Saturday, January 29, 2011

பட்டுப்போன்ற பாதம் வேண்டுமா? வெடிப்பு நீங்க சில ஆலோசனைகள்

 தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ:

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.

கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, தோல் மிருதுவாகும். முதல்நாள், பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டு உள்ளங்காலில் தேய்க்க வேண்டும். மறுநாள், தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.

தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.
 .

No comments:

Post a Comment