சர்க்கஸ் பயிற்சியாளரையே தாக்கிய சிங்கங்கள் : உக்ரேனில் சம்பவம் (காணொளி இணைப்பு)
ஏன், யானைகூட தன்னைப் பராமரித்து வரும் பாகனை தும்பிக்கையால் தூக்கி அடித்துக் கொன்று விடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். தொலைக்காட்சிகளில் பார்த்தும் இருக்கின்றோமே.
பொதுவாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சாகசம் புரியும் விலங்குகள், தருணம் பார்த்து, தன்னைப் பழக்கியவரையே பலிவாங்கி விடும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
இது போன்ற சம்பவமொன்று அண்மையில் உக்ரேனில் இடம்பெற்றது.
உக்ரேயினின் எல்விவ் நகரில் உள்ள சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சிங்கங்களைப் பயிற்றுவித்து வந்தார் ஒருவர்.
கொட்டகையில் சிங்கங்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்த போது, திடீரென சிங்கங்கள் இவர் மீது பாய்ந்து இவரை மூர்க்கமாகத் தாக்கின.
எனினும் தெய்வாதீனமாக இவர் சிங்கங்களின் தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார். யார் செய்த புண்ணியமோ?
போதைப்பொருள் பாவனை: ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்
ஐ.எம்.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வளர்முக நாடுகளில் மது,போதை பாவனை அதிகரித்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் 17 நாடுகளை 'போதை பாவனை அதிகம் உள்ள நாடுகளாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சீனா, பிரேசில், ரஸ்யா, இந்தியா, மெக்சிகோ, துருக்கி, வெனிசுலா, போலந்து, ஆர்ஜன்டீனா, இந்தோனேசியா, உக்ரெய்ன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, எகிப்து, ருமேனியா, பாகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளே இவையாகும்.
இந்த அதிகரிப்பு வீதத்தினால் அந்த நாடுகள் பெரும் எதிர்விளைவுகளை ஏதிர்நோக்கும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.