| இது பன்றிகளின் ஆடம்பரத் தீவு. பளிங்குபோன்ற தெளிவான நீரில் இவை தினசரி காலையில் நீந்துகின்றன. அதன் பிறகு தான் அவற்றின் அன்றாடக் கடமைகள் தொடங்குகின்றன. நீச்சல் முடிந்ததும் கடற்கரையில் காலாற நடக்கத் தவறுவதுமில்லை. பன்றிகளின் இந்த ஆடம்பரத் தீவு பற்றி சிறுவர்களுக்கான புதியப் புத்தகமான The secret of pig Island (பன்றிகளின் இரகசியத் தீவு) எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 52 வயதான ஜிம் அபனர்தி என்ற படப்பிடிப்பாளர் தான் இந்தப் புத்தகத்தில் பிரசுரமாகியுள்ள படங்களின் சொந்தக்காரர். பன்றிகளின் இந்தப் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாத மக்களே இல்லை என்கிறார் இந்தப் படப்பிடிப்பாளர். இது பன்றிகளுக்கான உன்னதமான ஒரு தீவு இங்கு பன்றிகள் மிகவும் உல்லாசமாகவும், இணக்கப்பாட்டுடனும் வாழுகின்றன. இங்குள்ள பன்றிகள் அற்புதமாக நீந்துகின்றன. குட்டிகள் கூட சளைக்காமல் நீண்ட நேரத்தை தண்ணீரில் செலவழிக்கின்றன. இந்தத் தீவு உத்தியோகபூர்வமாகவே பன்றிகள் தீவு என்றுதான் அழைக்கப்படுகின்றது என்று அவர் மேலும் கூறுகின்றார். இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் மாலுமிகள் தமது உணவுத் தேவைக்காக பன்றிகளை இந்தத் தீவுக்கு அறிமுகம் செய்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த மாலுமிகள் இங்கு திரும்பி வராததால், அது அப்படியே பன்றிகளுக்கான தனித் தீவாக மாறிவிட்டது. 46 வயதான ஜெனிபர் நொலான் எனபவர் தான் இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளைகளுக்கான கற்பனைக் கதைகளோடு கலந்து பன்றிகள் தீவின் புகைப்படத்தை இணைத்து மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். மனிதர்கள் வாழ ஒரேயொரு பூமி இருப்பதுபோல், அந்தப் பூமியில் பன்றிகள் வாழ உள்ள ஒரேயொரு தீவு இது தான் என்கிறார் அவர் |
Saturday, January 29, 2011
கொடுத்து வைத்த பன்றிகள்! ஆடம்பரத் தீவில் அமர்க்களம் (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment