Saturday, September 4, 2010

மணப்பெண்ணை ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்த மணமகன்

ஆம்பூர் அருகே நரிக்குறவர் காலனியில் மணமகளை மணமகன் ரூ 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஆம்பூரை அடுத்த சோளூரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர் டாலர்மணி இவரது மகள் ரூபினி (வயது14) இவர் பாசிமணி விற்று வருகிறார்.

பள்ளிகொண்டா சந்தையில் ஊசி, பாசி மணி விற்ற போது அங்கு பாசிமணி விற்பனை செய்து வந்தராஜா மகன் திருமலைக்கும் (வயது15), பழக்கம் ஏறபட்டது.

இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் திருமலை ரூபினியை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக அவர் சோளூர் நரிக்குறவர் காலனிக்கு சென்று ரூபனியை பெண் கேட்டார். நரிக்குறவர் இனமுறைப்படி மணப்பெண்ணை மணமகன் ஏலம் எடுக்க வேண்டும் இதன்படி திருமலை ரூபனியை ரூ.30ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

பின்னர் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் நாளை நடக்கிறது. இதில்கலந்து கொள்ளும் உறவினர்களுக்கு தலா ரூ.100, மதுபானத்துடன் மணமகன் திருமலை விருந்து கொடுக்க வேண்டும்.

அதன்படி மணமகன் விருந்து அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மணமகன் பெற்றோர் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment