டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான 'புர்ஜ் கலிஃபா' கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருந்து ஸ்டன் காட்சிகளில் நடித்துள்ளார் டாம் குரூஷ்.
நேற்று நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், சுமார் 2,717 அடி உயரத்தில், அக்கட்டிட் உச்சியின் நுனியில், எவ்வித பதற்றமும் இன்றி இலாவமகாம அமர்ந்திருந்து தன் காட்சிகளை குரூஷ் நடித்துக்கொடுத்தார். இக்காட்சிகள் ஹெலிகொப்டர் மூலம் படம்பிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் இக்கட்டிட ஜன்னல்களின் மேற்புறமாக டாம் குரூஷ் ஓடும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. சமீபத்திய நாட்களில் அதிக நேரம் டுபாயின் இந்த கட்டிடத்துடனேயே செலவழிப்பதாக டாம் குரூஷ் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்டான் காட்சிகளை பற்றி டாம் குரூஷின் உதவியாளர் ஒருவர் தெரிவிக்கையில், டாம் குரூஷிற்கு இந்த காட்சிகளை தானே செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவர் பயமில்லாமல் செய்கிறார். திரையில் பார்க்கும் ரசிகர்களும் இதை டாம் குரூஷ் தான் செய்கிறார் என்பதை உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கையையும் ஏமாற்றக்கூடாதல்லவா என தெரிவித்துள்ளார். டுபாயில், பரகுவே ஆகிய நாடுகளில் Mission Impossible IV படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
உக்ரேனின், ல்விவ் நகரில் இடம்பெற்ற ஒரு சாகச நிகழ்வில், திடீரெனெ இரு சிங்கங்களுக்கு மூட் மாறியதால் ஏற்பட்ட விபரீத விளைவு இது. வசமாக மாட்டிக்கொண்டவர் பின்கோ எனப்படும் சாகசவீரர். இவருக்கு உதவப்போய் ஏனையோரும் மாட்டிக்கொண்டனர். சுற்றி வர 100ற்கு மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் தான் சாகச நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை படம் பிடித்த அமெரிக்க சுற்றுலாக்குடும்பம் ஒன்றை தவிர, வேறு யாருக்கும் என்ன நடந்தது என்பது கூட தெரியாது. சிங்கம் கர்ஜிக்க தொடங்கியவுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே முரண்டு பிடித்துக்கொண்டிருந்த சிங்கம், தன் வழியில் போவதாக ஒதுங்கித்தான் நின்றுள்ளது. அப்படியே விட்டுவிட வேண்டியது தானே. சங்கை ஊதிக்கெடுத்தது போல் சிங்கத்தை தடியால் சீண்டிப்பார்த்தார் பின்கோ. வந்தது கோபம்! பின்கோ மீது ஒரே பாய்ச்சல், இன்னுமொரு சிங்கமும் உதவிக்கு வந்தது. எப்படியும் அடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் கடும் முயற்சி செய்தும், பின்கோ கடி வாங்கியது தான் மிச்சம்.
வேறு வழியில்லாமல் வேகமான தண்னீர் பாய்ச்சல் மூலம் இந்த சிங்கக்குட்டிகளின் கொட்டத்தை அடக்க முடிந்துள்ளது.
கணனியில் இருக்கும் ஆடியோக்களை கன்வேர்ட் செய்வதில் வேகமாகவும், அதே நேரம் போர்ட்டபிளாகவும்
இயங்கக்கூடியதுமான டூல் fre:ac ஆகும்.
இந்த டூலின் மூலம் சிடி அல்லது டிவிடிக்களில் இருந்து ஆடியோக்களை எடுத்து பின்னர் அவற்றை தேவையான வடிவத்தில் மாற்றியமைக்கலாம்.
WMA, Ogg Vorbis, MP3, MP4/M4A, AAC, WAV போன்ற பார்மட்களுக்கு இசைவாக்கம் பெற்றுள்ளது.
பல ஆடியோக்களை தொடர்ச்சியாக பிளே செய்யக்கூடியவகையில் பிளே லிஸ்டுகளாக இந்த டூலின் மூலம் உருவாக்கிக்கொள்ளலாம்.
இணைய பாவனையில் வீடியோ பார்க்கும் போது அல்லது டோரன்ஸ் மூலம் டவுண்லோட் செய்யும் போது
திடீரென இணைய வேகம் குறைந்ததை அடிக்கடி உணருபவாரா நீங்கள் அவ்வாறாயின் இந்த தளம் மூலம் ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டறியலாம்.
உங்களின் இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் குறிப்பிட்ட சில பாவனைகளுக்காக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை இந்த இணைப்பில் செய்யப்படும் ஸ்கானிங் மூலம் அறியலாம்.
சில இணைய சேவை வழங்குனர்களால் (ISP) குறிப்பிட்டளவு பாண்ட்வித்தை நீங்கள் உபயோகித்ததும் உங்கள் இணைய வேகம் கட்டுப்படுத்தப்படலாம். உதாரணமாக 100KB டவுண்லோட் வேகமெனில் வீடியோ அல்லது டவுண்லோட் செய்யும் போது வெறும் 30 KB வேகத்தையே நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் ஒரு ஜிமெயில் பாவனையாளரெனின் அதிலிருக்கும் காண்டெக்ஸ் மற்றும் அட்டாச்மெண்ட் பைல்களை கையாள இலகுமுறை இருந்தால் நல்லது என விரும்பலாம்.
உங்கள் விருப்பம் நிறைவேற மெயில் புரவுசர் என்ற பிளக்கின் ஐ பயன்படுத்தலாம். இதை நிறுவுவதன் மூலம் இன்ரநெற் எக்புளோரர், பயர்பாக்ஸ், குரோமி என நீங்கள் பயன்படுத்தும் எல்லா உலாவிகளுடனும் சேர்ந்து இயங்குகிறது.
டவுன்லோட் செய்து நிறுவியதும் ஜிமெயில் கணக்கின் விபரங்களை தந்தால் போதுமானது. அனைத்தும் இண்டெக்ஸ் செய்து தயாராகியதும், மெயில் புரவுசர் பிளகின் உலாவியின் வலது பக்கத்தில் சைட் பார் (Sidebar) ஆக அமர்ந்து இயங்கத்தொடங்கும்.
Contacts மற்றும் Files என இரு டாப் தோன்றும். அதில் ஜிமெயிலிலுள்ள காண்டக்ஸ் மற்றும் பைல்களை கையாள முடிகிறது.
குறிப்பிட்ட காண்டக்ஸை அழுத்தியதும் அதின் மேலதிகவிபரங்கள் காண்டப்படும். பைல் டாப்பில் அட்டாச்மெண்ட்டாக மின்னஞ்சலில் வந்த பைல்களை தொகுக்கப்படும்.
குறிப்பிட்ட காண்டக்ஸ் அல்லது பைல்களை வேகமாக தேடிப்பெறும் வசதி இதன் சிறப்பாகும் பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
இணையவசதி இருக்கும் கணனிகளில் உங்களிடம் இருக்கும் பைல்களை அப்லோட் செய்து பகிர்வதற்கு விரும்புவீர்கள்.
எனினும் பைல் ஹாஸ்டிங்க் தளத்திற்கு உலாவி மூலம் அப்லோட் செய்யும்போது அதிக நேரம் வீணாகலாம். இதைவிட எந்த எந்த பைல்களை(படங்கள், டெக்ஸ்ட், பைல்கள்) அப்லோட் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் சேர்த்து டிராக் டிராப் முறையில் ஒரேதடவையில் தேர்வு செய்து அப்லோட் செய்யும் நடவடிக்கைக்கு உதவுவதே Zuploader என்ற டூலாகும்.
டவுண்லோச் செய்வதற்கு இங்கே. http://code.google.com/p/zscreen/downloads/list
Comments