ஆம், பெங்களூரைச் சேர்ந்த 92 வயதான நரசம்மா, 78 வருடங்களாகத் தண்ணீர் அருந்தாமல் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
14 வயதில் மயக்கமடைந்த இவருக்கு, தொண்டை வறண்டது. அச்சமயத்தில் இவர் ஒரு நாளில் 10 லீட்டர் நீர் அருந்த வேண்டியிருந்தது. இவ்வாறு நீர் அருந்தியதும் இவரது உடல் ஊதி கை, கால்கள் வீங்கத் தொடங்கிவிட்டன. நடக்கவே முடியாமல் அவதிப்பட்டார் இவர்.
இதனால் இவரது பெற்றோர் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். வைத்தியரோ, உடலில் அதிகளவில் நீர் இருப்பதாகவும், 48 நாட்கள் நீராவிச் சிகிச்சை மூலம் நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டனர்.
வைத்தியரின் சிகிச்சை மூலம் இவருக்குப் பயனும் கிடைத்தது. இந்தச் சம்பவத்தையடுத்து இவர் நீர் அருந்துவதையே நிறுத்திவிட்டார்.
"நீர் அருந்தாமல் எவ்வாறு வாழ்கின்றீர்கள்?" என்று வினாவியதற்கு,
"நான் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே சாப்பிடுகிறேன். அரிசிச் சோறு, உலர்ந்த பழங்கள் தான் சாப்பிடுவேன். தினமும் இரண்டு கோப்பை கோப்பி அருந்துவேன்.
கோடை காலத்தில், உடலின் நீர்த்தன்மையைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்க, ஈர ஆடைகளையே அணிவேன். மற்றும் தினந்தோறும் 5 மணித்தியாலங்கள் தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபடுவேன். ஒரு மாதத்தில் 10 நாட்கள் உபவாசம் இருப்பேன்" எனத் தெரிவித்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு, இவர் 36 நாட்கள் வட - தென் இந்திய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது இவர் எதையுமே உண்ணவில்லையாம். 3 கோப்பை கோப்பி மட்டும் அருந்தினாராம்.
நீர், மனிதனது உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது.
அந்நீரையே அருந்தாமல் இந்தப் பாட்டி 78 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாரே?
அப்படியானால் மேற்கூறிய கூற்று பொய்தானோ? இதன் உண்மை நிலையை ஆராய, பாட்டியின் உடலைப் பரிசோதனை செய்து பார்க்கத்தான் வேண்டுமென டாக்டர்கள் விடாப்பிடியாக இருக்கின்றார்கள்.
இதற்குப் பாட்டி சம்மதிக்க வேண்டுமே...? சம்மதிப்பாரா...? ___
No comments:
Post a Comment