சோர்வை நீக்குவதற்கு புதிய தெரபி முறை |
|
தீவிரமான சோர்வு, கவனக்குறைபாடு, தசை மற்றும் மூட்டு இணைப்பு வலிகளை சரி செய்வதற்கு மூளை மற்றும் உடல் ரீதியாக தெரபி உதவுகிறது என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இது குறித்து லான்சட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2.15 லட்சம் மக்கள் சோர்வுப் பிரச்சனை மற்றும் மறதி குறைபாடுகளில் அவதிப்படுகிறார்கள். இவர்கள் இத்தகைய பாதிப்பு அடைவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சோர்வடையும் குறிப்பிட்ட நபரின் எண்ணம் மற்றும் செயலில் மாற்றம் ஏற்படுத்தும் சி.பி.டி தெரபியை மேற்கொள்ளும் போது தீவிர சோர்வு நீங்குகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிகிச்சை மிகச்சிறந்த பலனை தந்துள்ளதாக லான்சட் இதழின் ஆய்வு அறிக்கை எழுதியுள்ள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட தெரபி சிகிச்சை மூலம் சோர்வு மட்டுமல்லாமல் அவர்களது உடல் ரீதியான செயல்பாடும் வேகம் அடைகிறது என கூறப்படுகிறது. தீவிர சோர்வு நிலைக்கான எம்.இ செயல் அமைப்பும் இந்த ஆய்வு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது என விமர்சித்து உள்ளது. |
தொண்டை வலி, தும்மலை துத்தநாகம் விரட்டி விடும்: ஆய்வாளர்கள் |
|
தும்மல், ஜலதோஷம் மற்றும் தொண்டைவலி ஆகிய நோய்களுக்கு துத்தநாகத்தை மாத்திரை வடிவில் உட்கொண்டால் நோயை விரட்ட முடியும் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.இந்தியாவில் உள்ள சண்டிகரில் சி.டி.எஸ்.ஆர் என்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. அடிக்கடி பலரை துன்பத்தில் ஆழ்த்தும் தொண்டைவலி, வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண துத்தநாகம் எப்படி உதவும் என்று தீவிர ஆராய்ச்சி நடந்த்து. வைரஸ் கிருமிகளால் பரவக்கூடிய ஜலதோஷம் போன்ற தொற்று நோய்கள் "லாஜென்சஸ்" எனப்படும் மாத்திரை வடிவ துத்தநாகம் உடனடியாக கட்டுப்படுத்தும் என்று அதில் தெரிய வந்தது. நீரில் எளிதில் கரையக்கூடிய சர்க்கரை சேர்த்த துத்தநாகம் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரச்சனைகளால் தவிப்பவர்கள் இதை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் முழு நிவாரணம் பெற முடியும். |
முதுமையை வெல்ல நெல்லிக்கனி |
|
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது. மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது. தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. |
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பது நல்லதல்ல |
|
பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் இரும்புச் சத்து பற்றாக்குறை, உணவுப் பொருள் அலர்ஜி போன்றவை ஏற்படும் என லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிறக்கும் குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது தாய்மார்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை. இதே அறிவுரையை உலக சுகாதார மையமும் வழங்கி வருகிறது. வளரும் குழந்தைக்கு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மட்டுமே போதுமா என்ற ஆராய்ச்சியில் லண்டனை சேர்ந்த யூ.சி.எல் குழந்தை ஆரோக்கிய மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் மேரி பெவ்ட்ரல் தலைமையில் ஆய்வு செய்தனர். ஆராய்ச்சி ரிப்போர்ட்டை சமீபத்தில் வெளியிட்டனர் அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில ஏழை நாடுகளில் சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள் தாராளமாக கிடைக்காது. அந்த நாடுகளில் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என பரிந்துரைக்கலாம். வளர்ச்சியடைந்த நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அறிவுரை தேவையில்லை. குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதுமான சத்துக்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம். மேலும் அந்த குழந்தைகள் வளர்ந்தபின் உணவு அலர்ஜி ஏற்படலாம். அதனால் 6 மாதத்துக்கு முன்பே தாய்ப்பாலுடன் மற்ற உணவுப் பொருட்களையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். புதிய உணவுப் பொருட்களின் சுவை, முக்கியமாக கசப்பு சுவையை குழந்தை அறிய வேண்டும். அப்போதுதான் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை குழந்தை வளர்ந்த பின் சாப்பிடும். குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது? |
|
நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது உணவு சாப்பிடவில்லை என்றால் ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை.தூங்கினால் மூளைக்கு வேலை இல்லை. இப்படி கை, கால், கண் போன்ற உறுப்புகள் கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் முக்கியமானது இதயம் தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது? இதயம் துடிக்கவில்லை என்றால், அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்கள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும் மற்றும் செயல் இழந்து போகும். மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியாமல் போகும். கடைசியில் ஒட்டுமொத்த மனித உடலே இறந்து போகும். இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காத்தான் இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது. |
குறைபிரசவ குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் மருந்து கண்டுபிடிப்பு |
|
ஆர்.ஓ.பி எனப்படும் ரெட்டினோபதி தாக்கத்தால் குறைபிரசவ குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 50 ஆயிரம் குழந்தைகள் இது போன்ற தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பார்வை இழப்பை தடுப்பதற்கு புற்றுநோய் மருந்து அவஸ்தின் உதவுகிறது. குறை பிரசவ குழந்தைகளின் கண்கள் முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் இம் மருந்து தரப்படும் பட்சத்தில் பார்வை இழப்பை தடுக்கலாம் என யு.எஸ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த ஆய்வு அறிக்கை நியு இங்கிலாந்து ஜர்ன்ல் ஆப் மெடிசன் இதழில் வெளியாகி உள்ளது. குறை பிரசவ குழந்தைகளுக்கு அவஸ்தின் மருந்தை ஒரு ஊசியில் செலுத்துவதன் மூலம் பார்வை இழப்பை தடுக்க முடியும். லேசர் சத்திர சிகிச்சையை காட்டிலும் இது திறன் வாய்ந்த்தாக உள்ளது. வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்கும் போது சில பிரச்சனைகள் காணப்பட்டன. இந்த புதிய முறையில் பிரச்சனை ஏதும் இல்லை என ஆய்வினை மேற்கொண்ட டெக்சாஸ் ஹெல்த் சயின்ஸ் சென்டர் ஹெலன் மிண்ட்ஸ் ஹிட்னர் தெரிவித்தார். அவஸ்தின் ஊசி ஒரு சில வினாடிகளில் மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார். லேசர் சத்திரசிகிச்சையின் போது மயக்கநிலை மற்றும் சுவாசக்குழாய் தேவைப்படுகிறது. ஆனால் அவஸ்தின் மருந்து சிகிச்சைக்கு குறை பிரசவ குழந்தையின் கண்களை மறத்து போக செய்ய வேண்டியுள்ளது. இதற்கு சில எதிர்ப்பும் உள்ளது. அவஸ்தின் மருந்தை பல்வேறு புற்று நோய்களுக்கு அமெரிக்க எப்.டி.ஏ அங்கீகரித்துள்ளது. |
பெண்களின் கருமை நிறம் மறைய |
|
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும்.மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளி படும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது. குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருந்தாலும் இன்றைய பெண்கள், சிலர் பார்லர்களில் லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இது தாய் சேய் உடல் நலனை பாதிக்கும் தன்மை கொண்டது.இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதை தேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்' செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடுகள் படிப்படியாக சிவப்பாக மாறும் |
ஆரஞ்சு ஜுஸின் மகத்துவம் |
|
பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்குதாம்.உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஆரஞ்சு சாறோ குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சினை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு. ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும். இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும். தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும். நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு. |
மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின் |
|
ரெட் ஒயின் மற்றும் நிலக் கடலையில் அதிகம் இருக்கும் "ரிஸ்வரட்ரால்" என்ற வேதிப்பொருள் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் நகரில் உள்ள லெனர் ஆய்வு மையத்தில் நடக்கிறது. ஆராய்ச்சி பற்றி மையத்தின் தலைவர் சாரிஸ் எங் கூறியதாவது: உறுப்பு மாற்று ஓபரேஷன், எலும்பு மஜ்ஜை மாற்று ஓபரேஷன் ஆகியவற்றின்போது சில நேரம் உடலின் எதிர்ப்பு சக்தியாலேயே பக்கவிளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம். இதை கட்டுப்படுத்த ரபாமைசின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த செல்களையும், வெளி செல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இது செயல்படுகிறது. மார்பக புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தவும் ரபாமைசின் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது. முதலில் இது வெற்றிகரமாகவும் செயல்பட்டது. ஆனால் நாளடைவில் ரபாமைசினுக்கும் புற்றுநோய் கிருமிகள் கட்டுப்படுவதில்லை என தெரியவந்தது. இதுதொடர்பான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டது. ரபாமைசினுடன் ரிஸ்வரட்ரால் என்ற மருந்தை சேர்க்கும்போது மார்பக புற்றுநோய் கிருமிகள் பெருமளவு கட்டுப்படுகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த இரண்டும் சேர்ந்து உடலில் புற்றுநோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் ஜீன்களையும் வலுவாக்குகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வக அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ரிஸ்வரட்ரால் என்பது பாலிபீனால் வகையை சேர்ந்தது. ரெட் ஒயினில் இது அதிகம் உள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெட் ஒயின் கொடுத்து சோதனை நடத்தப்பட உள்ளது. கீமோதெரபி சிகிச்சையுடன் ரபாமைசின் மற்றும் ரிஸ்வரட்ரால் கூட்டணி மருந்தையும் கொடுப்பது மார்பக புற்றுநோய் பாதிப்பை கணிசமாக கட்டுப்படுத்தும் என்று தெரிகிறது. ரெட் ஒயின் மட்டுமல்லாமல் நிலக்கடலை, அவித்த கடலை, சிவப்பு திராட்சை ஆகியவற்றிலும் ரிஸ்வரட்ரால் அதிகம் இருக்கிறது. இவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட முடியுமா என்பது தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகும். |
அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ் |
|
தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது. பாதுகாப்பு முறைகள்: * உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும். * வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது. * உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும். * சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம். * ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும். * தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம். * பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது. * துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம். * சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம். * ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது. * நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம். |
குளூக்கோமா ஏற்பட மரபணுக்களும் காரணம் |
|
குளூக்கோமா என்பது கண்களில் அழுத்தம் காரணமாக, "ஆப்டிக் நரம்பு" பாதிக்கப்படுவதாகும். இதில் நரம்பு விரிவடைவது மட்டுமல்லாமல் கண் பார்வை திறனும் குறைகிறது.
குளூக்கோமாவில் கண்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக இருக்கும் கண்களில் அழுத்தம் 11 முதல் 21 ட்ஏஞ் வரை இருக்கும். ஆனால் குளூக்கோமா வந்துவிட்டால் கண் அழுத்தம் அதிகமாகும். இதனால் கண் பார்வை குறைந்து கண் வலி, ஒரு பகுதியில் பார்வை மங்குதல் ஆகிய பிரச்சனைகள் வரும். மேலும் கண் வலியுடன் சிவப்பாக மாறுதலும் வரலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய உடல் பிரச்சனைகள் உடையோருக்கு குளூக்கோமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு வரும்.
கண்களில் ஏற்படும் சில பிரச்சனைக்கு "ஸ்டிராய்டு" மருந்து அதிகமாக பயன்படுத்தினாலும் குளூக்கோமா வரலாம். பெற்றோருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ குளூக்கோமா இருந்தால், பரம்பரை நோயாகவும் இது வரும். முதலில் கண் பார்வை குறைபாடு இருக்காமல், கண்களில் அழுத்தம் மட்டும் அதிகம் இருக்கலாம். மேலும் நரம்பின் சில பகுதிகள் செயல்பாட்டை இழக்கும். இதன் காரணமாக பார்வை மெதுவாக குறைய துவங்கும். நரம்பின் எல்லா பகுதியும் செயல்பாட்டை இழக்கும் நிலையில், கண் பார்வை முழுவதுமாக குறையும். எனவே இதை முதலிலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்பிரச்சனைகள் யாருக்கு இருந்தாலும் அவர்கள் கண் பார்வை, கண் அழுத்தம், நரம்பு பகுதி ஆகியவற்றை உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் கண்களின் ஆப்டிக் நரம்பின் நிலையை பரிசோதித்து குளூக்கோமா இருக்கிறதா என்று தீர்மானிப்பர். கண் அழுத்தம் மட்டும் இருந்தால் சொட்டு மருந்துகள் மூலம் முதல் நிலையிலேயே சரி செய்யலாம். சொட்டு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். குளூக்கோமாவின் ஒரு வகையில் லேசர் சிகிச்சையும் தரப்படும். குளூக்கோமா நோயை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். முற்றிய நிலையில் சிகிச்சை செய்தாலும் பலன் முழுவதுமாக கிடைப்பதில்லை. இதற்கு ஆப்டிக் நரம்பின் தன்மையே காரணம். ஒருமுறை ஆப்டிக் நரம்பின் பகுதி செயல் இழந்து விட்டால், அது மீண்டும் சரி செய்யப்பட முடிவதில்லை. எனவே முதல் நிலை குளூக்கோமா சிகிச்சை பெரிதும் உதவும். குளூக்கோமா அறுவை சிகிச்சை 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்து விடும். இருப்பினும் சொட்டு மருந்துகளும், மாத்திரையும் சரியாக பின்பற்ற வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குளூக்கோமா நிபுணர்களிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள நவீன ஓ.சி.டி., ஸ்வாப், பில்டி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்களின் ஆப்டிக் நரம்பு எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைகள் ஓ.பி.டி., முறையில் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் சிகிச்சை வேலை செய்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் இதை பயன்படுத்தலாம். குளூக்கோமா நோய் முதலிலேயே அறிவதற்கு இந்த வகை பரிசோதனைகள் பயன்படும். குளூக்கோமா நோய் முழுமையாக வருவதற்கு முன், பரிசோதனை செய்து சிகிச்சையை துவங்குவதற்கு இந்த வகை பரிசோதனை முறைகள் உறுதுணையாக இருக்கின்றன. |

மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல் |
எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது. வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை: தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.
நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான நீச்சல் பயிற்சிக்கு... * நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும். * நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். * நீச்சல் குளத்திற்கு விடப்படும் நீர் சுத்தமான நீர்நிலையிலிருந்து வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். * நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம். * நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசித் தொடர்பு அவசியம் இருத்தல் வேண்டும். * வலிப்பு நோய், இழுப்புநோய், ஆஸ்துமா மற்றும் தோல்வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. சில எளிய நீச்சல் பயிற்சிகள்: மூன்று வகை எளிய நீச்சல் பயிற்சிகள் இதோ! 1. இடுப்பளவு ஆழமுள்ள நீரில் உங்கள் கால்களை நீரில் அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடைகளுக்கு நல்ல வலிமை தரும். 2. கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும். 3. கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும். |

கண்களைப் பாதுகாக்க |
நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவிப் போன்று இயங்குகிறது.
ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து மனதில் பதிவு செய்து பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. ஆகவே நமது கண்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியம். பின்வரும் பயிற்சிகளை மேற்கொள்வது மிகுந்த பலனை அளிக்கும். 1. கண் சுத்தம்: ஒரு குவளையில் நிரம்புமாறு சுத்தமான குடிக்கும் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்(நீர் சூடாகவோ, குளிர்ந்ததாகவோ இருத்தல் கூடாது) நன்கு முன்புறம் குனிந்து ஒரு கண்ணை(அழுத்தாமல்) குவளை நீரில் மூழ்க வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை பத்து முறை இமைக்க செய்ய வேண்டும். பின்பு புது நீரை குவளையில் நிரப்பி மற்ற கண்ணிற்கும் இதுபோல் செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு முதல் ஐந்து முறை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம், கண்களில் உள்ள தூசுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.கண்களை சுற்றி உள்ள சுருக்கம் மற்றும் கருவளையம் படிப்படியாக மறையும். 2. கண் பயிற்சி: இரண்டு அங்குல சதுரமுடைய பஞ்சு அல்லது மெல்லிய துணியை எடுத்துக் கொண்டு சாதாரணமாக தண்ணீரில் நனைத்து மூடிய கண் இமைகளின் மீது பரப்பிக் கொண்டு ஓய்வில் இருக்கவும், உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ, சாந்தி ஆசனத்திலோ இப்படி செய்யலாம். 10 நிமிடங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். ஜலதோஷம், ஆஸ்த்துமா, இருமல் போன்ற தொல்லைகள் உடையவர்கள் அதை சரி செய்த பிறகு பயிற்சிகள் செய்தால் பலன் கிடைக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், கண்களுக்கு தேவையான தெம்புடன் கூடிய இதமான ஓய்வு கிடைக்கிறது. தேவையற்ற சூடு தணிகிறது. கண் தசைகள் மற்றும் நரம்புகளில் கழிவு இரத்தம் வெளியேறி புது இரத்தம் கிடைக்கிறது. கண் பார்வை பிரகாசம் அடைகிறது. இரத்த அழுத்தக் குறைபாடு சரியாகிறது. மற்றும் சில வியாதிகளுக்கும் இப்பயிற்சி மிக நல்லது. 3. கண்களை மூடுதல்: இடது விரல்களின் மீது வலது கைவிரல்களைக் குறுக்காக வைக்கவும். பின் இரு உள்ளங்கைகளையும் சற்று குழியாக்கி கொள்ளவும். பின் மூடிய கண் இமைகளின் மேல் இவ்விரு குழிந்த உள்ளங்கையின் பகுதியை மெதுவாக பட்டும் படாதவாறு அழுத்தாமல் மிகவும் கவனமாக வைக்கவும். இந்த பயிற்சியை எந்த நேரமும், நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் செய்யலாம். இதன் மூலம் கண் சோர்வு நீங்கும்.கண் பார்வை தெளிவு பெறும், கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. 4. கண்களை இமைத்தல்: நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், கோமுகாசனம் இவைகளில் ஒன்றில் உட்கார்ந்து செய்தால் கூடுதல் பலன்கிட்டும். இரு கண் இமைகளை 10 வினாடிகள் இறுக மூடிபின் நன்றாக கண்களை விரித்து திறக்க வேண்டும். இதே போல் 20 முதல் 25 முறை செய்தல் வேண்டும். பின் ஒவ்வொரு கண்ணிற்கும் தனியாக இமைத்தல் பயிற்சி செய்தல் வேண்டும். இவைகளை எந்த நேரமும் செய்யலாம். இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் கண்களை சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள கழிவுகள் வெளியேறி கண்கள் புது வலிமை பெறுகின்றன. |

ஜாக்கிங் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது |
உடல் பருமனாக உள்ளவர்கள் அனைவரும் தங்கள் எடையை குறைப்பதற்காக ஓட்டப்பயிற்சி(ஜாக்கிங்) செல்கின்றனர்.
ஆனால் ஜாக்கிங் செல்வது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது: உடல் எடையை குறைப்பதற்காக பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி(ஜாக்கிங்) மேற்கொள்கின்றனர். இது எப்போதும் சிறந்த பயிற்சியாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் கொழுப்பு. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர். கொழுப்பு தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம், சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது. எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும். அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செலவிடப்படும். இதனால் சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார். |

பக்கவாதத்திற்கு மருந்து: மஞ்சள் |
உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டும் மருந்து ஒன்று பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதாக கூறப்பட்டுள்ளது.
முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இத்தகைய முடிவுகள் வந்துள்ளன. அடுத்து மனிதர்களிடம் சோதனை செய்ய செடார்ஸ் சினாய் மருத்துவ நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தானது, மூளையின் செல்களை சென்று சேர்ந்து தசை மற்றும் அசைவு பிரச்சனைகளை தீர்த்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மருந்தை கண்டறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றம் என்று தி ஸ்ட்ரோக் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக மஞ்சள் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மஞ்சளில் காணப்படும் கர்குமின் எனப்படும் பொருளும் பல்வேறு நல்ல பலன்களை கொண்டுள்ளது என்று பல ஆய்வு கூட ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆனால் இந்த கர்குமின், மூளையை கெட்ட பொருட்களிடம் இருந்து பாதுகாக்கும் செயலை தானாக செய்ய முடியாமல் உள்ளது. இந்த நிலையில், கர்குமினை சிஎன்பி-001 என்று வேறு ஒரு வடிவத்துக்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மாற்றியுள்ளனர். இது மூளையை பாதுகாக்கும் திறனை கொண்டிருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கூடத்தில் முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்த மருந்து வேலை செய்வது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை நடத்திய டாக்டர் பால் லேப்சாக், பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் மூளையில் உள்ள செல்களை உயிருடன் வைக்க தேவையான பல்வேறு வேலைகள் நடைபெறுவதில் இந்த மருந்து சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறினார். இப்போது இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய இருந்தாலும், முழுமையாக குணப்படுத்த கூடிய மருந்து ஒன்றை உருவாக்க பல ஆண்டுகாலம் ஆகலாம். |

நடைப்பயிற்சியின் அவசியங்கள் |
நமது இயல்பான வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.
கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவாக நமது உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம் மற்றும் அழுத்தம் சீர்படுவதுடன், மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன. மகிழ்ச்சி தரும் மற்றும் சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின உழைப்பு, விளையாட்டு, கராத்தே, நடனம், யோகா, ஓட்டம், தோட்ட பணிகள் இவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் தேவை. ஆனாலும் போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம். இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது. மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது. மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன. எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு, நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நடப்பது நமது கால்களுக்கு, உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், உற்சாகத்தையும் தருகின்றது. உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது. எப்போதும், எந்த வயதிலும் நடக்கலாம். வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம். 75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். |

கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய் |
|
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்பது இந்தியர்களின் தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது.
இவை இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு. வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது. பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும் புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள். வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும். வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர். வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடிக்கலாம். ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு: கலோரி 25, நார்ச்சத்து 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 மிஹி, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் 46 மில்லி கிராம். |
 | |
| |
தயிர் தொடர்ந்து சாப்பிட்டால்
|
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம். சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
 |
| அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும் |
பெண்களில் மாதவிடாய் மாதம் மாதம் வருவது வழக்கம். இது ஒரு பெண் 13 14 வயதில் பருவமடையும் போது ஆரம்பிக்கும். பின்னர் சூலகங்கள் தொழிற்படுவதால் சூல் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் வெளியேறும். இதனால் மாதவிடாயும் மாதம் மாதம் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒரு பெண் 50 51 வயதை அடையும் போது மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும். இதனை மெனோபோஸ் பருவம் என அழைப்பார்கள்.
இவ்வாறு மாதம் மாதம் மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பையின் உள்சுவர் உடைந்து குருதியாக வெளியேறும். இது காரணமாக 35 நாட்கள் நீடிக்கும். இதன்போது வயிற்றில் இருந்து கழிவுகள் எதுவும் வேளியேறுவதில்லை. பெண்களது குருதியும் கர்ப்பப்பையின் உட்சுவருமே உடைந்து வெளியேறுகின்றது. பின்னர் மாதவிடாய் வரத் தொடங்கியதில் இருந்து 14ஆவது நாள் சூலகம் சூல் முட்டையை வெளியேற்றும். அடுத்ததாக 28ஆவது அல்லது 29ஆவது நாளில் அடுத்த மாதவிடாய்க்கான குருதிப் போக்கு ஆரம்பிக்கும். இதுவே ஒரு பெண்ணில் நடைபெறும் மாதவிடாய் சக்கரம். இந்த ஒழுங்கான மாதவிடாய் மற்றும் அளவான குருதிப் போக்கு ஒரு பெண்ணுக்கு வழமையானதும் அவளால் அதனை தாங்கக் கூடியதுமான ஒரு விடயம்.
ஆனால் இந்த மாதவிடாய் சக்கரம் ஒழுங்கற்றதாகவும் இது எந்த நேரத்தில் வருமோ எப்படி வருமோ என பெண்களை ஏங்க வைத்தும் அவர்களால் அன்றாட கருமங்களை மேற்கொள்ள முடியாதவாறு கட்டி கட்டியாக அதிகப்படியான குருதிப் போக்கையும் ஏற்படுத்தினால் பெண்களது வாழ்க்கையில் இந்த மாதவிடாய் ஒரு பாரிய சிக்கலாக மாறுகிறது. பெண்கள் தடுமாறும் போது அவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பமும் தடுமாறத் தொடங்கும். ஆகையால் இந்த அதிகப்படியான மாதவிடாய் ஏன் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய்வது பொருத்தமானது.
மாதவிடாய் போக்கின் அதிகரிப்புக்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும் பெண்ணின் வயதை பொறுத்து வேறுபடும். அதாவது 13 வயது தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் ஒருவகை, 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் ஒருவகை, 40 வயதுக்கும் மெனோபோஸ் பருவமான 51 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் ஒருவகை. இறுதியாக மெனோபோஸ் பருவத்திற்கு பின்னர் உள்ள வயதுடைய பெண்கள் ஒருவகை ஆகும். இவ்வாறு பெண்களை நான்கு வகைகளாக பிரித்து இது குறித்து ஆராய்வோம்.
13 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள்
பருவமடைந்தவுடன் ஆரம்பிக்கும் மாதவிடாய் போக்கினை உடைய இந்த வகைப் பெண்களில் மாதவிடாய்கள் ஒழுங்கற்றதாகவும் சில பேரில் கூடுதலாகவும் காணப்படும். இதற்கு காரணம் இந்த வயது எல்லை உடைய இளம் பெண்களில் சூலகங்களில் இருந்து சூல் முட்டைகள் ஒழுங்காக வெளிவரத் தொடங்கவில்லை. இதனால் இவர்களது உடலில் ஹோர்மோன்கள் சமநிலையற்றதாக இருந்து இவ்வாறான ஒழுங்கற்ற மாதவிடாய்களையும் சிலவேளைகளில் அதிகரித்த குருதிப் போக்கையும் ஏற்படுத்தும்.
இதற்கு வேறு எந்த பாரதூரமான காரணங்களும் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதனால் இந்நிலை உடைய பெண்களோ அவர்களது தாய்மாரோ இது குறித்து கலங்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாம் அவர்களது குருதி இழப்பை ஈடு செய்யும் இரும்புச் சத்து நிறைந்த விற்றமின்கள் வழங்குவோம். சில பேரில் இதனை கட்டுப்படுத்த புரலொஸ்ரரோன் (Progestorone) மாத்திரைகளோ மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளோ வழங்குவதன் மூலம் இந்த மாதவிடாய்களை ஒழுங்காக்கி அவற்றின் அளவையும் கட்டுப்படுத்த முடியும். எனவே தயக்கமின்றி குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளை இந்த வயதுப் பெண்கள் இந்த நோக்கத்திற்காக வைத்திய ஆலோசனைப்படி எடுக்க முடியும்.
சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் பட்சத்தில் இவர்களுக்கு இரத்தத்தில் குருதி உறையும் தாமதத்தை அறியும் பரிசோதனை, தையிரோயிட் ஹோர்மோனை அளக்கும் பரிசோதனை, ஸ்கான் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படலாம்.
எனினும் காலப்போக்கில் இவ் வயது எல்லை உடைய பெண்களில் இப் பிரச்சினை வழமைக்கு திரும்பிவிடும். அதாவது இது தொடர வாய்ப்பில்லை. 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் இந்த வயது உடைய பெண்களில் மாதம் மாதம் சூலகங்களில் இருந்து சூல்முட்டை ஒழுங்காக வெளிவருவதால் மாதவிடாய்களும் ஒழுங்காக இருக்கும். சில பேரில் இது அதிகப்படியாக கட்டி கட்டியாக குருதிப் பெருக்கை ஏற்படுத்தினால் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். ஒழுங்காகவும் அதிகமாகவும் மாதவிடாய் போக்கு இருக்கும்போது கர்ப்பப்பை கட்டிகள் பைப்புரோயிட்டுகள் காரணமாக இருக்க முடியும். இதனை ஸ்கான் மூலம் கண்டறியலாம்.
ஆனால் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் குருதி கசிவு மற்றும் தாம்பத்திய உறவின் பின்னர் ஏற்படும் குருதி கசிவு என்பன கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகள், பொலிப்புகள், கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆகையால் கர்ப்பப்பையின் வாசலை (Cervix) நாம் பார்ப்பது அவசியம். இவ்வாறு எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்கான் பரிசோதனையும் சாதாரணமாக சிக்கல்கள் இல்லாது இருப்பின் இவ்வாறான ஒழுங்கான மாதவிடாய்களில் ஏற்படும் அதிகப்படியான குருதிப் போக்கு சில ஹோர்மோன் சிக்கல்களாலே ஏற்படுகின்றது. இதற்கு வயிறு கழுவுதலோ அல்லது டி சி (ஈ இ)யோ தேவைப்படாது.
மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்று புதிய முறையாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ள குடும்ப பெண்களுக்கு இதற்கு தீர்வாகவும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் ஹோர்மோன்களை கர்ப்பப் பையினுள் வெளியேற்றக்கூடிய கொயில்கள் அல்லது லூப்கள் போடப்படும். இது 5 வருடங்களுக்கு செயற்படக்கூடியது. இந்த புதிய முறையினால் பெண்களில் இப் பிரச்சினைகளுக்காக கர்ப்பப்பையை அகற்றும் நிலையை தவிர்க்கலாம். எனவே இது ஒரு பயனுள்ள தீர்வு. இதன்போது மாதவிடாய்கள் மிகவும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வருகின்றது.
] 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபோஸ் பருவம் வரை உள்ள பெண்கள் இவ் வயது எல்லை உடைய பெண்களில் மாதவிடாய் போக்கில் அதிகரிப்பு இருப்பின் இதற்கு தீர்வாக எடுத்தவுடன் ஹோர்மோன் மாத்திரைகளையோ அல்லது வேறு மாத்திரைகளையோ வழங்க முடியாது. ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகப்படியான மாதவிடாய் போக்கு இருக்கும் போது கர்ப்பப்பையின் உட்புறத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களுக்கு சிறிது வாய்ப்புள்ளது. அதாவது 100 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நிலை இருக்கலாம். ஆகையால் ஸ்கான், வயிறு கழுவுதல் அல்லது டீ சி (D and C) ) அல்லது கர்ப்பப்பையின் உட்புறத்தில் சிறிதளவு இழையத்தை பரிசோதனைக்கு அனுப்பும் (Biopsy) பரிசோதனையை முதலில் மேற்கொள்ள வேண்டும். இதில் எந்த சிக்கல்களும் இல்லையென பெறுபேறுகள் வரும் போது நாம் மாத்திரைகள் மூலம் அல்லது நான் முன்பு குறிப்பிட்ட ஹோர்மோன்களை வெளியிடும் லூப்கஸ் அல்லது கொயில்கள் கர்ப்பப்பையினுள் போடலாம்.
இதன்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவும் குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் இருந்து பெண்களின் கர்ப்பப்பையை அகற்றும் பழைய முறைகளில் இருந்து மீட்சி ஏற்படுகின்றது. இந்த லூப் சாதாரணமாக வழமையில் உபயோகிக்கும் குடும்ப கட்டுப்பாட்டு லூப்பில் இருந்து வேறுபட்டது.
இதற்கும் சரிவராவிட்டால் குடும்பத்தை நிறைவு செய்த பெண்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பப்பை அகற்றாமல் கர்ப்பப்பையின் உட்சுவரை மட்டும் அகற்றும் சத்திர சிகிச்சை (Endome trial Abcation) பிரபல்யமடைந்து வருகின்றது. இதற்கான வசதிகள் இல்லாவிட்டால் கர்ப்பப் பையை அகற்ற வேண்டும். இதன்போது சூலகங்கள் அகற்ற வேண்டும் என்பது அல்ல. மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் குருதிப் போக்கு மெனோபோஸ் ஒருவருக்கு ஏற்பட்டு மீண்டும் சிறிது காலத்தின் பின்னர் குருதி கசிவு ஏற்பட்டால் இதனை சற்று ஆபத்தான அறிகுறியாக எடுத்து ஸ்கான் மற்றும் இழையத்தை பரிசோதிக்கும் ஆடிணிணீண்தூ ஈ ச்ணஞீ இ பரிசோதனை மூலம் கர்ப்பப்பையின் உள் நிலவரங்களை அறிய வேண்டும்.
ஆகையால் மாதவிடாய்களில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை பொறுத்தவரையில் ஒரு முக்கிய பிரச்சினை. இது குறித்து அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் பல. அத்துடன் வயது எல்லைகளை பொறுத்து காரணங்களும் தீர்வுகளும் வேறுபடும். ஆகையால் இன்று இது குறித்து உங்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
|
நோயின் அறிகுறியை நகங்களில் காணலாம்!
நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
* நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும். * சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
* பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.
* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.
நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகின்றன. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான்.
கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே? நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.
நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இவை உண்மை தான்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிïடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு:
* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.
* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.
* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.
* நகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.
* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.
* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.
* நீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.
* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.
* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் ப்ராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
 |
நீரிழிவு நோயாளர்களுக்கும் மூட்டு சத்திர சிகிச்சை சாத்தியமே
எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை எதிர்கொள்வதற்கு மனோதிடத்துடன் சற்று சமயோசிதம் தேவை என்பதே புத்திசாலிகள் மற்றும் அனுபவஸ்தர்களின் முன்மொழிபு. எதிர்பாராமல் நடக்கும் விபத்தில் பாதிக்கப்படுவோர்களை, விபத்து நடந்த தருணத்திலிருந்து குறிப்பிட்ட தருணத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர் டொக்டர் எஸ். முத்துகுமார்.
எலும்பு மருத்துவத்திற்கான சத்திர சிகிச்சைக்கூடத்தில் சிடி ஸ்கேன் என்ற நவீன மருத்துவ உபகரணத்தைப் பொருத்தி, இம்மருத்துவத்திற்கான புதிய சர்வதேச தர அடையாளத்தை அறிமுகப்படுத்தியவர் இவர் என்பதும், "ஐ.ஓ. ஆர்' எனப்படும் நுண்மதிப்பு கொண்ட சத்திர சிகிச்சை அரங்கத்தை உருவாக்கி, ஏழு அல்லது எட்டு செ. மீ அளவேயுள்ள முதுகுத்தண்டின் இணைப்பினிடையேயுள்ள பாலப்பகுதியில் ஐந்து அல்லது ஆறு செ. மீ அளவுள்ள ஸ்குரூக்களைப் பொருத்தி, நோயாளிக்கு துல்லியமான சிகிச்சை வழங்குவதில் முன்னோடி என்பதை, அறிந்ததும், இவர் நிர்வாக இயக்குநராக பணியாற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் பார்வதி மருத்துவமனைக்கு சென்று சந்தித்தோம்.
விபத்துத் தொடர்பாக, மருத்துவ உலகம் "கோல்டன் ஹவர்ஸ்' என்று குறிப்பிடுவதைப் பற்றி விளக்கமாக எடுத்துரைங்களேன்?
விபத்து நடைபெற்ற தருணத்திலிருந்து முதல் நான்கு மணித்தியாலங்களைத்தான் "கோல்டன் ஹவர்ஸ்' என்று குறிப்பிடுகிறோம். இத்தøகய தருணத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களை காப்பாற்ற ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கது. விபத்து எதிர்பாராமல் நடைபெற்றுவிடுவதால் அவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்பதனை துல்லியமாகத் திட்டமிட இயலாது. அதே தருணத்தில் விபத்து நடந்த இடத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கிடைக்காது. உதாரணமாக விபத்தில் அடிப்பட்டு, அதிக அளவில் இரத்தம் வெளியேறி, மூச்சு விடுவதில் சிரமமோ அல்லது மூளை போன்ற பகுதிகளில் அடிபட்டு நினைவிழத்தல் போன்றவையோ நிகழ்ந்திருப்பின், இவர்களை பதினைந்து நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கும் படியான சூழல் மேலைத்தேய நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற தேசங்களில் இது செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களை அதிகபட்சம் மூன்று நிமிடத்திற்குள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டால், அவர்களை காப்பாற்ற இயலும் என்று மருத்துவ உலகம் அறிவுறுத்துகிறது. இந்த நிலை குறித்த விழிப்புணர்வு உலக அளவில் ஏற்பட்டால், விபத்தின் மூலம் நிகழும் மரணத்தை 90 சதம் குறைக்க முடியும். ஆனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் விபத்து ஏற்பட்டு நான்கு மணி நேரமாகியும் கூட அவர்களுக்கு குறைந்தபட்ச மருத்துவ சிகிச்சையும கிடைப்பதில்லை.
விபத்து ஏற்பட்டவுடன் உடலில் ஏற்படும் காயங்களை பிரைமரி இன்ஜுரி (primary injury) என்றும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிலைக்கு, ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய நிலைக்கு செகண்டரி இன்ஜுரி (secondary injury)என்றும் குறிப்பிடுகிறோம். செகண்டரி இன்ஜுரி என்றால், விபத்தில் அடிப்பட்டவர்களை காப்பாற்றுகிறேன், உதவி செய்கிறேன் என்று கூறி, அவரை அசைப்பது, வலுவில் நகர்த்துவது. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடலுறுப்புகள் மேலும் மோசமடைகிறது. இதனை மருத்துவ உலகம் செகண்டரி டேமேஜ் என்று குறிப்பிடுகிறது.
அதனைத் தெடர்ந்து மார்பிடிட்டி என்றதொரு நிலையைப் பற்றியும் குறிப்பிடுகிறோம். அதாவது, விபத்தில் மாட்டிக்கொண்டவர், மண், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, சேதமடைந்த உறுப்பின் வழியாக உடலுக்குள் கிருமிகள் நுழைவது. இதனால் அந்த உறுப்பின் செயல்பாட்டில் சிக்கல் எழுவது. இதனால் பாதிக்கப்பட்டு நான்கு மணி தியாலத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாலும், அவர்களுக்கு துல்லியமான, முழுமையான சிகிச்சை வழங்குவதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது அடிப்பட்ட பத்து நிமிடத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரை சந்தித்து, சிகிச்சை பெறுவதற்கும், அடிப்பட்டு நான்கு மணி தியாலம் கடந்து சென்ற பின் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதற்கும் வித்தியாசம் உண்டு. அதாவது அவர்கள் பலனடைவதில் மாறுபாடு உண்டு.
ஒரு சில தருணங்களில் இரவு பதினொரு மணியளவில் விபத்து நடைபெற்றிருக்கிறது. நீங்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று அனுமதித்துவிட்டீர்கள். ஆனால் அம்மருத்துவமனையில் எந்நேரமும் இயங்கக்கூடிய சத்திர சிகிச்சை கூடம் இருக்கும் என்று உறுதியாக கூற இயலாது. அத்தகைய தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே தரமான சிகிச்சை கிடைக்காமற்போகக்கூடிய வாய்ப்பு உண்டு. இந்நிலை எங்கள் மருத்துவமனையில் கிடையாது. இங்கு இருபத்திநான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய சத்திர சிகிச்சை கூடம் இருக்கிறது. இருபத்திநான்கு மணி நேரமும் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். இவை முழுமையாக கிடைக்கவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பின்விளைவு அபாயகரமானது. உதாரணமாக கால்பந்து வீரர் ஒருவருக்கு விபத்தில் அடிப்பட்டு விட்டது. நான்கு மணி தியாலத்திற்குள் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடனே நிகழ்த்தப்படவேண்டிய சத்திர சிகிச்சை, உரிய நிபுணர் இல்லாததால் நடைபெறவில்லை. மறுநாள் காலையில் அவரை பரிசோதிக்கும் நிபுணர், காலை எடுத்தேயாகவேண்டும் என்று அறிவுறுத்தும் போது, அவருடைய கால்பந்து வீரர் என்ற அடையாளத்தையே மாற்றிக் கொள்ள நேரிடும். அத்துடன் நிற்காமல், அவர் தன் வாழ்நாளில் வேறு துறையை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும். அதனால் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒருவருடைய வாழ்க்கை முறையையே மாற்றிவிடக்கூடிய வல்லமை விபத்திற்கு இருப்பதால், அதற்கு இடங்கொடுக்காது, மனம் விரும்பும் துறையில் உற்சாகமாக செயல்படவேண்டும் என்றால், விபத்து நடைபெற்ற தருணத்தில் இருந்து ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கதாக உணர்ந்து செயல்படுங்கள்.
லிம்ப் லென்த்தனிங் என்று வழங்கப்படும் எலும்பை வளர்தெடுப்பது எத்தகைய தருணங்களில் அவசியமாகிறது? அது எப்படி மேற்கொள்ளப்படுகிறது?
நாற்பது ஐம்பது ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில் நுட்பம் தான் இந்த லிம்ப் லென்த்தனிங். ருஷ்ய நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி இல்லீஸறா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம். உடலில் உள்ள எல்லா எலும்புகளும் உடைந்தபின் சேர்வது இயற்கை. இதனை மருத்துவர்கள் சேர்ப்பதில்லை. ஆனால் அதற்கேதுவான சூழலை மருத்துவர்கள் உருவாக்குகிறார்கள். உடைந்த பின் எலும்புகள் இணையும் போது புதிய எலும்புகள் உருவாகிறது. இந்நிலையில் புதிய எலும்பை சிறிது சிறிதாக இழுத்தோமென்றால், அவர் வளர்வதுடன், அதனுடன் இருக்கும் தசை, திசுக்கள் மற்றும் இரத்த நாளங்கள் உள்ளிட்ட அனைத்தும் வளர்கிறது என்பதை தன்னுடைய ஆய்வில் கண்டறிந்தார்
இல்லீஸறா. பன்னிரண்டு அங்குலம் வரை இதனை இழுக்க இயலும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்த மருத்துவ தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூம்பியிருக்கும் காலை சதையுடன் வளர்த்தெடுக்க இயலாது. ஆனால் அவ்விடத்திலிருக்கும் எலும்பை இழுக்க இயலும். இந்த மருத்துவ தொழில் நுட்பம், தற்போது விபத்தில் அடிப்பட்டு, அந்த தலத்திலேயே எலும்புகள் சுக்குநூறாக உடைந்துபோயிருப்பவர்களுக்கு, எலும்பை இணைக்கும் போது இதனை பயன்படுத்துகிறோம்.
இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை எப்போது, யாருக்கு தேவைப்படுகிறது? நீரிழிவு நோயாளிகளுக்கு இது சாத்தியமா?
இடுப்பு மாற்றை விட மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் நாம் மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை. அதாவது அதிகமாடிகளைக் கொண்ட கட்டிங்களை( அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள்) எழுப்பி, ஆரோக்கியம் என்ற பெயரில், படியேறும் போது கால் மூட்டை அதிகப்படியாக பயன்படுத்துவதால், மூட்டு எலும்பின் தேய்மானம் அதிகரிக்கிறது. அதேபோல் ஒரேயிடத்தில் அதிக நேரத்திற்கு உட்கார்ந்தே பணியாற்றுவது. (கொம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது.) ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கொரு முறை தன்னுடைய உடல் நிலையை மாற்றியமைத்து, அதாவது எழுந்து இரண்டு நிமிடங்கள் நடந்து சென்றுவிட்டு, அதன் பின் அமர்ந்து பணியாற்றவேண்டும். அதேபோல் உணவு எடுத்துக்கொள்ளும் விடயத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. விதவிதமான ஹொட்டேல்கள், வகைவகையான சுவையை அறிமுகப்படுத்தி, நம் உடல் எடையை அதிகரிப்பதிலேயே குறியாய் இருக்கின்றன.
இதனால் உடற்பருமன் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் கால் மூட்டு வலுவிழக்கிறது. அலுவலகம், வீடு என்று பூட்டிய அறைக்குள்ளேயே நாள்களை கடத்துவதால் எம்முடைய சருமத்தின் மீது சூரிய ஒளி கூட தேவைக்கு குறைவாக படுகிறது. இதனால் சருமம் பாதிக்கப்படுகிறது. சருமம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் வழியாக எலும்புகளுக்கு சக்தியூட்டும் விட்டமின் டி போதிய அளவிற்கு உடலுக்கு கிடைப்பதில்லை. ஆண்களைக் காட்டிலும், பெண்கள் திருமணத்திற்கு பின் உடற்பருமன் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால், ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு எலும்பின் தேய்மானம் அதிகரிக்கிறது.
அதேபோல் மூட்டு வலிக்கான சிகிச்சைக்காக வருவோரில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர்களின் சதவீதம் குறைவே. அதனால் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தாராளமாக மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ளலாம். அவர்கள் பயப்படதேவையில்லை. ஏனெனில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவோரில் அறுபது சதத்தினர் முதுமையடைந்தவர்களே. தற்போது நாற்பது வயதை கடந்துவிட்டவர்களில் அறுபது சதவீதத்தினர் மேல் நீரிழிவு குறைபாடுடையவர்களே.
ஆயுள் அதிகம் என்பதால் தான் எலும்பு மருத்துவ சிகிச்சையின் போது ஆக்சீனியத்தாலான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?
எலும்பு மருத்துவத்தின் போது பயன்படுத்தப்படும் இரும்பாலான பிளேட்கள்,. ஸ்குரூக்கள் ஆகியவை எலும்புகள் இணையும் வரை மட்டுமே அதன் தேவைப்பாடு இருக்கும். எலும்புகள் இயற்கையாக இணைந்த பின், அங்கு பொருத்தப்பட்ட இரும்புகள் எந்தவித பயனுமில்லாமல், உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் இருக்கும். ஆக்சீனியம் பொதுவாக மூட்டு மாற்று சிகிச்சையின் போது தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அதனை விட செராமிக் எனப்படும் பீங்கானில் ஆன செயற்கை மூட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் ஆயுள் மற்றும் உறுதி தன்மை நோயாளியைப் பொறுத்தும்., அவர் பயன்படுத்தும் விதம் பொறுத்தும் மாறுபடுகிறது. மருத்துவர்கள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்யும் போது, அவர்களின் எஞ்சியுள்ள வாழ்க்கை முழுவதும் வரும்வகையிலான மூட்டுகளையே பொருத்துகின்றனர். ஆக்சீனியம் மற்றும் செராமிக்கால் உருவாக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ள செயற்கை மூட்டுகளின் ஆயுள் குறித்து தற்போது ஆய்வு மட்டுமே நடந்து வருவதால், அதற்கான இறுதி முடிவை உறுதியாக தெரிவிக்க இயலாது. அதே தருணத்தில் ஆக்சீனியத்தாலான செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுவதால் மட்டுமே ஒருவரின் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை பயன் தந்துவிடாது. அதை துல்லியமாக பொருத்துகிற சத்திர சிகிச்சை நிபுணரின் பங்களிப்பும் இருக்கிறது.
வாசர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பும் விடயம் என்ன? தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய தவறாதீர்கள். சிறு வயது முதல் இதனை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு தொடர்பான சிக்கல்கள் வராது. உடற்பருமனை வரவிடாமல் எச்சரிக்கையுடன் உணவு பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். அதையும் கடந்து நோய் வந்துவிட்டால், முதலில் அதற்கேற்ற மருத்துவ நிபுணரை தெரிவுசெய்து, சிகிச்சையை செய்துகொள்வதே சிறந்தது.
 |
|
|
|
கருப்பை புற்று நோய்
கருப்பை புற்று நோய் .,மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள்.... கர்ப்பப்பை புற்று நோய்
இந்தப் புற்று நோய் பெரும்பான்மையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே வருகிறது. உடல் பருமன், இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வரும்வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோய்க்கு துவக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இல்லையெனில் இது கர்ப்பப்பையின் உட்புற பாகங்கள், பிறப்புறுப்பு ,சிறுநீர்பை பெருங்குடல் ஆகியவற்றுக்கு இந்நோய் பரவி விடும்.
இதன் பிறகு இரத்தம் மூலமாக உடலின் பிற பாகங்களுக்கும்பரவி அழித்து விடும்.ஒழுங்கற்ற மாதவிலக்குதான் இந்தப் புற்று நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.கர்ப்பப்பை வாய் புற்று நோய் இந்தப் புற்று நோய் பாதிப்பிருந்தால் பிறப்புறுப்பில் அதிகப்படியான நீர் அல்லது ரத்தக்கசிவு தொடரும். .இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. |
|
|
| கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறையும் வாய்ப்பு |
|
பெண்கள் ஒரு நாளைக்கு 4 கப் கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கோப்பி குடிப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக நடப்பது ஒன்றாக உள்ளது. அதேபோல் பெண்களின் எடையை குறைக்க உதவும் ஒரு வழியில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இதற்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த 26 வருடங்களாக 86 ஆயிரம் நர்ஸ்களை கணக்கில் கொண்டு அவர்களை கண்காணித்தனர். ச்சரியப்படும் வகையில் அதிக அளவில் காபியை குடித்தவர்களுக்கு குறைந்த அளவே சதை போட்டிருந்தது. தினந்தோறும் 4 கப் கோப்பி குடித்து வந்த பெண்களில் 57 சதவீதத்தினர் குறைந்த அளவே எடை கொண்டிருந்ததையும், 2 முதல் 3 கப் கோப்பி குடித்தவர்களில் 22 சதவீத அளவே எடை குறைந்திப்பதையும் கண்டறிந்தனர்.
 |
கர்ப்பணிகளுக்கு போலிக் அமிலம்அவசியம்
கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது.
போலிக் அமிலம் என்பது என்ன? அது ஒரு வகை விட்டமின் ஆகும்.
எத்தகைய பாதிப்பு இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.
எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும். இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.
இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.
அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும். ஏன் குறைபாடு ஏற்படகிறது
எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும். அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.
குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.
இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.
ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?
கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும். இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.
எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது. எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது. . |
|
சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....?
நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால் தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.
கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, வெப்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு நோய் எதிர்ப்புசக்தி இல்லாததே காரணம். காய்ச்சல் தலைவலி சளி கொண்டவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காபி, தூக்கம் அல்லது ரசம் சோறுடன் முடித்து கொள்வார்கள்.
நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.
முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.
இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.
இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.
 |
|
|