Sunday, October 10, 2010

சர்க்கஸ் பயிற்சியாளரையே தாக்கிய சிங்கங்கள் : உக்ரேனில் சம்பவம் (காணொளி இணைப்பு)


காட்டு விலங்குகள் பாசம், நட்பு போன்ற மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவை. பழக்கமானவர்களைக் கூட, சமயத்தில் தாக்கக்கூடிய மூர்க்கமான குணம் கொண்டவை.

ஏன், யானைகூட தன்னைப் பராமரித்து வரும் பாகனை தும்பிக்கையால் தூக்கி அடித்துக் கொன்று விடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். தொலைக்காட்சிகளில் பார்த்தும் இருக்கின்றோமே.

பொதுவாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சாகசம் புரியும் விலங்குகள், தருணம் பார்த்து, தன்னைப் பழக்கியவரையே பலிவாங்கி விடும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

இது போன்ற சம்பவமொன்று அண்மையில் உக்ரேனில் இடம்பெற்றது.

உக்ரேயினின் எல்விவ் நகரில் உள்ள சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சிங்கங்களைப் பயிற்றுவித்து வந்தார் ஒருவர்.

கொட்டகையில் சிங்கங்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்த போது, திடீரென சிங்கங்கள் இவர் மீது பாய்ந்து இவரை மூர்க்கமாகத் தாக்கின.

எனினும் தெய்வாதீனமாக இவர் சிங்கங்களின் தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார். யார் செய்த புண்ணியமோ?

No comments:

Post a Comment