26 வயதான இவர் தனது எடை காரணமாகப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவந்தார். இந்நிலையில் இவ்வாண்டு இறுதிப் பகுதியில் எடை குறைப்பு சம்பந்தமாக இவருக்கு சத்திர சிகிச்சையொன்றுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குமுன் அவருக்கு வேறு ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இவருக்கு செல்லுலிடிஸ் எனப்படும் ஒருவகை சருமத் தொற்றுநோய் ஏற்பட்டது.
இது படிப்படியாக அதிகரித்து, நஞ்சாகி வயிற்றில் குடல்பகுதி மற்றும் சுவாசத் தொகுதி என்பனவற்றையும் பாதித்து விட்டது. இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் ரோயல் ஜுபிலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 20 தினங்களாக அங்கு தங்கியுள்ளார்.
சிகிச்சை முடிவடைந்து இப்போது தான் சற்றுத் தேறி வருகின்றார். இன்னமும் செயற்கை பிராணவாயு மூலம் தான் சிவாசிக்கின்றார். தொடர்ந்து மேலும் சில வாரங்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சருமப் பிரச்சினை காரணமாக இவரின் பிரதான பிரச்சினைக்கான திட்டமிட்ட சிகிச்சையை இப்போதைக்கு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவரின் உடல் பருமனானது நடமாட்டத்தை சிரமமாக்கும் ஊளைச்சதைப் பிரச்சினை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஜெக் கார்டே தனது உடல் பருமன் பிரச்சினை காரணமாக விரக்தியடைந்து காணப்படுகின்றார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இவ்வாறான 800 பேர் எடைகுறைப்பு சத்திர சிகிச்சைக்காகக் காத்திருப்பதாக அந்தத் துறைசார்ந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment