Saturday, October 16, 2010

ஒரே தினத்தில் 3 குழந்தைகள் பிறப்பு! : வருடத்தில் மட்டுமே மாற்றம்!

  ஒரு குடும்பத்தில் அனைத்து குழந்தைகளும் ஒரே தினத்தில் பிறந்துவிட்டால், அந்தப் பெற்றோரின் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. அத்தினத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள். 

அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரே நாளில் நடத்து முடித்து விடலாம். 

இப்படியான அதிஷ்டம், ஒரே பிரசவத்தில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களுக்கு இருக்கலாம்.

வெவ்வேறு வருடங்களில், அதே மாதத்தில், அதே தினத்தில் குழந்தைகள் பிறக்கும் அதிஷ்டம் 48 மில்லியன் பேரில் ஒருவருக்கே கிடைக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகைய அதிஷ்டத்தினை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதோ, இதனை நிரூபிக்கின்றார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெனிபர் - ட்ரிஸ் அலாலி தம்பதியினர். 

இவர்களின் மூன்று குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளன என்றால், இவர்களும் அதிஷ்டசாலியான பெற்றோர் தானே? 

அவர்களின் மூன்றாவது குழந்தையான சமி இம்மாதம் 7 ஆம் திகதி பிறந்துள்ளான். இதே தினத்திலேயே இக்குழந்தையின் அக்காவான நஜீலா ( வயது 5 ) , அண்ணன் அடம் (வயது 3 ) ஆகியோரும் பிறந்துள்ளனர்.

இக்குழந்தைகளின் தாயார் ஒரு தாதியாவார். 

"இது அதிஸ்டமாந்து. இதனை நாங்கள் திட்டமிடவில்லை. இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விடயம்" என குழந்தைகளின் தாயார் தெரிவிக்கின்றார். 

இதனை யாரும் நம்பவில்லையெனவும் தாம் பிறப்பத்தாட்சிப் பத்திரங்களைக் காட்டிய பின்னரே நம்பியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவர்களின் மூத்தகுழந்தை 2005 ஆம் ஆண்டு 7 ஆம் திகதியும் , 2 வருடங்கள் கழித்து இரண்டாவது மகனும் ஒரே வைத்தியசாலையிலேயெ பிறந்துள்ளனர்.

இது தொடர்பாக தான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனைப் பெரும் பாக்கியமாகவே கருதுவதாகவும் குழந்தைகளின் தந்தையான அலி தெரிவிக்கின்றார். 

உண்மையிலேயே ஜெனிபர் - அலாலி தம்பதியர் பெரும் அதிஷ்டசாலிகள் தான். _

No comments:

Post a Comment