தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு, 85 தாய்மார்கள் இறக்க நேரிடுகிறது. இதில் பெருமளவு பிரசவத்துக்கு பின் ஏற்படும் இரத்தப் போக்கின் காரணமாக நிகழ்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில் பாத்பைன்டர் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் உயிர் காக்கும் ஆடை மற்றும் தொடர் கவனிப்பு வியூகம் பல தாய்மார்களின் உயிரை காப்பாற்றியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பாத்பைன்டர் தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 19 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. முதல்கட்டமாக சென்னை மற்றும் 10 மாவட்டங்களில் இந்த உயிர் காக்கும் ஆடை மற்றும் தொடர் கவனிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். |
Wednesday, January 26, 2011
பிரசவ காலத்தில் தாயின் உயிரிழப்பை தடுக்க ஆடை அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment