| அரியானா மாநிலம் ரிவாரி என்ற இடத்தை சேர்ந்த இளம் பெண் பூனம். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பூனம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி பூனம் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பூனத்தின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் பூனம் தனது காதல் கணவருடன் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்தார். கூடுதல் செசன்சு நீதிபதி ஜே.ஆர்.சவுகான் முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது பூனத்தின் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக கோர்ட்டுக்குள் நுழைந்து பூனத்தை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். நீதிபதி மற்றும் வக்கீல்கள் அனைவரின் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் ஆயுதங்களுடன் வந்து இருந்ததால் யாராலும் அதை தடுக்க முடியவில்லை. இது பற்றி போலீசில் புகார் கூறப்பட்டது. அவர்கள் பூனத்தை கடத்தியவர்களை தேடிவருகின்றனர். |
Wednesday, September 1, 2010
நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதி முன்னால் பெண்ணை கடத்திய கும்பல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment