|
சிலி நாட்டில் கோபியாகோ அருகேயுள்ள சான்ஜோஸ் என்ற இடத்தில் சுரங்கங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு சுரங்கம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி இடிந்து சேதமடைந்தது.
எனவே, அங்கு பணி யாற்றி கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சுரங்கத் திற்குள் சிக்கி கொண்டனர். எனவே அவர்களை மீட் கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சுரங்கம் பூமிக்கு அடியில் சுமார் ? மைல் ஆழத்தில் உள்ளது. எனவே, சுரங்கத்தின் மேல்பகுதியில் உள்ள பாறைகளின் மீது டிரில்லிங் எந்திரத்தின் மூலம் துளை போட்டு அதன் வழியாக வீடியோ கேமராவை இறக்கி படம் பிடித்து பார்க்கப்பட்டது
அப்போது, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் இன்னும் 4 மாத காலம் உயி ருடன் வாழ முடியும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளையின் வழியாக மிகச சிறிய அளவிலான திரை அனுப்பப் பட்டது. மேலும் “பைப் ரோப்டிக்” கேபிள் வழி யாக உக்ரைன் நாட்டுக் கும் சிலி நாட்டுக்கும் இடையே நடந்த கால் பந்து போட்டி வெளியே இருந்து சுரங்கத்துக்குள் ஒளிபரப்பப் பட்டது.
அதை உள்ளே சிக்கியிருக் கும் தொழிலாளர்கள் பார்த்து ரசித்தனர். இதே தொழில்நுட்பத்தை பயன் படுத்தி தொழிலாளர்களின் உறவினர்கள் அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இது தங்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக கூறினர். | |
|
No comments:
Post a Comment