| கார் உள்ளிட்ட வாகனங்கள் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு பதிலாக உயிரி எரிபொருள் மூலம் இவற்றைச் செலுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எடின்பர்க் நேபியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மார்டின் டேங்னே தலைமையிலான குழுவினர் கடந்த 2 ஆண்டுகளாக இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். முடிவில் விஸ்கி தயாரிக்க பயன்படும் பொருட்களில் இருந்து இவர்கள் உயிரி எரிபொருள் தயாரித்துள்ளனர். இந்த உயிரி எரிபொருள் மூலம் கார் ஓட்டி இவர்கள் சாதனையும் படைத்துள்ளனர். எனவே இந்த எரிபொருளுக்கான 'காப்புரிமை' தங்களுக்கு வேண்டும் என இவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த எரிபொருள் தாராளமாக விற்பனைக்கு வரும் பட்சத்தில் பெற்றோல் நிலையங்களுக்குச் செல்லும் வாகனங்கள், விஸ்கி எரிபொருளுக்காக இனி மதுபான கடைகளுக்கு படையெடுக்குமோ, என்னவோ? |
Wednesday, August 25, 2010
வாகனம் செலுத்த பெற்றோலுக்குப் பதில் விஸ்கி எரிபொருள்:ஆய்வில் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment