Monday, November 22, 2010

சிங்கம் 'டபுளா' கூட வரும்!! - உக்ரேய்னில் நடந்த விபரீதம்


உக்ரேனின், ல்விவ் நகரில் இடம்பெற்ற ஒரு சாகச நிகழ்வில், திடீரெனெ இரு சிங்கங்களுக்கு மூட் மாறியதால் ஏற்பட்ட விபரீத விளைவு இது. வசமாக மாட்டிக்கொண்டவர் பின்கோ எனப்படும் சாகசவீரர். இவருக்கு உதவப்போய் ஏனையோரும் மாட்டிக்கொண்டனர். சுற்றி வர 100ற்கு மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் தான் சாகச நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை படம் பிடித்த அமெரிக்க சுற்றுலாக்குடும்பம் ஒன்றை தவிர, வேறு யாருக்கும் என்ன நடந்தது என்பது கூட தெரியாது. சிங்கம் கர்ஜிக்க தொடங்கியவுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே முரண்டு பிடித்துக்கொண்டிருந்த சிங்கம், தன் வழியில் போவதாக ஒதுங்கித்தான் நின்றுள்ளது. அப்படியே விட்டுவிட வேண்டியது தானே. சங்கை ஊதிக்கெடுத்தது போல் சிங்கத்தை தடியால் சீண்டிப்பார்த்தார் பின்கோ. வந்தது கோபம்! பின்கோ மீது ஒரே பாய்ச்சல், இன்னுமொரு சிங்கமும் உதவிக்கு வந்தது. எப்படியும் அடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் கடும் முயற்சி செய்தும், பின்கோ கடி வாங்கியது தான் மிச்சம்.

வேறு வழியில்லாமல் வேகமான தண்னீர் பாய்ச்சல் மூலம் இந்த சிங்கக்குட்டிகளின் கொட்டத்தை அடக்க முடிந்துள்ளது.

நீங்களே பாருங்களேன்!

No comments:

Post a Comment