இனிமேல் ஆடை தான் உடலை மறைக்க உடுத்த வேண்டும் என்றில்லை. ஸ்ப்ரே அடித்தால் போதும் என்கிறது புதிய உலகம்!
திரவத்தன்மை வாய்ந்த, கொட்டொன் ஸ்ப்ரேவை கொண்டு உடல் வாகுக்கு ஏற்ப புதிய வடிவிலான மெல்லிய ஆடை வகைகள் தயாரிக்கும் நுட்பத்தை அறிமுகமாக்கியிருக்கிறது ஸ்பெயின்.
திரவத்தன்மை வாய்ந்த, கொட்டொன் ஸ்ப்ரேவை கொண்டு உடல் வாகுக்கு ஏற்ப புதிய வடிவிலான மெல்லிய ஆடை வகைகள் தயாரிக்கும் நுட்பத்தை அறிமுகமாக்கியிருக்கிறது ஸ்பெயின்.
ஸ்பானிய ஆடை வடிவமைப்பாளர் டாக்டர் மெனேல் டொரோஸ் இதை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆடையேதும் இன்றி வெறும் உடம்பில் இத்திரவத்தன்மை கூடிய ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது. 15 நிமிடத்தில் இலாஸ்ட்டிக் தன்மை கூடியவகையில் இவ் ஆடை உருவாகிவிடும்.
லண்டனில் உள்ல புகழ்பெற்ற இம்பெரியல் ஆடைக்கல்லூரியில் இத்தொழில் நுட்பம் மூலம் சில மாடல்களுக்கு ஆடை உருவாக்கி காட்டுகிறார் இவர்.
நவீன யுகத்தின் ஸ்டைலிஷ்ஷான, மிகப்பொருத்தமான ஆடையாக இது உருப்பெறும் என இவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சந்தைக்கு வந்தால் விலையும் அதிகமில்லை என்கிறார்.
லண்டன் பேஷன் ஷோவில் விரைவில் காட்சிப்படுத்தவிருக்கிறது இந்த ஆடை! (இல்லை இல்லை ஸ்பிரே)
No comments:
Post a Comment