Sunday, September 12, 2010

58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை (காணொளி இணைப்பு)

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 58 மாடி கட்டிடத்தின் கண்ணாடி கட்டமைப்பில் எந்தவொரு பாதுகாப்புமின்றி ஏறி டான் குட்வின் (Dan Goodwin) என்ற 54 வயது நபர் சாதனை படைத்துள்ளார்.

கண்ணாடியில் கால் வைத்து ஏறுவதற்கான உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி மிலேனியம் கோபுர கட்டிடத்தில் டான் குட்வின் ஏறியபோது அவரைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.மேற்படி மாடிக் கட்டிடத்தில் 3 மணி நேரத்தில் ஏறிய அவர், காத்திருந்த பொலிஸாரிடம் தானாக முன்வந்து சரணடைந்தார்.

இவர் ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு சியர்ஸ் கோபுரத்திலும் (Chicago’s Sears Tower) 1983 ஆம் ஆண்டு உலக வர்த்தக கட்டிடத்திலும் ஏறியமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கவும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவுமே இவ்வாறு உயர்ந்த கட்டிடங்களில் ஏறும் நடவடிக்கையில் இறங்கியதாக டான் குட்வின் தெவித்தார்.

2001 ஆம் ஆண்டு டான் குட்வினுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment