Monday, November 1, 2010

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் (வீடியோ இணைப்பு)


ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டும் ' என்ற சட்டதின் காரணமாக 8 மாத கர்ப்பணிப் பெண் ஒருவரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று அவருக்கு வயிற்றில் இருந்த குழந்தையை ஊசி ஏற்றிக் கொன்ற கொடூர சம்பவமொன்று சீனாவில் இடம் பெற்றுள்ளது.

தென் சீனக் கரையோரப் பகுதியில் சியாஹோ அல் யிங் என்ற பெண்ணின் வீட்டிற்கு திடீரென நுழைந்த 12 அரச அதிகாரிகள் அந்தப் பெண்ணை மோசமாக தாக்கியுள்ளனர்.

பிறகு வைதியர்கள் 36 வயதான இப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இறப்பதற்கான ஊசியை செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டிடத்தொழிலாளியான அப் பெண்ணின் கணவர் தனது மனைவியின் வயிற்றில் அதிகாரிகள் மோசமாக உதைத்ததாகவும் பின்னர் சுமார் 3 நாட்கள் வரை தடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு ஊசியை செலுத்தி தனது குழந்தையைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் உள்ள அப்பெண் கடும் தாக்குதலுக்க்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் "இறந்த என் குழந்தை இன்னும் வயிற்றில் இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.

மனதை உருக்கும் இச்சம்பவம் மிகக் கொடூரம் எனினும் இது போன்ற விடயங்கள் சீனாவில் சர்வசாதாரணம்.

சனத்தொகையைக் கட்டுப்படுத்த சீனாவில் வருடாந்தம் சுமார் 13 மில்லியன் கருக்கலைப்புக்கள் இடம் பெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment