Saturday, January 22, 2011

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!


"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்" என்பது பழமொழி. அந்த நகைச்சுவை உணர்வானது, பெண்களை கர்ப்பம் தரிக்கச் செய்யும் அருமருந்தாகவும் உதவுகிறது. பெண்கள் கர்ப்பம் அடைய, சில கோமாளிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
சிரிப்பு என்பது நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகவே செயல்பட்டு வருகிறது. அதன் மூலம், பெண்களும் கர்ப்பம் தரிக்கின்றனர் என்பது ஆய்வியல் உண்மை.
நகைச்சுவை உணர்வினால் கர்ப்பம் அடையலாம் என்பது குறித்த ஆய்வினை, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
இக்குழுவினர், சோதனை குழாய் மூலம் குழந்தை பெறுவதற்கு, சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இவ்வாறாக, சிகிச்சை பெற்ற 219 பெண்கள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர்.
அறிவியல் ரீதியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு, மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. இதற்காக, நகைச்சுவை உணர்வு மிக்க கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அவர்கள், சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் நகைச்சுவை உணர்வுடன் பேசி, பெண்களின் மனதில் உள்ள அழுத்தங்களை காற்றில் பறக்கச் செய்தனர். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில், 36 சதவீதம் பெண்கள் கருத்தரித்தனர். கோமாளிகளின் நகைச்சுவையானது நல்ல பலனைத் தந்தது.
பொதுவாகவே, பெண்கள் இது போன்ற நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். மாறாக, சோதனை குழாய் முறையிலாவது, தாங்கள் கர்ப்பம் ஆக வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெண்கள் இருப்பதால், அவர்களிடையே மன அழுத்தமானது மேலோங்கி காணப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைத்து, அவர்களை அமைதி பெறச் செய்து மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதே கோமாளிகளின் பணி. இதற்காகவே தான் கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கோமாளிகளின் நகைச்சுவை உணர்வு தான், பெண்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களை கருத்தரிக்கச் செய்தது என்று, மருத்துவர் பிரைட்லர் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment