இன்று கூகிளின் தொடக்கப் பக்கத்தில் தெரிவது The Flintstones கார்டுன் படத்தின் 50வது ஆண்டு நிறைவின் வாழ்த்து. பிரபலமான விடயங்களுக்கு, முதற் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து வரும் கூகிளின் நடவடிக்கையில் இன்று இந்த கார்டுன் படத்திற்குத் தெரிவித்துள்ளது.
1960ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ந்திகதி, அமெரிக்க ஒளிபரப்புக் கூட்டுத் தாபனத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பட்ட இந்தக் கார்டுன் சித்திரத்தின் முதற் தொகுதி, தொடர்ந்து 6 வருடங்கள் அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. William Hanna, Joseph Barbera ஆகியோரின் படைப்பில், அவர்களது Hanna-Barbera Productions தயாரிப்பாக வெளிவந்தது.
1960களில் இருந்த அமெரிக்க வாழ்க்கைக் கனவினை, , கற்கால மனித சமூகத்தின் வாழ்க்கையோடு பொருத்திப்பார்த்தலில் பிறந்த நகைச்சுவைக் கதையினை மூலக் கதையாகக் கொண்டு இந்தக் கார்டுன் சித்திரம் வடிக்கப்பட்டது. இதனால் அச் சித்திரங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்து கொண்டது. அந்த மூலவடிவமைப்பிலேயே இன்று வரை அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.
அக்காலத்தில் அமெரிக்கத் தொலைக்காட்சியின் பிரதான விளம்பரதாரர்களாக பெரும் கம்பெனிகள் திகழ்ந்து கொண்டிருக்க, இந்தக் கார்டுனுக்காக விளம்பரதாரராக 'வின்ஸ்டன்' சிகரட் கம்பெனி வந்தது. இதனால் இந்தத் தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும், இக் கார்டுனின் கதாபாத்திரங்கள் புகைபிடிப்பது போல் காட்சி அமைக்கப்பட. அது கடுமையான விமர்சனஙங்களுக்கும் உள்ளானது.
பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என்ற கூட்டுப் பாத்திரப்படைப்பில் உருவான இந்தக் கதையில் 11 தொலைக்காட்சித் தொடர்கள், 3 சினிமாக்கள் வரை வந்துள்ளன. முதலாவது தொடர் மூன்று வண்ணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. கடந்த வருடத்தில் உலகின் மிகச்சிறந்த கார்டுன்கள் வரிசையில் இப்படத்திற்கு 9வது இடம் கிடைத்திருந்தது. உலகின் முக்கியமான தீம் பார்க்குகளிலும் இந்தக் கார்டுன் பாத்திரங்கள் முக்கிய இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்று வரை The Flintstonesகார்டுனும், கதாபாத்திரங்களும் மாறாத குதுகலம்தான்.
கடந்த வாரத்தில் கூகிளும் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment