Thursday, December 30, 2010

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை (பட இணைப்பு)

  இந்திய ஆசிரமத்தில் சுருதி பாண்டே என்ற 6 வயதான சிறுமி உலகிலேயே வயது குறைந்த யோகா ஆசிரியையாகக் கருதப்படுகின்றார்.

இவர் தற்போது வட இந்தியாவிலுள்ள ஆசிரமமொன்றில் யோகா ஆசிரியையாக உள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இவரது குரு ஹரி சேட்டன் (வயது 67), சுருதி 4 வயதாக இருக்கும் போதே தன்னிடம் யோகா கற்பதற்காக சேர்ந்ததாகவும் அவளிடம் இருந்த சிறப்புத்திறமையை இனங்கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சிறுமி காலை 5.30 மணிக்கே வகுப்பை ஆரம்பித்து விடுவார். 

இது குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி, 

தனது வழிகாட்டல்களை ஏனையோர் பின்பற்றுவது தன்னை ஆசிரியை போல் உணரச் செய்வதாகவும் தனது சகோதரன் யோகா கலையில் ஈடுபட்டதனாலேயே தனக்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார். 

தற்போது 11 வயதான இவரது சகோதரர் ஹார்ஸ் குமார், 5 வயதிலேயே 84 யோக நிலைகளைக் கற்றமையால் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment