Saturday, February 12, 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?


பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும்  பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security  செல்லுங்கள் பின்னர்
அங்கு ஐபி முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும்.  இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம்.  அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும் , மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் திக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது sms இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.
இந்த வீடியோவில் பேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை சொல்லித்தருகிறார்கள்.


கணினியை பயன்படுத்தாத நேரத்தில் லாக் செய்யுங்கள்.


படத்தில் காட்டப்பட்டுள்ள கணினி ஸ்கீரின் லாக் செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமாகவிருக்கிறதா?

“Windows logo key + L”   ஐ அழுத்தியதும் இவ்வாறு லாக் செய்ய முடியும் அதற்காக clearlock என்ற சிறிய மென்பொருளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கணினியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது திடிரென பிரேக் எடுக்க வேண்டியிருக்கும் அல்லது வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியிருக்கும்,
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறு யாராவது வந்து உங்களின் முக்கியமான டேட்டாக்களை பார்த்திடமுடியாதவாறு செய்வதே இதன் பயன்பாடாகும். இந்த மென்பொருளில் சிறப்பு வசதியாக கணினியை லாக் செய்வதுடன் ஒரு டிரான்ஸ்பேரன்ட் ஸ்கீரினும் காட்டப்படுமாறு செய்யலாம்.

இதனால் கணினியின் முகப்பில் என்ன நடக்கிறதென்பதை பார்க்கமுடியும் ஆனால் அதை பயன்படுத்த பாஸ்வேர்ட் வேண்டும். இந்த டூலை தரவிறக்கி கணினியில் ரன் செய்யுங்கள் பின்னர் பாஸ்வேர்ட் கொடுத்ததும் லாக் செய்துவிடலாம்.

பொது இடத்தில் இருக்கும் கணினியில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு விடயத்தை ரன் செய்யும் போது இந்த டூல் மிகவும் பயன்தருவதாக இருக்கும். உதாரணமாக குறிப்பிட்ட பவர்பாய்ன்ட் பிரஸன்டேஷனை ரன் செய்துவிட்டு பின்னர் லாக் செய்தால் பார்வையாளர்கள் அதைப் பார்க்க மட்டுமே முடியும் கணினியை பயன்படுத்த முடியாது.

டவுண்லோட் இங்கே. http://www.snapfiles.com/get/clearlock.html


எம்.எஸ் வேர்ட்டின் DOCX பார்மட்டில் கோப்பைச் சேமிக்கும் புதிய இலவச மென்பொருள் Libre office.


விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் இயங்கக்கூடியதும், இலவசமாகவும்,
எம்.எஸ் வேர்ட்டின் .DOCX எனும் பார்மட்டிலேயே கோப்பைச் சேமிக்க  கூடிய வசதியையும் தருகின்ற Libre ஆபிஸின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. பிரபலமான ஓபன் ஆபிஸ் நிறுவனமே வேறு பெயரில் Libre ஆபிஸையும் வெளியிடுகிறது.
இதனது மேம்படுத்த பதிப்பின் வசதிகளை இங்கே காணலாம்.

டவுண்லோட் செய்வதற்கு

LibreOffice

பேஸ்புக்கின் CityVille வில் புதிதாக 20 பிரிவுகள் சேர்ப்பு


சோசல் இணையம் பேஸ்புக்கில் அதிக பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும்
Zyngas CityVille வில் புதிதாக 20 பிரிவுகளை(levels)  சேர்த்துள்ளனர்.  அதனது 100 மில்லியன் விளையாட்டாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவே இவ்வாறு செய்ததாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால் பேஸ்புக் தலை Mark zuckerberg  மற்றும் கூகுள் நிறுவனத்தை சேர்ந்த பலரும் இதில் விளையாடிவருகின்றனராம். சிட்டிவிலாவில் இருக்கின்ற எல்லா பிரிவுகளையும் (60 Levels) முதலில் விளையாடி வென்றவர் Electronic Arts எனும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை
அதிகாரியான Bing Gordon என்பவர் என்கிறார்கள். தற்போது சிட்டிவிலாவில் புதிய 20 பிரிவுகளுடன் மொத்தமாக 80 பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக். CityVille பக்கம்
இந்த விளையாட்டுக்கள் பற்றி இதுவரை தெரிந்திருக்காதவர்கள் கீழுள்ள இணைப்புக்களுக்கு சென்று ஒருமுறை பாருங்கள்.

ஒரே கிளிக்கில் சுயகுறிப்பு (Resume) தயார்!


எந்தத்துறையாயினும் அதில் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுகொள்ள உதவும் லிங்க்ட்-இன் என்ற தளத்தை பற்றி பலர் அறிந்திருப்பீர்கள்.
லிங்க்ட்-இன் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் உங்கள் ப்ரோபைலை அப்படியே அழகான ஒரு சுயகுறிப்பாக (resume)  மாற்றிக்கொள்ள உதவுகிறது resume builder.

இனிமேல் ஒரே கிளிக்கில் சுய குறிப்பு தயாராகிவிடும் அத்துடன் அதை பிடிஎவ் கோப்பாக சேமிக்கவும் பிரின்ட் செய்து கொள்ளவும் முடியும். மாற்றங்கள் செய்ய வசதிகளும் உண்டு.
இணைப்பு இங்கே http://resume.linkedinlabs.com/home/index

யூ.எஸ்.பி, சிடி/டிவிடி டிரைவில் இயங்கும் வெப் சேர்வர்.


யூஎஸ்பி. அல்லது சிடி/டிவிடி டிரைவ்களில் இயங்கக்கூடியது சேர்வர் டூ கோ என்ற போர்ட்டபிள் வெப் சேர்வர்.
நேரடியாகவே இயங்கும் இதற்கு மைஎஸ்கியூஎல் அல்லது அப்பாச்சி போன்றவற்றை கான்விகர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. standalone  இணையத்தள வடிவமைப்புக்கு உதவும் வகையிலும் PHP நிரலிகளை கொண்டு உருவாக்கவும் முடிகிறது.
ஜூம்லா மற்றும் Moodle போன்ற PHP சார்ந்த CMS க்களை இதன் மூலம் சிக்கல் இல்லாமல் இலகுவாக இயக்கலாம்.

இதனது சிறப்பம்சங்கள்

1. அப்பாச்சியை சார்ந்து இயங்கும் அனைத்து வசதிகளையும் கொண்டது.
2. அனைத்து உலாவிகளிலும் இசைவாக்கம் பெற்றது.
3. ஹோஸ்ட் பெயர் போர்ட் ஐ தானகவே கண்டறிந்துவிடும்

இதன் டேட்டாபேஸ்களை கணினியில் சேமித்துவிடும் வசதி


பி.டி.எவ் கோப்புக்களை பிரஸன்டேஷனாக மாற்றுங்கள்.


பி.டி.எவ் கோப்புக்களை அப்படியே பிரஸன்டேஷனாக மாற்றிவிட முடியுமா?
அவ்வாறானதொரு வசதியையே தருகிறது PDFrizator எனும் இலவச டூல். இதன் மூலம் உங்களிடம் இருக்கும் பிடிஎவ் பக்கங்களை transition effect, page advance time என்ற வசதிகளை கொண்டுவருவதுடன் பேக்ரவுண்ட் இசையையும் சேர்க்கமுடிகிறது.


5 சிறந்த சோசல் மீடியா மானேஜர்கள்


சோசல் மீடியா இணையத்தளங்கள் அனைத்திலும் கணக்குகளை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் அவற்றிற்கு ஒவ்வொருமுறையும் தனித்தனியே சென்று பார்வையிடத் தேவையில்லை.
சோசல் மீடியா மனேஜர்கள் மூலம் அனைத்தையும் ஒரே இடத்திலேயே கையாளமுடிகிறது. அப்படியான சோசல் மீடியா மனேஜர்களில் சிறந்த 5 ஐ பற்றி இங்கே காணலாம்.
1.Seesmic

இலவசமானதும் எல்லா இயங்குதளங்களிலும் இயங்கக்கூடிய சோசல் மீடியா மானேஜர் இதுவாகும். டாப் வசதிமூலம் உங்களுக்கு விருப்பமான சோசல் நெட்வேர்க்கை பதிவு செய்து வைத்திருக்கலாம். இதனது டெஸ்க்டாப் பதிப்பு பேஸ்புக், டுவிட்டர் லிங்க்ட் இன் என 50 சேவைகளுடன் இயங்கும் வல்லமை பெற்றது.

டவுண்லோட் இங்கே http://seesmic.com/
2. Digsby 

இந்த மென்பொருள் மின்னஞ்சல், சாட்டிங்க் , மற்றும் சோசல் நெட்வேர்க் வசதிகளை தருகின்றது.  சோசல் நெட்வேர்க் தளங்களின் ஸ்டேடஸ் மெசெஜ்களை படிக்கவும் வசதி உள்ளது.

டவுண்லோட் http://www.digsby.com/
3.TweetDeck

சோசல் நெட்வேர்க் தளங்களை கையாள இலகுவான வடிவமைப்புடன் கிடைக்கும் இந்த மென்பொருள் பிரபலமானதும் கூட

டவுண்லோட் http://www.tweetdeck.com/
4.Socialite

இந்த மென்பொருள் விளம்பரங்களுடன் வருகின்ற பதிப்பு இலவசமானது. புரோ பதிப்பை வாங்க வேண்டுமாயின்
$19.95 கட்டணம் செலுத்த வேண்டும்.

டவுண்லோட் http://www.apparentsoft.com/socialite

5. HootSuite 

ஐபோன் போன்ற மொபைல் பதிப்புக்களில் இயங்கக்கூடியது. சாதாரண பதிப்பு இலவசமானது.

டவுண்லோட் http://hootsuite.com/
தொடர்புபட்ட பதிவு

போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள்


போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன்.  போட்டோ ஷாப்பில்
அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசைதான் ஆனால் நேரம் இல்லை என்கிறீர்களா?

இனி கவலையில்லை ஒரு 25 நிமிடங்கள் ஒதுக்குங்கள் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் போட்டோ ஷாப்பின் அடிப்படைகளை 25 நிமிடங்களில் ஆங்கிலத்தில் சொல்லி தருகிறார்கள்.

ஆங்கிலத்தில் வேண்டாம் தமிழில் தான் கற்பேன் என்கிறவர்கள் கூகிளை இந்த இணைப்பில் நாடுங்கள்.

விண்டோஸ், லினக்ஸின் மல்டி பூட்டை யு. எஸ்.பி டிரைவில் ஒரே கிளிக்கில் உருவாக்கலாம்.


மல்டி பூட் செய்வதற்கு ஏராளாமான டூல்கள் கிடைக்கின்றன ஆனால்,
யு.எஸ்.பி டிரைவில் விண்டோஸ், மற்றும் லினக்ஸ் ஐ மல்டி பூட்டை எவ்வாறு நிறுவுவது? WinSetupFromUSB  என்ற டூலினால் முடியும்.
இதன் டூலின் மூலம் Windows XP, Windows Vista, Ubuntu , Windows 7 போன்ற இயங்கு தளங்களின் பூட்டிங்கை மல்டிபூட்டாக தேர்வு செய்து ஒரே கிளிக்கில் தயாரிப்பதற்கு முடிகிறது.
Download WinSetupFromUSB எனும் டூலை தரவிறக்கிய பின்னர் பார்மட் செய்யப்பட்ட யு.எஸ்.பியை கணினியில் உள்ளிடுங்கள்.

Download WinSetupFromUSB ஐ நிறுவி திறந்ததும் சரியான யு.எஸ்பி ஐ தேர்வு செய்து தேவையான இயங்கு தளங்களையும் தேர்வு செய்து பின்னர் GO பட்டனை அழுத்துங்கள். மல்டிபூட் யு.எஸ்.பி தயாராகிவிடும்.

டவுண்லோட் செய்ய


ஹாட்மெயிலில் தற்காலிக மின்னஞ்சல் முகவரியை பெறுவது எப்படி?

நாளுக்கு நாள் ஸ்பாம்களின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவற்றை தடுக்க ஒரே வழி தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியை கொடுப்பது மட்டுமே. தற்காலிக மின்னஞ்சல் தருவதற்கு பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் கட்டுப்பாடுகளும் உண்டு.

இதை விட்டு நீங்கள் பயன்படுத்திவரும் ஹாட்மெயில் சேவையிலேயே தற்காலிக மின்னஞ்சலை பெற்றுக்கொள்வதற்கு Hotmail Aliases என புதிய வசதியை உருவாக்கியுள்ளனர்.

இந்த முகவரிக்கு வருகின்ற மெயில்கள் உங்களின் இன்பாக்ஸுக்கே வந்துவிடும் அத்துடன் ஸ்பாம் தொல்லை அதிகரித்தால் அந்த முகவரியையே நீக்கிவிடலாம். தற்காலிக மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.

இந்த சேவை ஜிமெயிலில் இல்லை.

ஹாட்மெயில் முகவரி http://mail.live.com/

பயர்பாக்ஸ் , குரோம் உலாவி - சில நுட்பங்கள் ..


பயர்பாக்ஸ் மற்றும் கூகிள் குரோம் உலாவிகளை பயன்படுத்தும் போது தெரிந்திருக்க
வேண்டிய சில நுட்பங்களின் தொகுப்பு இங்கே.
பயர்பாக்ஸ் உலாவி சில டிப்ஸ் & டிரிக்ஸ்
பயர்பாக்ஸை எப்போதும் பிரைவட் மூட் இல் திறப்பதற்கு
பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு - Saved Password Editor
எங்கிருந்து இணையத்தை உபயோகிக்கிறீர்கள் என்பதை சரியாக காண்பிக்க பயர்பாக்ஸ் அட் ஒன்ஸ்
கூகுள் குரோம் உலாவியின் டூல்பாரில் யூடியூப் வீடியோவை கையாள்வதற்கு..
பேஸ்புக், டுவிட்டரில் சொற்தொடர்களை (Status Messages)பதிவு செய்ய பயர்பாக்ஸ் எக்ஸ்டென்ஸன்
கூகிள் குரோமில் ஜிமெயிலின் தேவையற்ற ஆப்ஸன்களை மறைப்பதற்கு சிறந்த டுவீக்கர்

அமெரிக்க இராணுவத்தினரின் புதுவகை லேசர் தொழினுட்பம்


அமெரிக்க இராணுவத்தினரின் புதிய லேசர் தொழினுட்பதால் விண்ணில் பறந்தது கொண்டிருக்கும் விமானத்தை தாக்க வரும் ஏவுகணையை விண்ணிலேயே தாக்கியளிகலாம்.
இதை அந்த விமானத்தில் பணிபுரியும் பொறியியலாளரால் தாக்க வரும் ஏவுகணையின் தரவுகள் கணிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவியினால் அலைகள் பாய்ச்சப்பட்டு அதை தகர்க்கலாம். இது தற்போதைய சர்வதேச நெருக்கடிக்கு தீர்வாக அமையலமேன்று கூறபடுகிறது.

விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு


விண்டோஸில் டெஸ்க்டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகானை கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப்படும் அளவானது மேக்ஸிமைஸ்/மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.
அவ்வாறு இல்லாமல், அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள். திறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள்.
பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.
ஹைப்பர் லிங்க் கொடுத்து அதில் கிளிக் செய்து திறக்கப்படும் விண்டோக்களையும் ஒரே அளவில் திறக்கும்படி செட் செய்திடலாம். ஏதேனும் ஒரு ஹைப்பர்லிங்க் செல்லவும். ஷிப்ட் கீயை அழுத்தி புதிய பக்கத்தினைத் திறக்கவும்.
இப்போது திறக்கப்பட்ட விண்டோவின் அளவினை உங்கள் விருப்பப்படி மினிமைஸ் அல்லது மேக்ஸிமைஸ் செய்திடவும். தொடர்ந்து ஷிப்ட் கீயை அழுத்தியபடி வைத்தவாறே அந்த விண்டோவினை File>close அல்லது close அழுத்தி மூடவும்.
வலது மூலையில் உள்ள X அழுத்தி மூட வேண்டாம். அடுத்து ஹைப்பர்லிங்க் திறக்கையில் இந்த அளவிலேயே விண்டோ திறக்கப்படும்.

புதிய மாற்றங்களுடன் பேஸ்புக்


பேஸ்புக் இணைய தளத்தின் மிகச் சிறந்த சேவைகளில் ஒன்றான பேஸ்புக் பேஜ்(facebook page) தற்போது புதிய வடிவில் வெளிவந்துள்ளது.
கடந்த மாதம் மாற்றப்பட்ட பேஸ்புக் ப்ரொபைலினை(profile) போன்றே இந்த புதிய Page காணப்படுகின்றது. இந்த மாற்றங்களானது இரண்டு தோற்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்பக்கத்தில் காணப்படும் போட்டக்களினை(photo) குறிப்பிடலாம். இது முக்கிய விடயங்களினை உள்ளடக்கியுள்ளது.
பேஸ்புக் பேஜினை கொண்டு லாகின்(Login) செய்யும் வசதி. இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். இனி உங்கள் பேஸ்புக் பேஜினைக் கொண்டு Login செய்து முழு இணைய தளத்தினையும் வலம் வர முடியும். 
அவ்வாறு லாகின் செய்து பெறப்படும் Home நிரலில் உங்கள் பேஜ் சார்பிலான News feed ம், Profile நிரலில் குறித்த பேஜும் நோடிபிகேசன் பகுதியில் குறித்த பேஜிற்கான அறிவுறுத்தல்களும் காணப்படுகின்றது.
இவ்வாறு உங்கள் பேஜினை பயன்படுத்தி Login செய்ய Use facebook as page என்பதை க்ளிக் செய்தால் போதும். இந்த புதிய வசதிகளைப் பெற இங்கு க்ளிக்செய்து Upgrade என்பதை தெரிவு செய்யவும்.

விண்டோஸ் சிஸ்டத்தில் புதிய போன் தயாரிப்பு


 கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவன ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட போன்கள் அதிகரித்து வரும் நிலையில்,  அவற்றுடன் போட்டியிடும் வகையில் மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் நோக்கியா சேர்ந்துள்ளது.
இன்டர்நெட் பிரவுசிங், சமூக இணையதள தொடர்பு உட்பட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
மேலும் ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து வருவதாலும் இதன் விற்பனை உயர்ந்துள்ளது. அதை பயன்படுத்தி கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. பெரும்பாலான நிறுவனங்கள் இதை பயன்படுத்தி செல்போன்கள் தயாரித்து வருகின்றன.
எனவே இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் செல்போன்களை தயாரிக்க நோக்கியா முடிவு செய்துள்ளது.
நோக்கியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீபன் எலோப் பொறுப்பேற்றுள்ள  நிலையில், மைக்ரோசாப்டுடன் இணைவது நிறுவனத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சமீபத்தில்தான் செல்போன் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பூமியைத் தாக்க காத்திருக்கும் சிறிய கோள்


"அப்போஃபிஸ்" என்ற சிறிய கோளானது பூமியைத் தாக்க இருப்பதாக ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை கண்டறிந்துள்ளனர்.
இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37,000 முதல் 38,000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும், 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவித்தார்.
சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமம் எனவும்  நாசா தெரிவித்துள்ளது.
எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பழங்களை விட சாக்லேட்டுகளை சாப்பிடுவது நல்லது


பழங்களில் அதிக சத்து இருப்பதால் அது உடலுக்கு உகந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது.
தற்போது பழங்களை விட சாக்லேட்டுகளில்தான் அதிக அளவு சத்து உள்ளது. 
எனவே, அதுதான் சிறந்த உணவு, ஆகவே பழங்களை விட சாக்லேட்டுகளை அதிகம் சாப்பிடலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக சாக்லேட்டுகள் தயாரிக்க அதிக அளவில் “கோ-கோ” பவுடர் சேர்க்கப்படுகிறது.
இது சத்துமிக்கது. அவை தவிர மற்ற மூலப்பொருள் பவுடர்கள் மாதுளம் பழம் உள்ளிட்ட பல பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இவை பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாகும். இருந்தும் சாக்லேட்டுகளை அளவாக சாப்பிட வேண்டும். அதில் கொழுப்பு, சர்க்கரை சத்துக்கள் அதிகம் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா?


நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா?
தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும் பயன்படுத்த லாக்கை எடுப்பதற்கு Ctrl+Alt+Del –> கீகளுடன் Esc கீயையும் அழுத்திவிட்டால் போதும்.