விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் பல ஆண்டு வினைத்திறன் மிக்க உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் ஆகியவற்றாலேயே இது சாத்தியமாகியுள்ளது. மேற்படி திட்டமானது பாலைவனங்களை பசுமையாக மாற்றுவதுடன் காபனீரொக்சைட் வாயுவை உறிஞ்சி பூகோள காலநிலை மாற்றத்தினையும் கட்டுபடுத்தக்கூடியது. உலகில் தாராளமாக காணப்படும் சூரிய ஒளி, கடல் நீர், காபனீரொக்சைட் வாயு, செழிப்பற்ற நிலம் போன்றவற்றை பயன்படுத்தி பச்சை வீட்டுத்திட்டத்தின் மூலம் தொடர்ச்சியான உணவு, குடிநீர் மற்றும் மீள சக்தியாக மாற்றுதலே இதன் பிரதான நோக்கமென இத்திட்டத்தின் நிறைவேற்று இயக்குனர் ஜோகிம் ஹக் தெரிவிக்கின்றார். இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடு. இது 2 தொழிநுட்பங்களை ஒன்றாக இணைக்கின்றது. சூரிய ஒளி சக்தியினையும்,கடல் நீரை சுத்தமான நீராக மாற்றியும் தாவரங்கள் வளரக்கூடிய பச்சைவீட்டுத்திட்டமுமே இவையாகும். கடல்நீர் பச்சைவீட்டு விளைவு இப்படத்தில் காட்டப்பட்டவாறு பச்சைவீட்டினுள் செலுத்தப்படும் வளியானது கடல் நீரினால் குளிர்விக்கப்படுவதோடு, சூடாக்கவும் படுகின்றது. இச்சூடு மற்றும் வளியானது பச்சைவீட்டினுள் வளரும் தாவரங்களை செழுமையாக்குகின்றது. பின்னர் அது ஆவியாக்கியின் மூலம் சூரிய வெப்பத்தினால் சூடாக்கப்படும் கடல் நீர் பாயும் இடத்தினை அடைகின்றது. இங்கு அச்சூடான வளியானது குளிரான கடல் நீர் கொண்ட குழாயினை சந்திக்கின்றது. இதனால் புதிய நீரானது அக் குழாய்களின் வெளியே நீராவித்துளிகளாக பெறப்படும். வெப்பக் காற்றின் 10 முதல் 15 வீதம் வரையிலானவையே இவ்வாறு புதிய நீராக பெறப்படும். சூரிய சக்தி தொழில்நுட்பம் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் சூரிய சக்தியானது வினைத்திறன்மிக்க சக்தியினை உருவாக்கவல்லது. படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளில் பட்டு தெறிப்படையும் சூரிய ஒளியானது இத்திட்டத்தில் உபயோகிக்கப்படும் குழாய்கள் போன்ற உபகரணங்களை சூடாக்க பயன்படும். மேலும் மின்சாரத்தினை பெறவும் பயன்படவுள்ளது. அல்காக் குளங்கள் மற்றைய வளங்களின் மூலம் உற்பத்திசெய்வதை விட 30 மடங்கு அதிகமான எரிபொருளை அல்காக்களின் மூலம் உற்பத்தி செய்ய முடியும். போடோபயோரியாக்டர்கள் மூலம் ஒளித்தொகுப்பு செயற்பாட்டின் ஊடாக ஆழமற்ற உவர்நீர் கொண்ட தடாகங்களில் அல்காக்களை உற்பத்திசெய்ய முடியும். இத்தாவர வகையின் கொழுப்பு எண்ணெயிலிருந்து உயிர் எரிவாயுவினைப் பிரித்தெடுக்கவும் முடியும். அல்காக்கள் அதிக உணவுகள் மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யப் பயன்படுகின்றது. |
Tuesday, January 25, 2011
பல ஆண்டுக் கனவு நனவாகிறது: சஹாரா வனத்திட்டம் (பட இணைப்பு)
சிறுமியின் கொடையுள்ளம்: புற்றுநோய் அமைப்பிற்கு 2.5 லட்சம் டொலர் நிதியுதவி
இச்சிறுமி தனக்கு கிடைக்கும் நிதியை புரோஸ்டேட் புற்றுநோய் அமைப்பிற்கு வழங்கி வருகிறார்.
இதுவரை 2.5 லட்சம் டொலர் மதிப்பிற்கு மேல் புற்றுநோய் அமைப்பிற்கு வழங்கியுள்ளார். இவரது தந்தை மைக்கேல் வினெக்கி (40). கடந்த 2009 ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
எனவே அவரது நினைவாக வின்டர் வினெக்கி இந்த புற்று நோய் அமைப்புக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்.
மேலும் வினெக்கி முன்மாதிரியாக கொண்டு செயல்படும் சைக்கிள் ஓட்டவீரர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ரோங் என்பவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. _
உலகின் உயரமான உணவகம் டுபாயில் திறப்பு
இந்த உயரமான உணவகத்தின் பெயர் எட்மொஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.
உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.
இந்த உணவகத்திற்கென பிரத்யேக லிப்ட் உள்ளது. இங்கு சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம்.
இந்த சொகுசு உணவகத்தில் தனியாக டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு சுமார் 20 ஆயிரம் செலவாகும். மேலும், மதிய வேளையில் தேநீரின் விலை சுமார் 11 ஆயிரம் ஆகும். _
புகைப்பிடிக்காதீர்கள்! எச்சரிக்கும் புகைப்படங்கள்.
படங்களிலிருந்து நிஜத்துக்கு..
கைகளில் ஓர் கிராபிக்ஸ் வித்தை (வீடியோ)
கம்யூட்டர் கிராபிக்ஸ் சாப்ட்வேர்களால் மட்டும் தான், அனிமேஷன் காட்சிகளை மிக மிக அழகாக உருவாக்க முடியும் என்றில்லை. கைகளால் வரைந்த ஓவியங்களை Motion reel முறையில் அடுத்தடுத்து வேகமாக அடுக்கி பிண்ணப்பட்டிருக்கும் அசையும் அனிமேஷன் காட்சி இது.
சிங்கப்பூரில் கிராபிக்ஸ் டிசைனிங் படிக்கும், Saggyyarmpit எனும் பெண்மணியின் வித்தியாசமான ஐடியாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் அதிக வரவேற்பை பெற்ற அனிமேஷன்களில் இதுவும் ஒன்று!
பேஸ்புக்கில் மகாத்மா காந்தி அவமதிக்கப்படுகிறார் - ஐபிஎஸ் அதிகாரி புகார்
அதிகாரி ஒருவர் புகார் அளித்துளார்.உத்தரப்பிரதேச ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அமிதாப் தாகூர், கோம்தி நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளதாக தெரிகிறது.
காந்தியின் உருவப்படத்தை தவறாக வெளியிடப்பட்டு அவருக்கெதிராக பிரச்சாரம் செய்து வருகிறது என பேஸ்புக் குழு மீது புகார் வழங்கியுள்ளார் இவர். குறிப்பிட்ட பேஸ்புக் குழு காந்தியை ஆபாசமான வார்த்தைகள் மூலம் அவமதிப்பதாகவும் அவை வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காந்தியின் உருவப்படத்தை தவறாக வெளியிடப்பட்டு அவருக்கெதிராக பிரச்சாரம் செய்து வருகிறது என பேஸ்புக் குழு மீது புகார் வழங்கியுள்ளார் இவர். குறிப்பிட்ட பேஸ்புக் குழு காந்தியை ஆபாசமான வார்த்தைகள் மூலம் அவமதிப்பதாகவும் அவை வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
I hate Gandhi எனும் பெயரில் இயங்கும் பேஸ்புக் குழுவினரே இவ்வாறு அவரை அவமதிப்பதாக தெரியவருகிறது.
இதை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி குறிப்பிட்ட குழுவினரை அணுகி காந்திக்கு எதிரான விடயங்களை நீக்குமாறு கோரியுள்ளார். எனினும் அவர்கள் அவ்வாறு செய்ய முன்வராததால் புகார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி குறிப்பிட்ட குழுவினரை அணுகி காந்திக்கு எதிரான விடயங்களை நீக்குமாறு கோரியுள்ளார். எனினும் அவர்கள் அவ்வாறு செய்ய முன்வராததால் புகார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமயகத்துக்கும் பலமுறை தொடர்பு கொண்டு இந்த குழுவினரை தடைசெய்யுமாறு கோரியதாகவும் ஆனால் அவர்களின் பதில் திருப்தி அளிக்காமையால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் ஐபிஎஸ் அதிகாரி தாகூர் என்பவர் கூறியுள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் இக்குழுவினர்க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் இக்குழுவினர்க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
Subscribe to:
Posts (Atom)