பேஸ்புக் இணைய தளத்தின் மிகச் சிறந்த சேவைகளில் ஒன்றான பேஸ்புக் பேஜ்(facebook page) தற்போது புதிய வடிவில் வெளிவந்துள்ளது. கடந்த மாதம் மாற்றப்பட்ட பேஸ்புக் ப்ரொபைலினை(profile) போன்றே இந்த புதிய Page காணப்படுகின்றது. இந்த மாற்றங்களானது இரண்டு தோற்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்பக்கத்தில் காணப்படும் போட்டக்களினை(photo) குறிப்பிடலாம். இது முக்கிய விடயங்களினை உள்ளடக்கியுள்ளது. பேஸ்புக் பேஜினை கொண்டு லாகின்(Login) செய்யும் வசதி. இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். இனி உங்கள் பேஸ்புக் பேஜினைக் கொண்டு Login செய்து முழு இணைய தளத்தினையும் வலம் வர முடியும். அவ்வாறு லாகின் செய்து பெறப்படும் Home நிரலில் உங்கள் பேஜ் சார்பிலான News feed ம், Profile நிரலில் குறித்த பேஜும் நோடிபிகேசன் பகுதியில் குறித்த பேஜிற்கான அறிவுறுத்தல்களும் காணப்படுகின்றது. இவ்வாறு உங்கள் பேஜினை பயன்படுத்தி Login செய்ய Use facebook as page என்பதை க்ளிக் செய்தால் போதும். இந்த புதிய வசதிகளைப் பெற இங்கு க்ளிக்செய்து Upgrade என்பதை தெரிவு செய்யவும். |
Saturday, February 12, 2011
புதிய மாற்றங்களுடன் பேஸ்புக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment