Sunday, October 10, 2010

உலகின் செல்வந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு

உலகில் ஏராளமான செல்வந்தர்களைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிநபர் சொத்துக்களின் சராசரியின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து செல்வந்த நாடாக திகழ்வதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'கிரடிட் சூசி' ஆய்வு மையத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் தனி நபர் ஒருவரின் சராசரி சொத்துக்கள் 372692 சுவிஸ் பிராங்குகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சொத்துக்களின் பெறுமதி 60 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நோர்வே, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவீடன், அமெரிக்கா, லக்ஸ்ம்பர்க், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளை வகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அதேவேளை, ஆசிய பசுபிக் நாடுகளில் அநேக செல்வந்தர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment