Monday, November 1, 2010

முதலையிடம் யானை மாட்டிக்கொண்டால்!



ஆபிரிக்க காட்டில் யானைக்குட்டி ஒன்று தண்ணீர் குடிக்கச் சென்றபோது, அந்த சதுப்பு நிலத்தில் மறைந்திருந்த முதலையிடம் குட்டி யானை மாடிக்கொண்ட காட்சியை, சுற்றுலாப் பயணி ஒருவர் பிரத்தியேகமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். குட்டி யானையின் தும்பிக் கைகளை முதலை மிக இறுக்கமாக கவ்விப்பிடித்ததால் அது மூச்சுத்திணறலில் தவித்தது. அதனைத் தொடர்ந்து அங்கு நின்ற சிலர் முதலயை திசைதிருப்ப முயன்றும் தோற்றுப்போயினர். அதுவோ பிடித்த பிடியை தளர்த்துவதாக இல்லை. குட்டியானை நீண்ட நேரமாகப் போராடியது.

அத்தோடு அங்கு நின்ற பல சுற்றுலாப் பயணிகள் ஒருவாறு முதலையை ஒருவாறு திசை திருப்பினர். இதனால் அது தனது வாயைத் திறக்க நேரிட்டதால் யானைக் குட்டி தப்பித்து ஓட ஆரம்பித்ததை நேரில் பார்த்த ஒருவர் ஆங்கில செய்திச்சேவை ஒன்றிக்கு தெரிவித்துள்ளார். வழமையாக முதலைகள் ஒருபோதும் யானையைக் குறிவைப்பது இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த முதலை யானையை உண்ண முனைந்தது அபூர்வமான விடயமாகவே கருதப்படுகிறது.

No comments:

Post a Comment