Saturday, October 2, 2010

நோன்பு காலத்தில் உணவு விற்பனை : இரு பெண்களுக்கு நேற்று பிரம்படி

  புனித ரமழான் காலத்தில் உணவு விற்பனை செய்தமைக்காக இந்தோனேசியாவில் இரு பெண்களுக்கு நேற்று பொது இடத்தில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய சட்டத்தினை பின்பற்றும் ஆச்சே மாகணாத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

27 வயதான முர்னி அம்ரிஸ் மற்றும் 22 வயதான ருக்கியா அப்துல்லா ஆகியோருக்கு முறையே 3 மற்றும் 2 பிரம்படிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விருபெண்களும் புனித ரமலான் மாதகாலத்தில் இஸ்லாமிய ' ஸரியா ' சட்டத்திற்கு முரணாக உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரியா சட்டத்தின் படி நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உணவு விற்பனைசெய்வது குற்றமென அம்மாநிலத்தில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். 

No comments:

Post a Comment