உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பு ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத்திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தனர். உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது, நமது மூளை அதிகமாக சிந்திக்கின்றது. அப்போது, ஏராளமான சக்தி செலவாகும். இருப்பினும், உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. இதன் காரணம் கண்டறிய மருத்துவர்கள் பல சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் என்பது தெளிவாக கண்டறியப்பட்டது. அதாவது, நாம் சிந்திக்கும் போது அதிக சக்தி செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால், அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். இதன் விளைவாக, உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது. இது குறித்து பலரிடம் மேற்கொண்ட ஆய்வின் படி, புத்தகங்களை படித்த பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது என்பது தெரிய வந்தது. மன அழுத்தம் ஏற்படுகின்ற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில் இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். உடல் பருமன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, இதுவே சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர். |
Saturday, January 22, 2011
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment