Tuesday, January 25, 2011

உலகின் உயரமான உணவகம் டுபாயில் திறப்பு


  உலகிலேயே உயரமான கட்டிடமான டுபாயின் பார்ஜ் கலிபாவின் 122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.

இந்த உயரமான உணவகத்தின் பெயர் எட்மொஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.

உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இந்த உணவகத்திற்கென பிரத்யேக லிப்ட் உள்ளது. இங்கு சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம்.

இந்த சொகுசு உணவகத்தில் தனியாக டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு சுமார் 20 ஆயிரம் செலவாகும். மேலும், மதிய வேளையில் தேநீரின் விலை சுமார் 11 ஆயிரம் ஆகும். _

No comments:

Post a Comment