Thursday, October 7, 2010

கோரோ கிராமத்திற்கு 'பீப்லி லைவ்' சினிமா பாணியில் படையெடுக்கும் ஊடகங்கள்!


இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில், தொலைதூர கிராமம் ஒன்றில் புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோரோ என்று அழைக்கப்படும் இந்த மொழியை அக்கிராம மக்கள் மட்டுமே பேசுகின்றனர்.
நேஷனல் ஜியாகிரபிக் தொலைக்காட்சி நிருபர்கள் அழிந்து வரும் மொழிகள் குறித்து அவர்கள் தயாரித்து வரும் டாக்குமெண்டரி ஒன்றிற்காக, ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது,  அருணாச்சல பிரதேசத்தின் கிராமப்பகுதிகளுக்கு, வேறு இரண்டு மொழிகளை தேடிச்சென்றனர்.
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக பானா எனும் கிராமத்தின் அருகே கோரோ மொழி பேசும் இம்மக்களை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இதுவரை பதிவு செய்யப்படாததும், முற்றிலும் மாறுபட்டதுமாக இருந்த இந்த கோரோ மொழியை இப்போது பேசுபவர்கள் 800 முதல், 1200 பேர் வரையே இருக்கின்றனர்.
இதோ அவர்கள் மொழியில் சில சொற்களுக்கான குரல் பதிவு (நன்றி - NPR, Courtesy of K. David Harrison)
உலகில் தற்போது அறியப்பட்டுள்ள 6909 மொழிகளில் பாதியளவு அழிந்து போக கூடிய நிலையில் உள்ளது. அந்த வகையில் கோரோ மொழியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. ஆனால் இந்த கோரோ மொழியுன் நெருங்கிய தொடர்புடைய வேறு எந்த மொழியும் இந்த மொழி குடும்பத்தில் இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலகில் இதுவரை இணங்காணப்பட்டுள்ள அரிய வகை மொழிகளில் 6,909 வது இடத்தை பிடித்திருக்கிறது கோரோ மொழி. கலாச்சார மாற்றங்கள், சமூக மாற்றங்கள், அரசியல் ரீதியான மாற்றங்கள் என்பவற்றால் இவை அனைத்துமே அழியும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக நேஷனல் ஜியோகிராபி சேனல் சுட்டிக்காட்டுகிறது.
டாக்குமெண்டரி இன்னமும் முழுமையாக வடிவமைக்கப்படாத போதும், பயனுள்ள விடயம் என்ற ரீதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5ம் திகதி இச்செய்தியை நேஷனல் ஜியோகிரபி சேனல் தனது இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டது. ஆனால் இது தொடர்பான 650 ற்கும் மேற்பட்ட செய்திகள் இன்று வரை புதிதாக அப்டேட் செய்யப்பட்டு கூகிளில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அண்மையில் வெளிவந்த 'பீப்லி லைவ்' திரைப்பட பாணியில், இக்கிராமத்திற்கு சில இந்திய ஊடகங்கள் படையெடுக்க தொடங்கியுள்ளதையும், இந்திய பிரபல செய்தி இணையத்தளங்களின் மிகைப்படுத்தப்படும் செய்திகளில் இருந்து காண முடிகிறது.

No comments:

Post a Comment