Thursday, January 6, 2011

ஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி?

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம்.
இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch எனும் ஒரு சிறிய வன்பொருள் சாதனம் மட்டுமே இதற்கு அவசியம். இங்கு KVM என்பது Keyboard, Video (monitor), Mouse என்பதனைக் குறிக்கிறது. அதாவது கேவியெம் சுவிச் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரே கீபோட், மொனிட்டர் மற்றும் மவுஸ் கொண்டு இயக்க முடிகிறது. ரூட்டரில் காணப்படும் நெட்வர்க் போட்டுக்குப் பதிலாக இந்த கேவியெம் சுவிச்சில் VGA (Port) போர்டுடன் PS2 அல்லது USB போர்ட் மட்டுமே காணப்படும். அத்தோடு அதை இயக்குவதற்கான மின் சக்தியை தனியாக வழங்க வேண்டிய அவசியமுமில்லை. அதனுடன் இணைக்கப்படும் கேபல்கள் மூலம் கணியிலிருந்தே மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளும்.
ஒரே மொனிடரில் ஒன்றுக்கு மேற்பட கணினிகளை இணைத்துப் பணியாற்றும் அமைப்பு அனேகமாக அதிக எண்ணிக்கையிலான சேர்வர் கணினிகள் பயன்படுத்தப்படும் கணினி வலையமைப்புகளில் காணலாம். கணினி வலையமைப்புகளிலுள்ள நெட்வர்க சேர்வர்களை (Network Server) நிர்வகிப்பதற்கே இந்த கேவியெம் சுவிச் பயன் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சேர்வருக்கும் தனியாக மொனிட்டர் கீபோர்ட் மற்றும் மவுஸ்களைப் பொருத்துவது அவசியமில்லாத ஒரு விடயம். ஏனெனில் சேர்வர் கணினியுடன் நேரடியான பயனர் தொடர்பு அரிதாகவே நடைபெறும். ஒரு சேர்வரை அணுக அந்த சேர்வர் கணினியிலுள்ள கீபோர்ட் மவுஸைப் பயன் படுத்த வேண்டிய தேவையிராது. கேவியெம் சுவிச்சுகளைப் பயன் படுத்துவதன் மூலம் சேர்வர் கணினிகளை இல்குவாக ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்க முடிவதோடு செலவினங்ளைகயும் குறைக்க முடிகிறது.
பொதுவான பாவனைக்கென வரும் கேவியெம் சுவிச் இரண்டு முதல் நான்கு கணினிகளை இணைக்கக் கூடியவாறு த்யாரிக்கப்படுகின்றன. மாறாக பெரிய கணினி வலையமைப்புக்களில் பயன் படுத்துவதற்கென 2 முதல் 64 கணினிகள் பொருத்தக் கூடிவாறான `கேவியெம் சுவிச்சுகள் பாவனையிலுள்ளன.
நான்கு கணினிகளை இணைக்கக் கூடிய கேவியெம் சுவிச்சில் நான்கு VGA போர்டுகளும் எட்டு PS2 அல்லது USB போர்டுகளும் காணப்படும். இந்த நான்கு VGA போர்டிலும் நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் வீடியோ கேபல்கள் பொருத்தப்படும். அதே போன்று நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் கீபோர்ட் மற்றும் மவுஸ் கேபல்கள் எட்டு PS2 அல்லது USB போர்டுகளில் இணைக்கப்படும். அதற்கென விசேட கேபல்கள் தனியாக வாங்க வேண்டிய அவசியமில்லை. . கேவியெம் சுவிச்சுடனேயே அவை தரப்படும்.
எனினும் நான்கு கணினிகளிலிருந்து வரும் வீடியோ காட்சிகளும் மொனிட்டரில் ஒரே நேரத்தில் தோன்றாது. நீங்கள் விரும்பும் கணினியிலிருந்து வரும் வீடியோ வெளியீட்டை கேவியெம் ஸ்விச்சின் மேற்பகுதியில் உள்ள சிறிய பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்துவதன் மூலம் பெறலாம். புதிதாக வரும் கேவியெம் சுவிச்சுகளில் கணினிக்கு கணினி மாறுவதற்கு கீபோர்டையும் பயன் படுத்த முடிகிறது. .
இரண்டு கணினிகளை ஒரே நேரத்தில் பயன் படுத்த் வேண்டிய சூழ் நிலைகளிலும் புதிதாக மொனிட்டர் வாங்குவதற்கு அதிகம் செலவாகும் எனும் நிலையிலும் இந்த கேவியெம் ஸ்விச்சை வாங்கிப் பொருத்தலாம்.

ஜிமெயில் லேபில்(Lab) தவிர்க்க கூடாத 5 வசதிகள்

கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையை தரும் ஜிமெயிலில் பல எண்ணற்ற வசதிகள் நிரந்து உள்ளன. ஜிமெயிலில் Lab என்ற பகுதியில் இந்த வசதிகள் இருக்கின்றன. இதில் உள்ள சில முக்கியமான மிகவும் பயனுள்ள வசதிகளை பற்றி இங்கு காண்போம்.
1) OFFLINE:
இந்த வசதி மிகவும் பயனுள்ள வசதி. நம் கணினியில் இணைய இணைப்பு இல்லாத போதும் நமக்கு வந்து இருக்கும் புதிய மெயில்களை இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.
SETTINGS- OFFLINE – க்ளிக் செய்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆனால் ஜிமெயிலில் MULTIPLE SIGNIN ஆக்டிவேட் செய்து இருந்தால் இவ்வசதியை பெற முடியாது. https://www.google.com/accounts/b/0/MultipleSessions இந்த லிங்கில் சென்று MULTIPLE SIGN IN வசதியை செயலியக்க செய்துவிட்டு இதனை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
2. PICTURE IN CHAT
நாம் ஜிமெயில் நம் நண்பர்களுடன் இலவசமாக அரட்டை அடித்து கொள்வோம். அப்படி அரட்டையில் இருக்கும் போது நாம் ஏதேனும் செய்தி அனுப்பினால் நம்முடைய படம் தெரிவதற்கு இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விடுங்கள். இதற்க்கு SETTINGS- LABS- PICTURE IN CHAT – ENABLE -SAVE CHANGES.
3. UNDO SEND
நாம் அவசர அவசரமாக ஏதேனும் தவறான மெயிலோ அல்லது முகவரி மாற்றியோ மெயில் அனுப்பிவிட்டால் அதை போகாமல் தடுக்க இந்த வசதி பயன் படுகிறது. இதற்க்கு SETTINGS- LABS – UNDO SEND – ENABLE – SAVE CHANGES- க்ளிக் செய்து இதை ஆக்டிவேட் செய்தவுடன் மறுபடியும் GENERAL க்ளிக் செய்து உங்களின் நேர அனுப்பிய மெயிலை தடுக்கும் நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4. RIGHT CHAT
நம்முடைய ஜிமெயிலில் உள்ள சட பகுதியை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு கொண்டு வர இந்த வசதியை செயல் படுத்தி கொள்ளுங்கள். இதற்க்கு SETTINGS – LABS – RIGHT-SIDE CHAT – ENABLE – SAVE CHANGES. 
5. SIGNATURE
ஜிமெயிலில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலின் கீழே நீங்கள் உங்களுடைய பெயரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வசதியை  செயல் படுத்தி விட்டாலே போதும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலின் கீழே உங்களுடைய பெயர் வந்து விடும். 

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நண்பர்களின் புகைப்படத்தை மட்டும் முதலில் காட்ட

பேஸ்புக் வளர்ச்சியை பார்த்து வியப்படைந்து கொண்டிருக்கிறது இன்றைய உலகம். சமூக தளமான பேஸ்புக் நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் பேஸ்புக்கில் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும்.  
இது உங்களுக்கு பிடிக்கவில்லை பேஸ்புக்கில் எப்போதும் குறிப்பிட்ட நபர்களின் படங்கள் தான் தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்க்கும் பேஸ்புக்கில் ஒரு வசதி உள்ளது.
  • முதலில் உங்கள் பேஸ்புக்www.facebook.com அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அங்கு உங்கள் நண்பர்களின் படங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு ஒரு சிறிய பென்சில் போன்ற லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அங்கு காலியாக உள்ள கட்டத்தில் உங்களுக்கு தெரியவேண்டிய நண்பர்களின் பெயரை டைப் செய்யவும். 
  • நீங்கள் முதல் எழுத்தை டைப் செய்தவுடன் அந்த எழுத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காட்டும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளவும்.
  • இது போல நீங்கள் தேர்வு செய்யும் பெயரும் இதில் சேர்ந்து கொண்டே வரும். 
  • இது போல உங்களுக்கு தேவையானவர்களை நீங்கள் தேர்வு செய்ததும் அவர்களின் படங்கள் வரிசையாக காண்பிக்கப்படும். 
  • இனி எப்பொழுது உங்கள் பக்கத்தை திறந்தாலும் நீங்கள் தேர்வு செய்தவர்களின் புகைப்படங்கள் தான் முதலில் வரும்.
இன்னொரு வசதி: படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் 
சாதரணமாக நம் பெஸ்புக்கின் நண்பர்கள் பகுதியில் ஆறு படங்கள் மட்டுமேதெரியும் அதை மாற்றி 12 படங்கள் தெரியவைக்கலாம்.
  • அதில் இருக்கும் 6 என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் அதிக பட்சம் 12 படங்கள் வரை பொருத்தி கொள்ளலாம்.