ஆனால் இப்படித்தான் நடந்திருக்கும் என நினைத்துகூட பார்த்திருக்க மாட்டீர்கள். எதிர்மாடி வீட்டில் வசிப்பவரரொருவர் படம்பிடித்த காட்சி இது.
உயிருக்கு உத்தரவாதம் அவர் தன் ஒரு கையால் பிடித்திருக்கும் ஜன்னல் நிலைதான்! தலைக்கவசம் போன்ற வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதையும் அவன் மேற்கொண்டிருக்கவில்லை.
ஜன்னலுக்கு வெளிப்புறம் தரை விளிம்பில் நின்று கொண்டு கண்ணாடியை துடைக்கின்றான். விழுந்தால் சுக்குநூறாக வேண்டியது தான்.
டுபாயில் சட்டவிரோதமின்றி, ஒழுங்காக பதிவு செய்து வேலைசெய்யும் பணியாளர்களின் நிலைகூட இப்படித்தான் என்கிறது இப்புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் இணையத்தளம் ஒன்று.
இவர் அரபு எமிரேட்ஸில் நீண்டகாலமாக வேலை செய்யும் பணியாளராக இருக்க கூடும். இவ்வேலை ஆபத்தானது என அவர் கருதி, விலகிவிடுவாரெனில், அல்லது தன்னை நடத்தும் விதம் குறித்து அரசுக்கு புகார் கொடுப்பாரெனில், நாட்டை விட்டுத்தான் போகவேண்டும் . ஏனெனில் எவ்வித முன் அனுபவமுமின்றி உயிராபத்தை கூட கவனத்திற் கொள்ளாது மிக குறைந்த சம்பளத்தில் இதேவேலையை எடுத்து செய்வதற்கு இன்னமும் 1000 பேர் வரிசையில் தயராக காத்திருக்கிறார்கள். என்கிறது அத்தளம்.
டுபாயில் பணிபுரியும் வெளிநாட்டவரில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்! அங்கு கூலிப்பணியாளராகப் பணிபுரியும் அவர்களில், உங்கள் நெருங்கிய உறவினர் கூட இருக்க முடியும்! குறைந்த சம்பளத்தில், ஒரு நாளில் 30 மணிநேரம் வேலை செய்யக்கூறினாலும் அவர்கள் தயார் தான்!. இதையும் அந்த இணையத்தளம் தான் கூறியுள்ளது.
ஏன் அவர்கள் அப்படித் தயாராகின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போகலாம் ஆனால் உங்களுக்கு....?
(தாயகம் பிரிந்து தூர தேசப் பணிகளில், நம் உறவுகளின் துயரங்களைப் பகிர்ந்த கொள்ளும் நோக்கிலேயே இச் செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment