Sunday, September 12, 2010

09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!

அதிஷ்டமான நாள் என தாய்வான் மக்களால் கருதப்படும் இன்றைய தினம் அந்நாட்டில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாய்ப்பே நகரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
சீன ஜோதிடப்படி ஒன்பது என்பது ராசியான எண். இந்த எண்ணில் ஏதாவது நற்காரியம் செய்யும்போது நீண்ட ஆயுளுடன் நல்ல விளைவுகள் ஏற்படுவதாக மக்கள் நம்புகின்றனர். அதனால் 09ஆம் மாதம் 09ஆம் திகதி காலை 09 மணி 09 நிமிடத்தில் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணத்தின் பின்னர் குதூகலமாக ஆடிப்பாடிய புதிய ஜோடிகள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். தாய்வான் தொலைக்காட்சி நிறுவனங்கள் சில இந்நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment