Wednesday, September 22, 2010

சுவிஸ் வயோதிபர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

சுவிட்சர்லாந்தில் வயோதிபர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போன்றே சுவிட்சர்லாந்திலும் வயோதிபர்கள் கல்வியைத் தொடர்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகளை மூன்றாம் வயதுக்கான பல்கலைக்கழம் (யூ.3.ஏ) என்ற நிறுவனம் வழங்கி வருகின்றது.
60 வயதுக்கும் அதிகமான அநேகமானவர்கள் கற்கை நெறிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வயோதிபர்களுக்கு கல்வி புகட்டும் ஒன்பது முக்கிய நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகக் குறைந்தளவு கட்டணத்திற்கு கற்கை நெறிகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மொழி, வரலாறு, மருத்துவம், கல்வி, சங்கீதம் என பல்வேறு துறைகளில் கற்கை நெறிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment