புதிய அம்சங்களுடன் கூடிய இஎன்-வி என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் காரை ஜெனரல் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.ஆனால் குறைந்த தொலைவு மட்டுமே செல்ல முடியும் என்பதால் அவை மக்கள் இடத்தில் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பார்க்கிங் தொல்லைக்கு பதிளலிக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் காரை ஜெனரல் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த விழாவில் இந்நிறுவனத்தின் இயக்குனர் கூறியதாவது: இஎன்-வி காரானது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும்,குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த காரை ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 25 கி.மீ வரை பயணம் செய்யலாம். இரண்டு போ் அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த காரை அதிகபட்சம் 25 கி.மீ வேகத்தில் செல்லலாம்.இந்த காரை பார்க்கிங் செய்வதற்கு குறைந்த இட வசதியே போதுமானது.மேலும் அடுத்த முயற்சியாக எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இந்த காரின் வர்த்தக ரீதியான விற்பனையை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. |
Saturday, January 22, 2011
மின்சாரத்தில் இயங்கும் புதிய மினி கார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment