இசைக்கு மயக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு இளைஞர் இசையுடன் ஓர் ஆச்சரியத்தையும் தந்து இன்ப அதிர்ச்சி அளிக்கிறார்.
சீன தொலைக்காட்சியில் 'China's Got Talent' எனும் நிகழ்சியில் கலந்து கொண்ட ஒர் இளைஞர் இரு கைகளும் அற்ற நிலையில் தனது கால் விரல்களால் பியானோ வாசித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளார்.
23 வயதுடைய லியு என்னும் இளைஞர் இச் சாதனையை நிகழ்த்தியவராவார்.
இவரின் 10வது வயதில் ஏற்பட்ட விபத்தொன்றின் போது தனது இரு கைகளையும் இழந்துள்ளார். பியானோ கலைஞர்ராகும் ஆர்வம் கொண்ட லியுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இருந்தும் தனது விடா முயற்சியின் மூலம் சுயமாகவே கால் விரல்களால் பியானோ வாசிக்க பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.
இவர் தனது 18வது வயதில் தனது இலக்கை எட்டியுள்ளார்.
தன்னம்பிக்கையும் சுய முயற்சிக்கும் இவர் ஒர் உதாரணமல்லவா? சோம்பெறிகளாக காலத்தை கடந்தும் இளைஞர்கள், இவரை போல் சாதிக்க துணிய வேண்டும் என்பதே எமது ஆசையும் கூட
உங்களாலும் இவ்வாறு சாதனை புரிந்த வீடியோ காட்சிகள் இருப்பின் எமக்கு அனுப்பி வையுங்கள். அதனையும் பிரசுரிப்போம்.
இவரின் திறமையினை நீங்களும் காண.....
No comments:
Post a Comment