Saturday, September 4, 2010

மரத்துப்போன மனிதம் : விஷப்பாம்பு வைன் (பட இணைப்பு)

  மனித மனம் மரத்துப் போய் விட்டதோ என்றுதன் எண்ணத் தோன்றுகின்றது. 

இல்லையென்றால் பாம்பு இரத்தத்தை ருசி பார்த்த அவன், அதன் முழு உடலையும் ஊற வைத்துத் தயாரிக்கப்பட்ட 'பாம்பு வைன்'ஐ நாடி போவானா?

பாம்பு வைன் வியட்நாமில் உபயோகப்படுத்தப்படும் ஒருவிதமான மது வகை.

முழுப் பாம்பு உயிருடன் மது போத்தலினுள் அடைக்கப்படுகிறது. அந்தப் பாம்பின் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும். பாம்பின் விஷத்தன்மை மதுவில் உள்ள எத்தனாலினால் முறிக்கப்பட்டுவிடும்.

கிழக்கத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷப் பாம்பு வைன் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது. இதில் இரண்டு வகையான விஷப் பாம்பு வைன்கள் உள்ளன.

ஒன்று, உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது போத்தலினுள் விஷப்பாம்புகள் உயிருடன் அடைக்கப்பட்டு அதன் உடல் சாறாகப் பிழியப்பட்டு உடனடியாக அருந்துவது.

இரண்டு, மது போத்தலினுள் விஷப் பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டுப் பலமாதங்கள் கழித்துக் குடிப்பது.

"மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?" 







___ 

No comments:

Post a Comment